Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிம்பு காட்டும் வேகம்: மாநாடு படம் சிக்கிரமே முடிந்துவிடும்..

ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வரும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச மான தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின.
கடந்த சில நாட்களாக பாண் டிச்சேரியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அங்கே திட்டமிட்டபடி வெளிப்புற காட்சிகளை படமாக்கும் போது புயல் மற்றும் மழை காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதேசமயம் அந்த சமயத்திலும் கூட, சிலம்பர சனின் ஒத்துழைப்பால் ஒருநாளை கூட வீணாக்காமல், உள்ளரங்கு காட்சிகள் அனைத் தையும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே படமாக்கியுள் ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. அதன்பின்னும் மழை விடாமல் தொடர்ந்தததால் தான், மாநாடு படக்குழுவினர் வேறு வழியின்றி சென்னை திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டது.
விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் பாண்டிச்சேரி மற்றும் ஏற்காடு கிளம்புகிறது மாநாடு படக் குழு. சிலம்பரசன் டி.ஆர் நடித்துள்ள ஈஸ்வரன் படம் மிக விரைவாக முடிக்கப் பட்டது. அதேபோல் மிகப் பெரிய பட்ஜெட், அரசியல் படம் என்பதால் அதிக எண்ணிக்கையிலான துணை நடிகர்கள் கூட்டம் என இருந் தாலும் கூட, மாநாடு படமும் திட்டமிட்டதற்கு முன்னதாக வே படப்பிடிப்பு முடிவடைந்து உரிய நேரத்தில் ரிலீஸுக்கும் தயாராகிவிடும் என்று படக்குழுவினர் கூறி யுள்ளார்கள்.
இந்த சுறுசுறுப்பையும் வேகத்தையும் சிலம்பரசன் டி.ஆர். தொடர்ந்தார் என்றால் நிச்சயமாக வருடத்திற்கு மூன்று படங்களை அவரால் கொடுக்க முடியும் என்று திரையுலகில் பேச ஆரம்பித்து விட்டனர்.

Related posts

TheNight film First LooK launched Vijaymilton and Ashwin

Jai Chandran

92 வயதான பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

Jai Chandran

சன்னி லியோன் நடிக்கும் “ஷெரோ” படப்பிடிப்பு முடிந்தது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend