Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சுசீந்திரன் படத்திற்கு இசை அமைப்பாளரானது ஏன்? நடிகர் ஜெய் பேச்சு

நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர்  சுசீந்திரன் இயக்கத்தில், கிராம பின்னணியில் உருவாகியுள்ள படம் “வீரபாண்டியபுரம்”. நீண்ட இடைவேளைக்கு பிறகு கிராமத்து லுக்கில் தோன்றியுள்ள நடிகர் ஜெய் முதல் முறையாக இப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளாராக அறிமுகமாகிறார். இப்படத்தை லென்டி ஸ்டுடியோ (Lendi Studios);சார்பில் எஸ்.ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ரிலீஸுக்கு தயாராகிவரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில் Line Producer ஜோதிமுருகன் பேசியதாவது:
வீரபாண்டியபுரம் பிப்ரவரி 18 ஆம் தேதி வருகிறது. இப்படம் திண்டுக்கல்லை சுற்றி எடுக்கப்பட்டது. ஒவ்வொரு காட்சியிலும் புதுமையை புகுத்தியுள்ளார் இயக்குநர் சுசீந்திரள்,  நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இப்படத்தில் சிறப்பாக இருக்கும்படி படத்தை அழகாக எடுத்துள்ளார். படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி

தயாரிப்பாளர் எஸ்.ஐஸ்வர்யா பேசியதாவது:
இந்தப்படம் கிராம பின்னணியில், ஆக்சன் படமாக எடுத்துள்ளோம். படத்தை எடுக்கும் முன்பாக 35 நாளில் எடுத்துவிடுவேன் என்று சொன்னார் இயக்குநர், அதே போல் முடித்து தந்தார். ஜெய் நடிப்பில் மட்டுமல்லாது இசையிலும் அசத்தியிருக்கிறார். பாலசரவணன், ஜே பி, என எல்லோருமே நன்றாக செய்துள்ளார்கள். மீனாக்‌ஷி சூப்பராக நடித்திருக்கிறார். படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

வசனகர்த்தா பாஸ்கர் சக்தி பேசியதாவது:
இந்தப்படத்தின் மூலம் இசையமைப்பாளாராக அறிமுகமாகும் ஜெய்க்கு வாழ்த்துக்கள். சுசீந்திரன் உடன் நான்கைந்து படங்கள் செய்துள்ளேன். இடையில் கொஞ்ச காலம் வேலை செய்யவில்லை. இப்போது மீண்டும் இப்படத்தில் வேலை செய்துள்ளோம். சுசீந்திரன் வேலையை நேசிப்பவர். அவர் செய்யும் வேலையில் முழுமை இருக்கும். இப்படம் ஒரு சிறந்த ஆக்சன் திரைப்படமாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

நடிகர் ஜே பி பேசியதாவது:
ஜெய் சாரை நடிகராக தெரியும், அவரை இசையமைப்பாளராக பார்க்கப்போவது எனக்கு சர்ப்ரைஸ். அவருக்கு வாழ்த்துக்கள். சுசீந்திரன் சாருக்கும் எனக்கும் உள்ள நட்பு மிக நெருக்கமானது. தெலுங்கில் நான் இன்று வளர காரணம் சுசி சார் தான். நான் மகான் அல்ல அங்கு எனக்கு நிறைய பிரபலத்தை பெற்று தந்தது. சுசி சார் எங்கு எப்போது கூப்பிட்டாலும் போவேன். அவர் கச்சிதமாக திட்டமிட்டு படத்தை எளிதாக எடுத்துவிடுவார். அவரும் வேல்ராஜ் சாரும் இணைந்து மேஜிக் செய்துள்ளார்கள். இந்தப்படம் திண்டுக்கல்லை சுற்றி எடுத்தோம் மிக சிறந்த அனுபவமாக இருந்தது. எல்லோருக்கும் நன்றி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பின்னணி இசையமைப்பாளர் சபேஷ் பேசியதாவது:
எங்க குடும்பத்தில் இருந்து இன்னொரு இசையமைப்பாளர் வந்திருக்கிறார். அவர் முன்னதாகவே கீபோர்ட் பிளேயராக இருந்துள்ளார். காடை முட்டை பாடல் முன்பே கேட்டேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது எல்லாப்பாடல்களும் மிகவும் அருமையாக இருந்தது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். வாழ்த்துக்கள்

பின்னணி இசையமைப்பாளர் முரளி  பேசியதாவது:
காடை முட்டை அருமையான மெலடி பாடல். அருமையாக இசையமைத்துள்ளார் ஜெய். ஒரு பாடல் ஹிட் ஆவது இசையமைப்பாளர் கையில் மட்டும் இல்லை. இயக்குநர் கையிலும் இருக்கிறது அந்த வகையில் சுசீந்திரன் நன்றாக பாடலை எடுத்துள்ளார். நான் இந்தப்படத்திற்கு பின்னணி இசைக்க ஆசைப்பட்டேன் ஆனால் ஜெய் அருமையாக உலகத்தரத்தில் இசையமைத்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஜெய் தந்தை சம்பத் பேசியதாவது:
ஜெய்யை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. சுசீந்திரன் முதல் படத்திலிருந்தே பிடிக்கும் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் பாலசரவணன் பேசியதாவது:
இந்தப்பட இசை வெளியீட்டு விழா எனக்கு நன்றி சொல்லும் விழா தான். எனக்கு சுசீந்திரன் சார் 6 படங்களில் வாய்ப்பு தந்துள்ளார் என்னை ஒரு தம்பியாக ஏற்றுக்கொண்டுள்ளார். ஜெய் சார் இசையமைப்பாளர் முகத்தை தாண்டி அவருக்கு செஃப் முகம் ஒன்று இருக்கிறது. தினமும்
அவரை படப்பிடிப்பில் சமைக்க சொல்லி சாப்பிட்டிருக்கிறோம் அவருக்கு நன்றி. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் எல்லோருக்கும் நன்றி. படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி.

நடிகை மீனாக்‌ஷி பேசியதாவது:
சுசி சாருடன் இரண்டாவது படம் அவர் என்னை அறிமுகப்படுத்தி 3 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 3 வருடத்தில் எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்துள்ளார். பாட்டு கேட்டபோது ஜெய் சார் தான் மியூசிக் என நம்பவே முடியவில்லை. ஷூட்டிங் முடிந்தவுடன் இசையமைக்க போய்விடுவார். இந்தப்படத்திற்காக கடுமையாக உழைத்துள் ளார். தயாரிப்பாளர் என்னை மகள் போல் பார்த்து கொண்டார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது:
இது மிக முக்கியமான தருணம் முதலில் இப்படத்திற்கு சிவ சிவா என தலைப்பு வைத்திருந்தேன். இதற்கு முன்னால் ஒரு படம் செய்தேன். லாக்டவுனில் என்னால் வேலை செய்யாமல் இருக்க முடியவில்லை மிகவும் கஷடப்பட்டேன். வேல்ராஜ் சாரிடம் கேமரா மட்டும் இருக்கா சார் என கேட்டு ஜெய்யை வைத்து லைட் இல்லாமல் நேச்சர் லைட்டில் அந்தப்படத்தை எடுத்தோம். அந்தப்படத்தை உயிர் பயத்துடன் தான் எடுத்தோம். அந்த நேரத்தில் ஆர்டிஸ்ட் எல்லாம்  நடிக்க பயந்தார்கள். ஜெய்யிடம் கேட்டேன் கதை சொல்கிறேன் என்றேன் ஆனால் கதையெல்லாம் வேண்டாம் சார், உங்க படத்தில் நடிக்க ஆசை  உடனே வருகிறேன் என்று நடிக்க வந்தார். அந்தப்படம் முடிந்தபிறகு இந்தப்படத்தின் கதை சொன்னேன் உடனே பண்ணலாம் என்று பார்டனர்ஷிப்பில் சம்பளம் வாங்காமல் நடித்தார் ஜெய். இந்தப்படத்தை தெலுங்கிலும் ஆதியை வைத்து எடுத்தோம். தெலுங்கில் சுனில் முதற்கொண்டு நிறைய நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த கொரோனா எல்லோருக்கும் நிறைய இழப்புக்களை தந்துள்ளது என் வாழ்விலும் நிறைய இழப்புக்கள் நடந்தது. கண் முன்னால் நிறைய மரணங்கள் பார்த்தேன். எனக்கு இரண்டு அம்மா அதில் ஒருவர் இந்த கொரோனா காலத்தில் இறந்தார் அவர் எல்லா ஆடியோ பங்க்சனுக்கும் வந்துள்ளார். அவர் இல்லாமல் நடக்கும் முதல் நிகழ்ச்சி இது தான்.

சினிமா வேலை தான் என்னை எல்லாவற்றையும் மறக்க வைக்கும் அதனால் தான் தொடர்ந்து வேலை செய்கிறேன். ஜெய் இசை கேட்டு வைரமுத்து சார் பெரிய இசையமைப்பாளராக வருவார் என வாழ்த்தி னார். கிராமத்து இசையை முதல் படத்திலேயே அழகாக தந்துள்ளார் ஜெய். நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு இப்படம் ஒரு பழிவாங்கும் ஆக்சன் படம். க்ளைமாக்ஸ் ஃபைட் ஜெய்க்கு சூப்பராக வந்துள்ளது. தமிழை விட தெலுங்கில், இப்படம் பெரிய வெற்றி பெறும் அது ஜெய் சாருக்கும் தெரியும். நான் நன்றாக இருக்க வேண்டுமென நினைக்கும் நிறைய  சினிமா நண்பர்கள் என்னை சுற்றி இருக்கிறார்கள் அது எனக்கு மகிழ்ச்சி. அடுத்தடுத்து இன்னும் தரமான படங்கள் செய்வேன். அண்ணாத்த படத்தில் சூரி பாண்டியநாடு படம்  ரஜினி சாருக்கு பிடித்ததாக சொன்னார். ரஜினி சார் சொன்னது தான் நான் யானை அல்ல குதிரை கண்டிப்பாக எழுந்து விடுவேன். அஜித் சார் அரசியலுக்கு வர வேண்டுமென நான் சொன்னது பெரிய வைரலானது அந்த பிரச்சனையில் நான் டிவிட்டரில் இருந்தே போய் விட்டேன். இப்போது எனக்கு அது தவறு என தோன்றுகிறது. அரசியல் மிக சிக்கலான கடினமான விஷயம், அஜித் சார் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார். அது தான் சரி. இந்தப்படம் எனக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும் எல்லோருக்கும் நன்றி.

நடிகர் ஜெய் பேசியதாவது:
இசை எங்கிருந்து வருது என கேட்டு விடாதீர்கள். 2012 லிருந்தே மியூசிக் கற்றுக்கோண்டேன். முதலில் டிரிப்பிள்ஸ் என சீரிஸ் செய்தேன் அதன் கதை சொன்ன போது, நான் இசையமைப்பதை பார்த்துவிட்டு, ஒரு பாடல் மியூசிக் பண்ண சொன்னார் அதன் இயக்குநர். செய்கிறேன் ஆனால் நன்றாக இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள் என்றேன், அந்த பாடலை மிக்ஸிங் செய்து கொண்டிருந்தபொது சுசி சார் கேட்டுவிட்டு யார் மியூசிக் என்றார், நான் தான் இசையமைத்தேன் என்றேன் அவர் ஆச்சரயப்பட்டு பாராட்டினார். இந்தப்படத்திற்கு
இசையமையுங்கள் என்று சொன்னபோது முதலில் பிராங்க் செய்கிறார் என்று நினைத்தேன் சீரியஸாக சொன்னார். கொஞ்சம் தயக்கமாக இருந்தது ஆனால் சுசி சார் என்னை நம்பினார். இப்போது படத்தை முடித்து விட்டு பார்க்கும்போது என்னால் இசையமைக்க முடியும் என்ற நம்பிக்கை வருகிறது அதறகு சுசி சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
முதல் பாடலே வைரமுத்து சார் எழுதினார் அவருக்கு இசை பிடித்திருந்தது என்று இயக்குநர் சொன்னார் மகிழ்ச்சியாக இருந்தது. நான் இசை கற்றுக்கொண்டதற்கு என் குடும்பம் தான் காரணம் என் குடும்பத்திற்கு நன்றி. நான் எது செய்தாலும் என்னை நம்பி,  செய் என ஊக்கம் அளித்த என் அப்பாவுக்கு நன்றி. சுந்தர் சி சார் படத்திலும் ஒரு பாட்டுக்கு இசையமைத்துள்ளேன் பெரிய நம்பிக்கை வந்துள்ளது. இந்தப்படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சுசி சார் ஒரு நாள் வேல்ராஜ் சார் அப்பா இறந்ததற்கு செல்வதற்காக, என்னை அன்றைக்கு என்னென்ன எடுக்க வேண்டும் என எழுதி கொடுத்துவிட்டு போய்விட்டார், நான் தயங்கினேன் தைரியம் தந்தார். எனக்கு இயக்கவும் வரும் என நம்பிக்கை  தந்த சுசிசாருக்கு நன்றி, எல்லோருக்கும் நன்றி.

இத்திரைப்படத்தில் நடிகர் ஜெய் ஜோடியாக நடிகை மீனாட்சி நடித்துள்ளார். மேலும் சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள் தாஸ், இயக்குநர் முக்தார் கான் ஆகயோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ்.
படத்தொகுப்பு எம்.காசி விஸ்வநாதன்
கலை இயக்கம் பி.சேகர். நடனம் ஷோபி பால்ராஜ். சண்டைப்பயிற்சி தினேஷ் காசி.
பாடல்கள் வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி.
இணை இயக்கம் தமிழ். திருப்பதி ராஜா, டி. இளங்கோ கலரிஸ்ட் ரகுநாத் வர்மா. ஒலி வடிவமைப்பு ராஜா கிருஷ்ணன். டிஐ B24.
விஷுவல் எபெக்ட்ஸ் பேப்பர் ப்ளேன்.
பப்ளிசிட்டி டிசைன் தண்டோரா.
புரடக்சன் மேனேஜர் பெருமாள், சுகிதன்.
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் எஸ்.அஜய் பிரவீன் குமார்.

Related posts

Abhishek Sinha Directorial “BAS KARO AUNTY”

Jai Chandran

Veeramae Vaagai Soodum enters IMDb trending at No.1

Jai Chandran

இரு மாறுபட்ட பாத்திரத்தில், நடித்தது மிகவும் பிடித்திருக்கிறது: நடிகர் டாம் ஹார்டி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend