Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழகத்தில் 71.79சதவீதம் வாக்கு பதிவு

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது எடப்பாடி பழனிசாமி முதலைவராக இருக்கிறார் கடந்த 10ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடந்தது. 2வது ஐந்து ஆண்டு ஆட்சி அமைந்தபோது ஒரு வருடம் ஆட்சி செய்த நிலையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலம் பாதித்து காலமானார். அவருக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி கடந்த 4ஆண்டு காலமாக ஆட்சி நடத்தி வந்தார். சட்டமன்ற ஆயுட்காலம் முடிவதையடுத்து சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்கான தேர்தல் இன்று ஏப்ரல் 6ம் தேதி நடந்தது. காலை 7மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் வாக்கு பதிவு நடந்தது . காலை முதலே மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.
வாக்கு பதிவு நடந்தபோது சில வாக்குச்சாவடிகளில் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அங்கு சிறிது நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் மாற்று எந்திரங்கள் மூலம் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடந்தது.
மாலை 6மணிமுதல் 7மணிவரை ஒருமணி நேரம் கொரோனா பதித்தவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மாலை 7 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
பின்னர் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
மாலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி அளித்தபோது தமிழத்தில் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது
மொத்தமாக சுமார் 71. 79 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. அதிகபட்ச மாக கள்ளக்குறிச்சியில்
78 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது.
சென்னையில்தான் குறைந்த பட்சமாக 59.40வாக்குப்பதிவு நடந்துள்ளது. உண்மை நிலவரம் நள்ளிரவில் தெரியவரும்.
71.79

Related posts

சிரஞ்சீவி நடிக்கும்.மெகா பேண்டசி படம் விஸ்வம்பரா

Jai Chandran

Manoj Beedha directorial Santhanam starter “Agent Kannayiram”

Jai Chandran

ரஜினியின் 4 தெய்வங்கள், கமலின் வழிகாட்டி..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend