பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் வில்லத்தனத்தில் அசத்தி யவர் மேலும் கமலின் வெற்றி விழா, விஜயகாந்த்தின் சின்ன கவுண்டர், பிரஷாந்த்தின் திருடா திருடா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் ஸ்வர்க் நரக், மந்தன், கலியுக், சக்ரா, சரண்ஷ், மோகன் ஜோஷி ஹாசிர் ஹோ, திரிகல், அகாத், த்ரோஹி, சர்தாரி பேகம், கொய்லா, சிப்பாய் போன்ற பல இந்திபடங்களிலும் நடித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த சலீம் கவுஸ் மும்பையில் வசித்து வந்தார். அவருக்கு 70 வயது. முதுமை காரணமாக அவர் காலமானார்.
சலீம் கவுஸ் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களி லும் சலீம் கவுஸ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.