வரும் 2021ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் தனிகட்சி தொடங்கி அனைத்து தொகுதியிலும் போடியிடுவேன் மீண்டும் எம் ஜி ஆர் தருவேன் என்று ரஜினிகந்த் 2 வருடத்துக்கு முன் கூறினார்.தந்து ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் எஅல மன்றமாக மாற்றினார். தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்ட நிலையில் ரஜினி தனி கட்சி அறிவிப்பு வெளியிடவில்லை. இந்நிலையுல் ரஜினி வெளியிட்டதுபோல் ஒரு அறிக்கை இணைய தளத்தில் வெளியானது.
இதுகுறித்து அறிந்த ரஜினிகாந்த் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டார். .அதில் ரஜினி கூறியிருப்பதாவது:
என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் பரவி தீவிரமாக பரவிக் கொண்டு இருக்கிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்தி ருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப் பேன்;
இவ்வாறு ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
நெட்டில் வலம் ரஜினி பெயரிலான போலி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016-ம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்கு சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.
கொரோனா தொற்று எப்போது முடியும் என தெரியாத நிலையில் எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு மருத்துவர்கள், ‘கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது, வந்தாலும் அந்த தடுப்பூசியை உங்களுக்கு செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக்கொள்ளுமா? என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது 70. உங்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால் இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்கள்.
இவ்வாறு அந்த போலி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
ரஜினி அரசியல் வருகை குறித்து அவரது அண்ணன் சத்திய நாராயணன் ’ரஜினிக்கு உடல்நிலை குறைவு இருக்கிறது. அவர் நலமுடன் உள்ளார். கொரோனா காலத்தில் அரசியல் பற்றியெல்லாம் எதுவும் சொல்ல வேண்டாம். இன்னும் 2 மாதம் கழித்து அவர் கட்சி பற்றி அறிவிப்பார்’ என்றார்.