Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்தது ஈனச்செயல்.. ரஜினி கண்டனம்.. ’கந்தனுக்கு அரோகரா’ ஹேஷ்டேக் டிரெண்டிங்..

கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் என்ற யூ டியூபில் அவதூறாக விமர்சனம் செய்தனர் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு இந்து அமைப்பு களும் கண்டனம் தெரிவித்தன. நடிகர்கள் ராஜ்கிரண், சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கண்டித்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பர் கூட்டம் நிர்வாகிகளை கைது செய்தது. இப்பிரச்னை பற்றி ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று பா ஜ கட்சி மாநில தலைவர் எல். முருகன் கூறினார்.

இதையடுத்து தனது டிவிட்டர் பக்கத் தில் கருத்து வெளியிட்டிருக் கிறார் ரஜினிகாந்த். அவர் கூறும்போது,’கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண் படுத்தி, கொந்த ளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி, தவறு செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னு டைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனி மேலாவது மதத் துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும். ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே. கந்தனுக்கு அரோகரா’ என டிவிட்டரில் ரஜினி தெரிவித்திருக்கிறார். கந்தனுக்கு அரோகரா என டிவிட்டடில் ரஜினி தெரிவித்துள்ளது இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Related posts

சிவாஜி கணேசன் 22 வது நினைவு நாள்

Jai Chandran

இயக்குநர் கே. வி.குகன் இயக்கும் “WWW“ பட“மின்னலை எதிரே” பாடல் வெளியிட்ட ஹிப்ஹாப் ஆதி !

Jai Chandran

Carbon Audio rights bagged by thinkmusicindia

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend