Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஃபார்சியிலிருந்து விஜய் சேதுபதி காணொளி

பிரைம் வீடியோ, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமேசான் ப்ரைம் நிறுவனம், இந்தியா முழுவதும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத் தியிருக்கும், ஃபார்சி இணைய தொடரிலிருந்து விஜய் சேதுபதி கதாப்பாத்திர காணொளி வெளியிட்டுள்ளது.

ஏமாற்றுவதில் வல்லவனாக இருக்கும் ஆர்டிஸ்ட் எனும் ஷாகித் கபூர் பாத்திரத்தை துரத்தி பிடிக்கும் மைக்கேல் எனும் காவல திகாரி பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இந்த நாட்டிலிருந்து கள்ள நோட்டுக் கும்பலை ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் ஒரு காவல் அதிகாரி யின் அதிரடியான வாழ்க்கையை அசத்தலாக காட்சிப்படுத்துகிறது இந்த வீடியோ காட்சிகள். கள்ள நோட்டு கும்பலில் பின்னால் இருக்கும் மனுசுக் (கே கே மேனன்) மற்றும் ஆர்டிஸ்ட் ( ஷாகித் கபூர் ) இருவரையும் பிடிக்க விஜய் சேதுபதியின் காவலதிகாரி பாத்திரம் தன்னைத் தயார்ப்படுத் திக்கொள்ளும் குறும்புத்தனமான நடவடிக்கைகளை நம்மால் ரசித்து மகிழாமல் இருக்கவே முடியாது. ஆட்டம் போட வைக்கும் ஒரு அற்புதமான பின்னணி இசை யோடு, கூடிய இந்த வீடியோ அவரது ரசிகர்களுக்கும் உலகமெங்குமுள்ள பார்வையாளர் களுக்கும் அவரது பிறந்த நாளில் ஒரு அற்புதமான விருந்தாக இருக்கும்.

இந்த க்ரைம் திரில்லர் தொடர் ராஜ் & டிகே ஆகியோரின் பிரத்யேக மான நகைச்சுவையுடன் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. கொண்டது. பணாக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும் சிஸ்டத்தை ஏழ்மை பின்னணியில் வாழும் இளைஞன் தன் சாமார்த்தி யத்தால் எப்படி ஏமாற்றுகிறான் என்பதை அவனது பார்வையில் சொல்கிறது எட்டு எபிசோட்கள் கொண்ட ஃபார்ஸி தொடர்.

இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தொடர் பிப்ரவரி 10 அன்று இந்தியா மற்றும் உலகமெங்கும் 240 நாடுகளில்  வெளியிடப்படு கிறது .

 

https://www.instagram.com/reel/CneCP2yAUDI/?igshid=YmMyMTA2M2Y=

Related posts

Madras HC rules in 2D Entertainment’s favour

Jai Chandran

“யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” பட ஃபர்ஸ்ட்லுக் டைட்டில் டீசர் வெளியீடு..

Jai Chandran

1முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ் முதல்வர் அறிவிப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend