ராதே ஷ்யாம் அறிவிக்கப் பட்ட நாள் முதலே தெலுங்கு சினிமாத் துறையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் பூஜா, பிரபாஸ் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. படத்தில் பிரபாஸின் புத்துணர்வு தரும் தோற்றம் ரசிகர்களை சுண்டி இழுத்து படத்தின் மீதான எதிர்பார்ப் பைக் கூட்டியுள்ளது.
ஏற்கனவே ரசிகர்கள் எதிர்பார்ப்பைத் தூண்டி யிருந்த நிலையில், இன்று பிரபாஸின் பிறந்தநாள் என்பதால் அதை மேலும் இனிமையானதாக்கும் வகையில் படக்குழு படத்தின் மோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளது.
அழகியல் ததும்பும் அடர்ந்த வனத்தின் ஊடே செல்லும் ரயில் பாதையில் சீறிப் பாயும் ரயிலை காட்சிப்ப டுத்தி அந்த மோஷன் வீடியோ தொடங்குகிறது. அப்படியே விரியும் காட்சிகள் அந்த ரயிலின் வெவ்வேறு பெட்டியில் பயணிக்கும் விக்ரமாதித்யா, பிரேரனாவின் மீது படர்கிறது. இருவரும் வெவ்வேறு கலாச்சாரத்தைச் சார்ந்தவர்கள். வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த வர்கள். விகர்மாதித்யா, பிரேரனாவின் அறிமுகக் காட்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் படமாக்கப் பட்டுள்ளது. மொத்தத்தில், ராதே ஷ்யாம், ஐரோப்பாவில் நடைபெறும் ஒரு மகத்தான காதல் காவியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
படத்தில், சச்சின் கேடேகர், பாக்யஸ்ரீ, பிரியதர்ஷி, முரளி ஷர்மா, சாஷா சேத்ரி, குனால் ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் படம் வெளி யிடப்படுகிறது. படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். வம்சி மற்றும் பிரமோத் யுவி கிரியே ஷன்ஸ் பேனரில் தயாரிக்கின்றனர்.
தொழில்நுட்பக் குழு:
இயக்கம்: கே.கே.ராதா கிருஷ்ண குமார்
தயாரிப்பு: வம்ஸி மற்றும் பிரமோத் புரொடக்ஷன் ஹவுஸ்.இசை: ஜஸ்டின் பிரபாகரன்.ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்ஸா
எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவ்
சண்டைக் காட்சிகள்: நிக் போவெல். ஒலி வடிவமைப்பு: ரசூல் பூக்குட்டி. நடனம்: வைபவி மெர்ச்சன்ட்
ஆடை வடிவமைப்பு: தோட்டா விஜயபாஸ்கர், ஏகா லக்கானிவிஷூவல் ஏஃபக்ட்ஸ் மேற்பார்வை: கமல் கண்ணன். எக்ஸிக்யூடிவ் புரோடியூஸர்: என்.சன்தீப்சிகை அலங்காரம்: ரோஹன்
ஒப்பனை: தாராணம் கான்
ஸ்டில்ஸ்: சுதர்சன் பாலாஜி
விளம்பர வடிவமைப்பு:
கபிலன்.காஸ்டிங் இயக்குநர்: ஆடோரே முகர்ஜி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ரவீந்தர். மக்கள்தொடர்பு -நிகில் முருகன்.
வீடியோ லின்க்: https://youtu.be/Ffp2i537Fiw