Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“ஆகாஷ் வாணி” இணைய தொடரில், கவின் – ரெபா ஜான் ஜோடி

Kaustubha Mediaworks
சார்பில், புதிதாக தயாராகவுள்ள, “ஆகாஷ் வாணி” இணைய தொடரில், இளம் அழகு கவின் & ரெபா ஜான்
ஜோடி இணைகிறர்கள் !

தமிழ் திரை வரலாற்றில் தற்போதைய காலகட்டம், இணைய தொடர்களின் பொற்காலமாக ஜொலித்து வருகிறது. பெரு தயாரிப்பு நிறுவனங்கள், பெரும் ஆளுமைகள் இணைவில், பிரமாண்ட உருவாக்கத்தில் உருவாகும் இணைய தொடர்கள், ஒன்றன் பின் ஒன்றாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில், ரசிகர்களை கொள்ளை கொள்ளும் படைப்பாக, ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற திரைப்படங்களில் இயக்குனர் அட்லீயிடம் உதவியாளாராக பணியாற்றிய Enoc Able, புத்தம் புதிய ரொமான்ஸ் இணைய தொடர் ‘ஆகாஷ் வாணி’ யை இயக்கவுள்ளார். Kaustubha Mediaworks அனுபவமிக்க இளம் திறமையாளர்களை ஒன்றிணைத்து, “ஆகாஷ் வாணி” இணைய தொடரை தயாரிக்கிறது. இளம்பெண்களின் உள்ளம் கவர்ந்த நாயகன் கவின் ‘ஆகாஷ்’ பாத்திரத்திலும், ஆல்பம் பாடலான ‘குட்டி பட்டாஸ்’ மூலம் கவனத்தை ஈர்த்த, இளைஞர்களின் கனவு தேவதை, ரெபா ஜான் ‘வாணி’ பாத்திரத்திலும் நடிக்கிறார்கள். அண்மையில் வெளியான தனுஷின் “ஜகமே தந்திரம்” படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சரத் ரவி & தீபக் பரமேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் வின்சா, அபிதா வெங்கட் ராமன், மேகி என்று அழைக்கப்படும் மார்கரெட், மெல்வின், ஜான்சன், கவிதாலயா கிருஷ்ணன் ஆகிய நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.

இயக்குனர் Enoc Able கூறும்போது ..
“இத்தொடர் காதலை, காதல் உறவின் பிரச்சனைகளை பற்றி உணர்வுப்பூர்வமாக கூறும் ஒரு அழகான திரைக்கதை. இது பார்வையாளர்களை எளிதில், உணர்வுபூர்வமாக ஈர்க்கும் படியான படைப்பாக இருக்கும். எளிமையான மற்றும் யதார்த்தமான உரையாடல்கள் ஆன்மாவை ஈர்க்கும் இசை, கண்களை கவரும் ஒளிப்பதிவு, கச்சிதமாக பொருந்தும் இளம் நடிகர்கள் குழு, ஆகிய அனைத்தும் “ஆகாஷ் வாணி” தொடரை மிக அற்புதமான படைப்பாக மாற்றும்.

இத்தொடரை வசனம் எழுதி இயக்குகிறார் Enoc Able. பிகில், மெர்சல், தெறி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் எழுத்தாளர் ரமணன் கிரிவாசன் கதை எழுதியுள்ளார். சாந்தகுமார் சக்கரவர்த்தி (அமலா பாலின் “அதோ அந்த பறவை, அர்ஜுன்-ஹர்பஜன் சிங் நடித்த ஃபிரண்ட்ஸிப்” படங்கள் புகழ்) ஒளிப்பதிவைக் கையாளுகிறார். பிரவீன் ராஜா (மாநகரம், பேட்ட, கைதி, மெர்குரி, கூட்டத்தில் ஒருவன், மேயாத மான் புகழ்) ஆடை வடிவமைப்பாளர். ராட்சசன், முண்டாசுப்பட்டி படங்களில் கலக்கிய கோபி கலை இயக்கம் செய்கிறார். டோவினோ தாமஸ் நடித்த “Varavu” மற்றும் “Thank You Brother” ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள குணா பாலசுப்ரமணியம் இத்தொடருக்கு இசையமைக்கிறார்.

Kaustubha Mediaworks சார்பில் சோனியா ராம்தாஸ் கூறும்போது…
அனுபவம் வாய்ந்த எழுத்தாளர் திரு ரமணன் அவர்களின் கதை, இளம் திறமையாளர் இயக்குனர் Enoc Able இயக்கம், சிறந்த நடிகர்கள் மற்றும் அட்டகாசமான தொழில் நுட்ப குழுவினர் இணைந்து, இரண்டு அழகான ஆத்மாக்களின் அளவுமீறிய அன்பின் கதையை, காதலை, அற்புதமான படைப்பாக தரவுள்ளார்கள். பார்வையாளர்கள் மனதை நிச்சயமாக இந்தக்காதல் கதை கவரும் என உறுதியாக நம்புகிறோம் என்றார்.

Related posts

கி.ரா எழுதிய நாவல் சினிமாவான கதை:இ.வி.கணேஷ்பாபு விளக்கம்

Jai Chandran

சினிமா பணிகள் அனைத்தும் நிறுத்தம்: தயாரிப்பாளர் சங்கம் முடிவு..

Jai Chandran

ஊரடங்கு உத்தரவை மீறினால் எதுவும் செய்ய முடியாது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend