Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஓஹோ எந்தன் பேபி (பட விமர்சனம்)

படம்: ஓஹோ எந்தன் பேபி

நடிப்பு: ருத்ரா (அறிமுகம்), விஷ்ணு விஷால், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, மிதிலா பால்கர், கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், கஸ்தூரி, விஜய் சாரதி நிர்மல் பிள்ளை

தயாரிப்பு: விஷ்ணு விஷால், ராகுல், கே வி துரை

இசை: ஜென் மார்டின்

ஒளிப்பதிவு: ஹரிஸ் கல்யாண்

இயக்கம்: கிருஷ்ணகுமார் ராம்குமார்

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, நாசர்

அஸ்வின் (புதுமுகம் ருத்ரா) சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் நடிகர் விஷ்ணு விஷாலிடம் கதை சொல்லி கால்ஷீட் வாங்க வருகிறார். அவரிடம் கதை சொல்லும் போது, “காதல் கதை இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்க தனது காதல் கதையையே ருத்ரா சொல்கிறார். ஆனால் பிரேக்கப்பிற்கு பிறகு என்ன நடந்தது என்று ருத்ரா சொல்ல தயங்குகிறார். அதற்கு ருத்ரா காதலி, “இனி பேச மாட்டேன்” என்று வேறு ஊருக்கு சென்றதுதான் காரணம். “அவரை சந்தித்து விட்டு என்ன நடக்கிறதோ அதை சொல்லுங்கள் அதை வைத்து படம் எடுக்கலாம்” என்று விஷ்ணு சொல்ல ருத்ரா என்ன முடிவு எடுக்கிறார்? அவர் காதலியை சென்று பார்த்தாரா? இயக்குனர் ஆக முடிந்ததா? என்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா இப்படத்தில்  ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இதில் அவரது நடிப்பு ஓகேவா? இல்லையா? என்பதுதான் கேள்வி அதற்கு ஒரே பதில்   நடிப்பு ஓகே தான்.

ஜோதிட பைத்தியமான தனது தந்தை விஜய் சாரதியிடம் திட்டுவாங்கி கட்டிக் கொண்டு சராசரி பையனாக கோபப்படுவதும், பின்னர்  எதிர் வீட்டுக்கு குடி வரும் சக பள்ளி. மாணவியிடம் ஜொள்ளுவிட்டு வழிவதும். அவரிடம் பிரேக் அப்  ஆனவுடன் மிதிலாவுடன் காதல் மலர்ந்து லிப் டு.லிப் கிஸ் வரை மன்மதனாக இளவட்டங்களை  கிரங்கவிடுகிறார் ருத்ரா.

படத்தின் 2ம் பாதி காதல் சென்டிமென்ட் பார்ட்டுக்கு கதை நகரும்போது அதுவரை அரங்கில் இருந்த கலகலப்பு மாறி ரசிகர்களின் கண்களும், காதுகளும் சீரியஸ் மோடுக்கு செல்கிறது. ருத்ராவும், மிதிலாவும் மீண்டும் சேர்வார்களா? மாட்டார்களா? என்ற டிவிஸ்ட் கிளைமாக்ஸ் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.

விஷ்ணு விஷால்  —ருத்ரா கதை விவாதம் தொடக்கத்தில் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தாலும் அதன் நீளம் படத்தின் வேகத்தை தடை செய்கிறது. இந்த காட்சிகளுக்கு கொஞ்சம் கத்தரி போட்டால் விறுவிறுப்பு கூடும்.

ருத்ராவுக்கு முதல் படத்திலேயே 3 லிப் டூ லிப் காட்சியெல்லாம் ரொம்ப ஓவர் புரோ.

மிஸ்கின் , கருணாகரன் காமெடி காம்பினேஷன் பார்த்திபன், வடிவேலு காம்பினேஷன் போல் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

விஷ்ணு விஷால், ராகுல், கே வி துரை  தயாரித்திருக்கின்றனர்.

இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் காட்சிகளில் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார். ஏற்கனவே சொன்னது போல் விஷ்ணு — ருத்ரா கதை கேட்கும் காட்சிகளில் தொய்வு இருக்கிறது. கத்தரிக்கு வேலை கொடுத்தால் கரெக்ட் ஆகிவிடும்.

ஹரிஷ் கல்யாண் ஒளிப்பதிவு,  ஜென் மார்ட்டின் இசை படத்துக்கு கை கொடுத்திருக்கிறது.

ஓஹோ எந்தன் பேபி — இளஞ் ஜோடிகளின் இன்றைய  காதல் அனுபவம்.

By

ஜெயச்சந்திரன். கே

 

 

 

 

Related posts

BURQA – starring Kalaiarasan and Mirnaa

Jai Chandran

UStream Grand Launch at ARR Film City

Jai Chandran

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிளஸில் நயன்தாராவின் நெற்றிக்கண்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend