ஆரோக்கியம், உடற்பயிற்சி, சமையற் கலை, ஒப்பனை குறிப்புகளை ரசிகர்களுக்கு வழங்கி வரும் ஸ்ருதி, அடுத்து தனது இசை சுற்றுப் பயணத்திலிருந்து இதுவரை யாரும் பார்த்திராத காணொலிகளை யும், தானே மெட்டமைத்திருக்கும் பாடல்களின் முன்னோட்டங்களையும் தனது யூடியூப் சேனல் வழியாக வெளியிடவிருக்கிறார்.
ஸ்ருதி, பிரிட்டன் முழுவதும் இசை நிகழ்ச்சிகளுக்காக சுற்றுப் பயணம் செய் துள்ளார். தனது முதல் ஆல்பத்துக்கான வேலைகளிலும் ஓய்வின்றி ஈடுபட்டு வருகிறார்.
தனது யூடியூப் சேனல் மூலமாக தான் உருவாக்கிய படைப்பு களையும், உலகம் முழுவதும் அவர் மேடை யேற்றிய இசை நிகழ்ச்சிகளிலிலிருந்து, பார்த்திராத காணொலிகளையும் வெளியிடவிருக்கிறார்.
இதுபற்றி ஸ்ருதி கூறும்போது, “சமூக ஊடகத்தில் ரசிகர்களுடன் உரையா டியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து இயங்கும் ஒரு யூடியூப் சேனல் தான் அடுத்த சரியான படியாக இருக்கும் என்று நினைக் கிறேன். எனது அசல் படைப்புகள் , எனது இசை நிகழ்ச்சிகளின் காணொ லிகள், இசை நிகழ்ச்சி களுக்கு பின்னால் நடந்த ஏற்பாடுகள் குறித்த காணொ லிகள் என அனைத்தும் என் யூடியூப் சேனலில் இருக்கும்” என்றார்.