Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கொட்டுக்காளி படத்துக்கு தொண்டை கட்டியபடி பேச சூரி எடுத்த ரிஸ்க்: நடிகை, இயக்குனர் வியப்பு

பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்று திரைக்கு வந்து வெற்றி பெற்ற “கூழாங்கல்”  படத்தை இயக்கியவர்  பி எஸ். வினோத் ராஜ். இவர் அடுத்து இயக்கும் புதிய படம் கொட்டுக்காளி.

இப்படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க , மலையாள நடிகையும் பிரபாஸின் கல்கி படத்தில் நடித்தவருமான அன்னா பென்  கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன்  பல்வேறு புது முகங்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நடித்தது பற்றி  நடிகர் சூரி கூறியதாவது:

கொட்டுக்காளி  பட கதையை   இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் என்னிடம் கூறினார். அதை கேட்டவுடன் நம்மூர் பக்கம் பார்த்த சம்பவமாக இருந்ததால் உடனடி யாக அதில் நடிக்க வேண்டும்,  இந்த விஷயத்தை மக்களுக்கு தெரிவிக்க  எப்படியாவது திரைக்கு கொண்டு வர  வேண்டும் என்று முடிவு செய்தேன் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். கொட்டுக்காளி என்ற பெயரை நான் பலமுறை கேள்விப்பட்டிருக். கிறேன். இப்படத்திற்கு அந்த டைட்டில் மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது.

இதில் கிராமத்து இளைஞனாக நான் நடித்திருக்கிறேன். இந்த பாத்திரத்திற்காக நான்  சில பயிற்சிகளை  செய்ய வேண்டி இருந்தது. . அதாவது தொண்டை கட்டிக்கொண்டு  கம்மியது போன்ற குரலில் படம் முழுவதும் பேச வேண்டிய நிலை இருந்தது அதற்கு காரணம் அந்த கதாபாத்திரத்தை இயக்குனர் அப்படி வடிவமைத்து இருந்தார். ஒரு வசனத்தை தொண்டை கம்மியது போல் பேசலாம் ஆனால் படம் முழுவதும் அப்படி பேச வேண்டுமென்றால்   அது எப்படி நடக்கும். அப்படியே முயற்சித்து பேசினாலும் இடையிடையே ஒரிஜினல் குரலும் வந்துவிடும். படப்பிடிப்பு  லைவ் சவுண்டில் படமாக்கப்பட்டது.  அப்படி பேசும்போது அதில் தவறு நிகழ்ந்தால் மீண்டும் காட்சியை  படமாக்க  வேண்டிய சூழல ஏற்படும்.  இதனால் சக நடிகர்களுக்கு தொல்லையாக இருக்கும். இதற்கு என்ன செய்வது என்று யோசித்தேன்.

எனது டாக்டரிடம் தொண்டை கட்டியது போல் பேச வேண்டும் அதற்கு என்ன வைத்தியம் என்று கேட்ட போது அவர் என்னை முதலில் திட்டி விட்டார்.

டாக்டர் என்றாலே நோயை குணப்படுத்துவதுதான் தொழில்  நீங்கள் நோயை வரவழைக்க சொல்வது எப்படி நியாயமாகும் அது என்னால் முடியாது என்று கூறிவிட்டார்.. அதன் பிறகு நான் எந்த சூழ்நிலையில் இருக்கிறேன்,  கொட்டுக்ககாளி படத்தில் எனது கதாபாத்திரம் என்ன என்பது பற்றி அவரிடம் கூறியபோது இதற்கு மருந்து மாத்திரை எல்லாம் தேவையில்லை நான் சொல்லும் சில காய்கறி, பழங்களை மட்டும் சாப்பிடுங்கள்.  20 நாட்களுக்கு தொண்டை கட்டியது போல் இருக்கும் பின்னர்  சரியாகிவிடும் என்றார். அவர் சொன்னபடி நான் அந்த இயற்கை உணவை எடுத்துக் கொண்டேன் அதன் பிறகு தொண்டை கட்டியது போல் என்னால் பேச முடிந்தது.  படம் முழுவதும் அப்படியே பேசி நடித்தேன். இந்த விஷயம் இயக்குநருக்கு கூட தெரியாது.

இப்படத்தில் கதாநாயகியாக அன்னபென்  நடித்திருக்கிறார். இயக்குனர் என்ன விரும்பினாரோ அதை சிறப்பாக செய்து கொடுத்தி ருக்கிறார் அவர் சிறந்த நடிகை என்பதை ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார்.  மலையாளத்தில் அவர் நடிப்பை பார்த்து நான் அசந்திருக்கிறேன்

இப்படத்தில் நடித்த மற்ற கலைஞர்களும் தங்களது நடிப்பை எதார்த்தமாக வெளியிட்டு உள்ளனர்.

விடுதலை,  கருடன் படத்திற்கு பிறகு எனக்கு ஆக்சன் ஹீரோ இமேஜ் வந்துவிட்டதாக கூறுகி றார்கள். ஆனால் நான் அப்படி பார்க்கவில்லை.. நல்ல கதை களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால்தான் விடுதலைக்கு பிறகும் கொட்டுக் காளி படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கி றேன். கருடன்,  விடுதலை போல் இந்த படத்தில் என் கதாபாத்திரத் தை எதிர்பார்க்க வேண்டாம் இது முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும்.

இப்படம் சர்வதேச அளவில் விருதுகள் வென்று வந்திருக்கி றது இன்னும் பல விருதுகள் வெல்லும் வாய்ப்பு உள்ளது அது எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கொட்டுக்ககாளி படத்தை எனது நண்பர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். அவரது தயாரிப்பில் நான் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. இப்படத்தை அவர் மூன்று முறை பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்து என்னை பாராட்டினார்.

இப்படம் ரசிகர்களுக்கும் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு நடிகர் சூரி கூறினார்.

கொட்டுக்காளி படத்திற்காக சூரி தொண்டை கம்மியதுபோல் பேச இயற்கை உணவு எடுத்துக் கொண்டு தொண்டைக்கட்டச் செய்து கம்மிய குரலில் பேசியதாக கூறிய தகவலை கேட்டு அருகில் இருந்த பட இயக்குனர் வினோத் ராஜ், பட கதாநாயகி அன்னா பென் இருவரும் வியப்படைந்தனர். கதாபாத்திரத்திற்காக சூரி ரிஸ்க் எடுத்து  இப்படி ஒரு செயலை செய்ததற்காக அவருக்கு இருவரும் உடனடியாக கைகுலுக்கி பாராட்டு தெரிவித் தார்கள்.

நடிகை அன்னா பென் கூறும் போது,” கல்கி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதுவரை இப்படி ஒரு கதாபாத் திரத்தை நான் ஏற்று நடித்த தில்லை கலாச்சாரத்துடன் முற்றிலும் வித்தியாசமான ஒரு கதை அமைப்பாக இருந்தது. அதனால் உடனடியாக இந்த கதாபாத் திரத்தில் நடிக்க முடிவு செய்து விட்டேன். இப்படத்தில் எனக்கு அதிக வசனம் கிடையாது. எல்லா நடிப்பையும் முகபாவனையில் கண் அசைவில் உடல் அசைவில் தான் வெளிப்படுத்த வேண்டும். இது எனக்கு இன்னும் சவாலாக இருந்தது. அந்த சவாலை நான் விரும்பி ஏற்றுக் கண்டு நடித்திருக் கிறேன். இயக்குனர் என்ன விரும்பினாரோ அதை நான் செய்து முடித்து இருக்கிறேன் என்று நம்புகிறேன் இப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்த்தி கேயன் என்னை அழைத்து வெகுவாக பாராட்டினார்.

இப்படம் வெளிநாடுகளில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றிருக்கிறது. படம் திரையிட்ட இரண்டு நாடுகளுக்கு நான் சென்று இருந்தேன் அங்கு படத்தைப் பார்த்த பலரும் என்னையும் இயக்குனரையும் பாராட்டினார்கள். கொட்டுக்காளி படம் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தை தரும்.

இவ்வாறு நடிகை அன்னா பெண் கூறினார்.

 

Related posts

தமிழகத்தில் 71.79சதவீதம் வாக்கு பதிவு

Jai Chandran

Director Mysskin’s Pisasu2 First Single UchanthalaRegaiyile –

Jai Chandran

“Pookie” Launched with a Grand Pooja Ceremony

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend