அண்ணாத்த படப்பிடிப் புக்காக கடந்த வாரம் ஐதராபாத் புறப்பட்டு சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடக்கும் ஷுட்டிங்கில் பங்கேற்று நடித்து வந்தார். படப்பிடிப்பு தளத்தில் கொரோனா பாதுகாப்பு கவச அமைப்பு உருவாக்கப்பட்டது. குறிப்பாக ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு பயோ பப்பில் உருவாக்கப்பட்டி ருந்தது. மற்ற டெக்னீஷியன், பணியாளர்களுக்கும் கொரோ னா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன.
படப்பிடிப்பை விரைந்து முடிக்க முடிவி செய்த ரஜினிகாந்த காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிவரை சுமார் 14 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார். டிசம்பர் 30ம்தேதி ஷூட்டிங்கி லிருந்து சிறிய பிரேக் எடுத்துக் கொண்டு சென்னை வருவதாக இருந்தது.
இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி யானதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த்துக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது. அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இன்று மாலை ரஜினி காந்த் சென்னை திரும்புகிறார்.