Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சூரரைப் போற்று 26ம் தேதி ட்ரெய்லர் ரிலீஸ்.. படத்துக்கு என் ஒ சி கிடைத்தது

சூர்யாவின் சூரரைப்போற்று அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது. ஆனால் சில் என் ஒ சி (மறுப்பில்லா சான்று) கிடைக்கவில்லை என்று ரிலீஸ் தள்ளிவைப்பதாக சூர்யா அறிவித்தார். அதில்.’’சூரரைப்போற்று’ படம் தொடங்கிய போதே இது ஒரு சவாலான முயற்சி என்று அதை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியாக நாங்கள் உணர்ந் தோம். இதற்கான படப்பிடிப் புத் தளங்கள் இதுவரை காணா தவை. பணிபுரிந்த புதிய புதிய படப்பிடிப்பு இடங்கள், சந்தித்த மனிதர்கள், சந்தித்த வெவ்வேறு மொழியினர், பணியாற்றிய திறமைசாலிகள் என அனைத்தும் மறக்க முடியாதவை. அவை வித்தியா சமானவை மட்டுமல்ல குறிப் பிடத்தக்கதாகவும் இருந்தவை.


‘மாறா’ என்ற அந்த உலகத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக இருந்த
அந்த பிரம்மாண்ட அனுபவத் தை வார்த்தைகளால் விளக்கி விட முடியாது. படத்தில் விமானப்படை சார்ந்த காட்சிகள் வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் அது சம்பந்தமாக ஏராளமான நடைமுறைகளும் அனுமதிகளும் பெறவேண்டி யிருந்தது. இப்படம் தேசிய பாதுகாப்பு பற்றி பேசுவதால் அது சம்பந்தமாக இந்திய விமானப்படையுடன் நாங்கள் தொடர்புகொண்டு அணுகி அவர்களது ஒத்துழைப்பையும் பெற வேண்டி இருந்தது.
படம் வெளியிடுவதற்கு முன் அவர்களிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டி இருப்பதால் பட வெளியீடு சற்றுத் தாமதம் ஆகிறது.இது வழக்கமான நடைமுறைதான் வேறொன்றுமில்லை. கவலை வேண்டாம்.
‘சூரரைப் போற்று ‘ படம் என் இதயத்திற்கு நெருக்கமான படம். தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்த கதை இது. துரதிஷ்டவசமாக சிறு தாமதம் ஆகிறது. படம் தாமதம் என்பது எனக்கும் சிறு வலி ஏற்படுத்திடும் விஷயம் தான் .ஏனென்றால் அவ்வளவு எதிர்பார்ப்புடன் நீங்கள் இருக் கிறீர்கள். இந்த தாமதம் எதிர் பார்ப்பைக் கூட்டும் ஒரு அம்சமாக நாம் நேர்நிலையாக எடுத்துக் கொள்வோம்.
இந்த சின்ன இடைவெளியை மாறாவின் உலகத்தில் நீங்கள் பிரவேசிக்க ஒரு முன்தயாரிப்பு நேரமாக எடுத்துக்கொள் ளலாம். இப்படி பாசிட்டிவாக எடுத்துக் கொள்வோம்” என்றார்.
இநிலையில் எதிர்பார்த்திருந்த என் ஒ சி சான்று கிடைத்துவிட்டதாக தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் அறிவித்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சூர்யா நன்றி தெரிவித்தார்.

மேலும் வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு சூரரைப்போற்று ட்ரெய்லர் வெளியாகிறது என்று இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாய சாகச உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ‘கார்த்திகேயா 2’

Jai Chandran

போலீஸ் தாக்கி வியாபாரி முருகேசன் மரணம்: சரத்குமார் அறிக்கை..

Jai Chandran

நடிகர் மோகனுடன் ஹாரா த்யாரிப்பாளர், இயக்குனர் சந்திப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend