Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஒற்றை பனைமரம் படம் வெளியிட சீமான் கடும் எதிர்ப்பு

புதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் படம் ஒற்றைப்பனை மரம். இதில் நாயகியாக நவ யுக நடித்திருக்கிறார். இப்படம் 2009 இல் இலங்கையில் நடந்த ஈழப் போருக்கு பிந்தைய நாட்களில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டதாக இயக்குனர் தெரிவித்தார். இப்படம் பத்திரிகையாளருக்கு திரையிடப்பட்டது. அப்போது இயக்குனரிடம் மீடியா மற்றும் பத்திரிகையாளர்கள் வாக்குவாதம் செய்தனர் ஈழத் தமிழர் மற்றும் ஈழ போர ஈழத்  தமிழச்சிகளை அவதூறு செய்யும் வகையில் இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது எப்படி படம் பார்க்கலாம் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு இயக்குனர் புதியவன் ராசையா கூறும்போது,’ போரில் தோற்ற சமுதாயம் பின்னர் அங்குள்ள ஆட்சியாளர்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை காட்டத்தான் இந்த படம் எடுக்கப்பட்டது. இது யாரையும் இழிவுபடுத்தும் படம் அல்ல ஆனால் இந்த சம்பவங்களை சொல்லாமல் விடக்கூடாது என்பதற்காக படத்தை ஒரு பதிவாக இயக்கி இருக்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனாலும் இயக்குனருக்கும் பத்திரிக்கை மீடியாக்கினருக்கும் சர்ச்சை தொடர்ந்து.

இந்த மோதல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில்  கொச்சைப்படுத்தும் தமிழர்களை எந்த படத்தையும் தமிழகத்தில் திரையிடப்பட மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து சீமான் தனது அரிசியில்அறிக்கையில், கூறியதாவது: ஈழத் தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரி யது. தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப் பரப்பரையையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

மண் விடுதலைக்குப் போராடி வீர காவியங்களான மாவீரர் தெய்வங்களை இழிவுபடுத்தவோ அல்லது அவதூறு பரப்புவோ முயலும் எந்தவொரு படைப்பையும் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரிக்கிறேன்.

ஆகவே, ஈழவிடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ‘ஒற்றை பனை மரம்’ திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு நாங்கள் அன்புடன் கோரிக்கை வைக்கிறோம். இத்திரைப்படத்தைத் திரையிடக் கூடாது என திரையரங்கங்களை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளமாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

மேலும், தமிழ்நாடு அரசு இதனை உடனடியாகக் கவனத்தில் எடுத்து, தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவிடாமல் தடுக்குமாறு வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Related posts

Maaran Motion poster releasing tomorrow

Jai Chandran

தீ இவன் படத்திற்கு 4 சண்டை காட்சியில் கார்த்திக்

Jai Chandran

தமிழ் பட படப்பிடிப்புகள் இன்று முதல் ரத்து..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend