Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ரெபல் (பட விமர்சனம்)

படம்: ரெபல்

நடிப்பு: ஜிவி பிரகாஷ் குமார், மகிமா பைஜு, கருணாஸ், கல்லூரி வினோத், ஆதித்யா பபாஸ்கர், ஆண்டனி, வெங்கடேஷ் விபி, ஷாலு ரஹீம், சுப்ரமணியம் சிவா,

தயாரிப்பு: கே ஈ ஞானவேல்ராஜா

இசை: ஜி வி பிரகாஷ்குமார்

இயக்கம்: நிகேஷ் ஆர் எஸ்

பி ஆர் ஒ: யுவராஜ்

மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழர்கள் குறிப்பிட்ட அளவு கேரளாவின் மூணாறு பகுதியோடு இணைக்கப்பட்டனர். தேயிலை தோட்ட தொழிலாளர்களாக அவர்கள் இருந்த நிலையில் ஒரு சிலர்  பிள்ளைகளுக்கு மட்டும் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கதிர், (ஜி.விபிரகாஷ்) இன்னும் சிலர் கேரளா  சித்தூரில் உள்ள கல்லூரியில் சேர்கின்றனர். அங்கு தமிழ் மாணவர்களை மலையாள மாணவர்கள் அரசியல்  கட்சிக்கு பின்னால் நின்றுக் கொண்டு அடிமைப்படுத்தி ரேகிங் என்ற பெயரில் துன்புறுத்துகின்.றனர். பொறுத்துப் பார்க்கும் கதிர் உள்ளிட்ட மாணவர்கள் ஒரு கட்டத்தில் எதிர்ப்பை வெளிப் படுத்துகின்றனர். இது மலையாள மற்றும் தமிழ் மாணவர்களுக்கு இடையே யான மோதலாக மாறு கிறது. இந்நிலையில் கல்லூரி தேர்தல் வருகிறது. இதில் மலையாள மாணவர்கள் இரு அணிகளாக மோதுகின்றனர். அவர்கள் தமிழ் மாணவர்கள் ஆதரவை பெற முயலும்போது கதிர் தனியாக தமிழ் மாணவர்கள் அணி உருவாக்கி தேர்தலில் போட்டியிடுகிறான். இதன் முடிவு கலவரமாக வெடிக்கிறது. இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

காதல் விளையாட்டுக்களில்  ஈடுபட்டு முத்தங்களை அள்ளி வீசிக் கொண்டு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் வயதுள்ள ஜிவி பிரகாஷ் அதை மூட்டை கட்டி வைத்து விட்டு இப்படத்தில் கதிர் என்ற புரட்சி மாணவனாக வேடமிட்டு இருக்கிறார். அவர் ஆஜானபாகு தோற்றத்தில் இல்லாவிட்டாலும் தனது ஆக்ரோஷம், கோபம்,  ஆக்ஷன் மூலம் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி ஆக்ஷன் ஹீரோவுக்கான அம்சங்களையும் நிறைவு செய்கிறார்.

ஆரம்பத்தில் கல்லூரில் சேர வரும் ஜி.வி பிரகாஷ்,  மாணவி மமிதா பைஜுவை பார்த்ததும் காதல் உணர்வு ஏற்பட்டதும் இது தமிழ் மாணவன் மலையாளப் மாணவி காதலாக உருமாறும் அதை வைத்து கதையை நகத்து வார்கள் என்று யோசிக்க வைத்து பின்னர் காட்சிகளில் எதிர்பார்க்.காத திருப்பங்களை கொண்டு வந்து மாணவர்கள் மோதலாக அதை மாற்றி இருப்பது உண்மைக்கு நெருக்கமான காட்சிகளாக இருக்கிறது.

மூணாறில் வாழும் தமிழ் மாணவர்கள் மலையாள மாணவர்களிடம் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தார் களா என்பதை இந்த படம் பார்த்த பிறகு தான் தெரிய வருகிறது.
மலையாள மாணவர்கள் தமிழ் மாணவர்களை ராகிங் என்ற பெயரில் அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்துவது அதிர்ச்சியை தருகிறது. குறிப்பாக ஒரு தமிழ் மாணவரை அடித்து கொல்லும்போது நெஞ்சு பகீர் என்கிறது.

ஜிவி பிரகாஷ் மற்றும் தமிழ் மாணவர்களை அடக்குவதற்காக அரசியல்வாதிகள் தலையிட்டு தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் மாணவர்களின் பெற்றோர்களை வேலை இழக்க செய்து நடுரோட்டிற்கு கொண்டு வந்து கதற விடுவது உருக்கம். ஆனாலும் அவர்கள் தங்கள் பிள்ளைகள் செய்யும் நியாயமான போராட்டத்தை ஆதரித்து குரல் கொடுக்கும்போது ரசிகர்கள் கூறும் அவர்களோடு சேர்ந்து ஒலிக்கிறது.

மலையாள மாணவியாக வரும் மமீதா பைஜூ தமிழ் ரசிகர்களை  மயக்குவார். அவரது பேச்சும் வெள்ளதியான சிரிப்பும் மனதை கொள்ளை கொள்கிறது.

ஜிபி பிரகாஷ் உடன் இணைந்து நடித்திருக்கும் கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கின்றனர்.

கல்லூரி பேராசிரியராக வரும் கருணாஸ் தமிழ் மாணவர்களுக்கு  மறைமுகமாக சப்போர்ட் செய்வது பாத்திரத்தை மெருகேற்றி காட்டு கிறது.

வில்லனாக நடித்திருக்கும் வெங்கடேஷ் விபி அழுத்தமான முத்திரையை பதித்திருக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே இ ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
80 காலகட்டத்தில் நடந்த கதையாக இதனை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் நிகேஷ் ஆர் எஸ். காட்சிகளில் காம்ப்ரமைஸ் ஆகாமல் இறுதிவரை சென்றாலும் கிளைமாக்ஸ்சில் ஒரு காம்ப்ரமைஸை இயக்குனர் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அருண் பழைய ஞாபகங் களை தட்டி எழுப்புகிறார் .

இளையராஜா இல்லாமல் 80ஸ் கதைகளை எடுக்க முடியாது என்ற உண்மை இப்படத்திலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  ஜீவி பிரகாஷ் குமார் பின்னணி இசையில் மிரட்டி இருந்தாலும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் ராஜாவின் இசை தான் மனதை மயக்குகிறது.

ரெபல் மாணவர் புரட்சி – கதையில் வறட்சி

 

 

Related posts

Suriya-Jyotika to produce Karthi-Muthaiah’s project..

Jai Chandran

பொன்னியின் செல்வன்புதினம்: மென்பொறியாளர் புதிய முயற்சி

Jai Chandran

The Songs and Trailer of “VIRUMAN” will be released infront of the fans.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend