படம்: நதி
நடிப்பு: சாம் ஜோன்ஸ், ஆனந்தி, கரு பழனியப்பன், வேல ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ், முனிஷ்காந்த், மைக்செட் ஸ்ரீராம்
தயாரிப்பு: மாஸ் சினிமாஸ்
இசை: திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு
இயக்கம்: கே.தாமரை செல்வன்
பி ஆர் ஒ: சதீஷ் (AIM)
ஆட்டோ டிரைவர் மகன் தமிழ் (சாம் ஜோன்ஸ்) கல்லூரியில் சேர்கிறான். அதே கல்லூரியில் பாரதியும் (ஆனந்தி) சேர்கிறார். இருவரும் நட்பாக பழகுகின் றனர். இருவரும் காதலிப்பதாக நினைக்கும் பாரதியின் குடும்பத்தினர் அவர்கள் பழக தடை விதிக்கின்றனர். அதற்கு பாரதி எதிர்ப்பு தெரிவிக்கிறார். கோபம் அடையும் பாரதியின் பெரியப்பா வேல ராமமூர்த்தி தமிழை கொல்லச் சொல்கிறார். இதையறிந்து பதறும் பாரதி தமிழை ஒன்றும் செய்யாதீர்கள் நீங்கள் சொல்லும் நபரை மணக்க சம்மதிக்கி றேன் என்கிறார்.திருமண நிச்சயதார்த்தம் ஏற்பாடாகிறது. அது நடந்தாலும் தமிழை கொல்ல வேல ராமமூர்த்தி முடிவு செய்கிறார். இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு அதிர்ச்சியான பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.
மதுரையை பின்புலமாக கொண்ட கதை. தமிழ் கதாபாத்திரத்தில் சாம் ஜோன்ஸ் நடித்திருக்கிறார். முதல் படம் என்றாலும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக் கிறார். இவரே தயாரிப்பாளாராக இருந்தபோதும் தனக்கு சாதகமாக நான்கு பைட், ரெண்டு டூயட் என்றில் லாமல் அப்பா செல்லமாக நடித்து எதார்த்தில் மிளிர்கிறார் ஆனந்தியிடம் பேசக்கூட சாம் வெட்கப்படுவதும் அவரை தந்தை முனிஸ்காந்தே செமையாக ஓட்டுவதும் சிரிப்பு.
வழிகேட்டு வரும் பெரியவரை சாம் பைக்கில் ஏற்றிச் சென்று விட அவரோ வீச்சரிவாள் கொண்டு ஆளை வெட்டுவது ஷாக் அதைக்கண்டு சாம் அதிர்வதும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
சிறைக்குள் இருக்கும் சாமை ரவுடிகள் தாக்க வரும்போது கோபத்தில் அவர்களை சாம் அடித்து சாய்ப்பது நம்பும்படி உள்ளது.
பாரதியாக வரும் ஆனந்தி துள்ளளான நடிப்பில் பரவசப்படுத்துகிறார். வழக்கமாக காதலிக்காக காதலன் தியாகம் செய்வார் இதில் காதலனுக்காக த்ன்னையே தியாகம் செய்கிறார் ஆனந்தி.
சாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற் காக வேல ராமமூர்த்தி உள்ளிட்ட குடும்பத்ன்தினரை எதிர்த்து நிற்கும்ன போது ஒரு தென்றல் புயலானதுபோல் சீறுகிறார்.
படத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடித்திருக்கிறார் கரு பழனியப்பன். சகுனிபோல் அவர் செய்யும் அமைதி யான வில்லத்தனம் படத்தை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்கிறது. அரசியல்வாதிகள் இப்படித்தான் சூழ்ச்சி செய்வார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறார். வசனங்களையும் பொடி வைத்துபேசி அப்ளாஸ் அள்ளுகிறார்.
அடாவடி வேல ராமமூர்த்தி, பதுங்கி பேசும் ஏ.வெங்கடேஷ் பாத்திரங்களாக மாறியிருக்கின்றனர்.
மாஸ் சினிமாஸ் தயாரிக்கிறது. வெறும் காதல் கதையாக இல்லாமல் அரசியல், சமூக அவலம், சாதி வெறி என எல்லாவற்றையும் அளவுடன் கலந்து ரசிக்கும்படியான படத்தை இயக்கி அளித்திருக்கிறார் கே.தாமரை செல்வன்.
படத்துக்கு பலமாக நிற்கிறது ஒளிப்பதி வாளரின் எம்.எஸ்.பிரபுவின் கேமிரா.
திபு நினன் தாமஸ் இசை பரபரப்பு குறையாமல் வைக்கிறது.
நதி- தடையில்லாமல் ஓடுகிறது.

