Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

குழந்தையின்மை பற்றி பேசும் “வெப்பம் குளிர் மழை” மார்ச் 29ல் ரிலீஸ்

ஹேஷ்டேக்  எப டி எப் எஸ் சார்பில் திரவ் ஹீரோவாக நடித்து தயாரிக்கும் படம் “வெப்பம் குளிர் மழை”. பாஸ்கல் வேடமுத்து இயக்குகிறார். இவர் குற்றம் கடிதல், மகளிர் மட்டும் போன்ற படங்களில் பணியாற்றி இருப்பதுடன் சுழல் வெப்சீரிசிலும் பணியாற்றி இருக்கிறார். இயக்குனர் பிரம்மாவிடமும் உதவ இயக்குனராக பணியாற்றியுள் ளார். முதன்முறையாக இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமா கிறார்.
பிருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.. சங்கர் ரங்கராஜன் இசையமைக்கிறார்.
ஹீரோ த்ரவ் ஜோடியாக இஸ்மத் பானு நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ரமா , கருப்பு, கார்த்திகேயன், தேவ் அபிபுல்லா, விஜயலட்சுமி  நடிக்கின்றனர்.

“வெப்பம் குளிர் மழை” படம் பற்றி இயக்குனர் பாஸ்கல் வேடமுத்து கூறும்போது.”குழந்தையின்மை பிரச்சனை பற்றி இப்படம் பேசு கிறது. அதாவது நம் குடும்பத்தி லோ அல்லது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குடும்பத்திலோ குழந்தைகள் இல்லை என்றால் அதை பெரிய பிரச்னையாக்கி அது பற்றி பூதாகரமாக பேசுவார்கள். இந்த பிரச்சனை சமூகத்தில் தற்போது அதிக அளவு நிலவு கிறது. ஒரு குழந்தை பெற்றுக் கொள்வதே பெரும் பாடாக இருக்கிறது. அது பற்றிதான் இப்படத்தில் பேசப்பட்டிருக்கிறது. குழந்தை இன்மை பிரச்சனை ஏற்படுவது ஏன்? எதற்காக இந்த நிலைமை? என்பதை எல்லாம் இப்படத்தில் அலசி இருக்கிறோம் குழந்தையின்மை என்பது மருத்துவம் சார்ந்த பிரச்சனை அல்ல அது புரிதல் இல்லாததால் ஏற்படும் பிரச்சனை. வாழ்க்கை சார்ந்த ஒரு பிரச்சினையாகவே இது இருக்கிறது. குழந்தை இல்லை என்பது ஒரு நோயாக கருதப்படுகிறது. சொல்லப்போ னால் அது ஒரு நோயே இல்லை என்ற வேறு ஒரு தளத்திலிருந்து இந்த விஷயத்தை நாங்கள் இப்படத்தில் சொல்லி இருக்கி றோம். இது எந்த மருத்துவத் துக்கும் எதிரான படமாக எடுக்கப்படவில்லை. இது ஒரு குடும்பம், ஒரு ஊரின் பிரச்சனையாக இதில் பார்க்கப்படு கிறது.
திரவ் ஹீரோவாக நடித்திருக் கிறார். இஸ்மத் பானு ஜோடி யாக நடித்துள்ளார்.
படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன. எல்லாமே சூழ்நிலைக்கு ஏற்ற பாடலாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. குத்து பாடலோ அல்லது டூயட் பாடலோ கிடையாது. எல்லாம் காட்சிகளை சார்ந்த, கதையைச் சார்ந்த பாடல்களாகவே அமைக்கப்பட்டு இருக்கிறது . சங்கர் ரங்கராஜன் இசைய மைத்திருக்கிறார்.
வெப்பம் குளிர் மழை படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறத. வரும் 29ஆம் தேதி அதாவது மார்ச் 29ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.

இவ்வாறு இயக்குனர் பாஸ்கல் வேடமுத்து கூறினார்.

ஹீரோ- தயாரிப் பாளர் திரவ்   கூறும் போது, “இது நான் ஹீரோவாக  நடிக்கும் முதல் படம். ஏற்கனவே ஒரு குறும்படம் மட்டும் நடித்திருக்கிறேன்.

வெப்பம் குளிர் மழை படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள தாவிடுதிகோட்டை என்ற ஊரில் நடந்தது. இது  படப்பிடிப்பாக இல்லாமல் மக்களுடன் வாழ்ந்த ஒரு அனுபவத்தை தந்தது. படப்பிடிப்பு நடந்த 35 நாட்களும் ஊர் மக்களுடன் நாங்கள் இணைந்து பணியாற்றி இருக்கி றோம். ஊர் மக்களும் சிலர் இதில் நடித்திருக்கின்றனர்.

பட கதாநாயகி இஸ்மத் பானு கூறும்போது,” நான் கதாநா யகி யாக அறிமுகமாகும் முதல் படம் இதுதான் ஏற்கனவே ஒரு சில படங்களில் சிறு வேடங்களில் நான் நடித்திருக்கிறேன். முழுமையான கதாநாயகி வேடமாக இப்படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்த படத்தில் நான் நடித்தது ஒரு நடிப்பு போன்று தெரியவில்லை இயல் பான ஒரு வாழ்க்கையை வாழ்ந்த தாகவே உணர்கிறேன். ஊர் மக்கள் எல்லோரும் எங்களிடம் அன்பாக பழகினார்கள் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ள  பாட்டிகள் எனக்காக சேர்த்து அவர்கள் வீட்டில் சமை யல் செய்வார்கள். அவர்களுடன் அமர்ந்து நான் பல நாள் உணவு சாப்பிட்டு இருக்கிறேன். இது எல்லாமே என்னை ஒரு குடும்ப உறவுடன் தான் வைத்திருந்தது என்று கூற வேண்டும். இப்படம் வாழ்வியல் சார்ந்த ஒரு படமாகவே இருக்கும். அந்த அளவுக்கு உணர்வுபூர்வமாக இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர்.

Related posts

STUDIO GREEN FILMS ENTERS DIGITAL SPACE PARTNERING WITH “FINALLY” YOUTUBE CHANNEL

Jai Chandran

Tamil trailer of Mammootty’s One !

Jai Chandran

நடிகர் கவுதம்- மஞ்சிமா காதல் திருமணம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend