Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் பாராட்டி வாங்கிய கூழாங்கல்

புதியவர்கள் உருவாக்கி உள்ள புதிய படம் கூழாங்கல். அப்படக் குழுவை பாராட்டிய நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் அவர்களை பாராட்டி படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றனர்,

இதுகுறித்து நயன்தாரா, விக்னேஷ் சிவன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

புதிய படக் குழு ஒன்று ’கூழாங்கல்’ என்ற படத்தை உருவாக்கி உள்ளது. அதை இருவரும் பார்த்து பாராட்டி உள்ளனர். இருவரும் வெளி யிட்ட கடிதத்தில் கூறியிருப் பதாவது:
மிக அரிதான ஒரு நாள்தான், ஒரு படைப்பை பார்த்து வியந்து நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளும் எண்ணம் தோன் றும். அப்படி ஒரு நாளாக. இறுதிட்ட பணிகளில் இருந்த கூழாங்கல் எனும் திரைப் படத்தை பார்த்தபோது தோன் றியது.
கூழாங்கல் பி.எஸ்.வினோத் ராஜின் முதல் படம். தலைப் பை போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. முழுக்க முழுக்க திறமையான புது குழுவினராலும், நடிகர்களா லும் இயக்குனராலும் உருவான இத்திரைப்படத்தை பார்த்து பாராட்டுகளோடு மட்டும் நிற்காமல் தன்னு டைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இத்திரைப் படத் தின் மூலமாக எங்களுக்கு கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது சர்வதேச திரைப்பட விழாக் களுக்கும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத் தின் முழு தயாரிப்பை பொறுப்பேற்றுள்ளோம்.


உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை யில் இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கி றோம்.
இவ்வாறு நயன்தாரா, விக்னேஷ் சிவன் தெரிவித் துள்ளனர்.

Related posts

VaaManavaazha Coming to you on 28th Feb

Jai Chandran

ஆஸ்கார் விருது போட்டிக்கு செல்லும் இந்திய படம்

Jai Chandran

அண்ணாமலையாரிடம் தரிசனம் பெற்ற நடிகர் அருண்விஜய்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend