Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சமக தலைவர் சரத்குமார் குடியரசு தினவிழா வாழ்த்து

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி   கட்சி நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார்   குடியரசு தின நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

மக்களாட்சி தத்துவத்தை பிரதானமாக நிலைநிறுத்தி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உருவெடுப்பதற்கு காரணமாக அமைந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளான ஜனவரி 26 – ந்தேதியை குடியரசு தினமாக 1950 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.

இந்நாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாவதற்கு உன்னதப் பங்காற்றிய விடுதலைப் போராட்ட வீரர்களையும், சட்டம் இயற்றிய மேதைகளையும், புரட்சியாளர்களையும் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஒவ்வொரு குடிமகனும் முழுமையாக பெறுவதில் தான் நம் குடியரசின் முழு வெற்றி அமைந்துள்ளது.

இந்திய தேசத்தின் குடிமக்களாகிய நாம், நமது நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், பன்முகத்தன்மை, சமூகநல்லிணக்கம் ஆகிய மாண்புகளை பாதுகாத்து,
மக்களாட்சியின் கண்ணியத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.

ஒவ்வொருவரும் சமூக பொறுப்புணர்ந்து, நமது ஒருங்கிணைந்த ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்காக, முழுமையாக அர்ப்பணித்திட உறுதியேற்று தினந்தோறும் செயலில் வெளிப்படுத்துவோம். சாதி, மத, இன, மொழி, பேதங்களுக்கு அப்பாற்பட்டு, தேசப்பற்றுடன் மதச்சார்பின்மை, இறையாண்மை, சமத்துவத்தை பேணி ஒன்றுபட்டு வாழும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகளை என் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் உணர்வுப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்
உழைப்பவரே உயர்ந்தவர்
என்றும் அன்புடன்

இவ்வாறு  ரா.சரத்குமார் கூறியுள்லளார்.

Related posts

Sabhaapathy Trailer

Jai Chandran

சூர்யாவின் சூரரைப்போற்று ஆஸ்கர் போட்டிக்கு செல்கிறது

Jai Chandran

ET juke box is out now!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend