கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து “ஹாட் ஸ்பாட்” என்ற புதிய படம் தயாரிக்கிறார்கள். சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் வெளியீடுகிறார்..
திட்டம் இரண்டு மற்றும் அடியே படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் “ஹாட் ஸ்பாட்” இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
சதீஷ் ரகுநாதன்- வான் இசையமைக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார் முத்தையன் எடிட்டிங் செய்கிறார். இ
இதில் கலையரசன், கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் , திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ் சோபியா நடிக்கிறார்கள்.
வரும் மார்ச் 29ம் தேதி திரைக்கு வர உள்ளது.
முன்னதாக இப்படத்தின் பத்திரிகை, மீடியா நிருபர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடந்தது. இதில் பட குழுவினர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பாலமணி மார்பன் பேசியது:
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கும் நானும் நான்கு வருடமாக பழகி வருகிறோம். லாக் டவுன் காலகட்டத்தில் முதற்கனவே 2 என்ற ஒரு ஷார்ட் பிலிம் உருவாக்கினோம். திட்டம் இரண்டு படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது ஹாட் ஸ்பாட் படத்தின் ஸ்கிரிப்ட் என்னிடம் சொன்னார் எனக்கு பிடித்திருந்தது. தயாரிக்க லாம் என்று கூறினேன். ஒரு வருடத்தில் இப்படத்தை உருவாக்கினோம். சமீபத்தில் படத்தின் டிரைலரை வெளியிட் டோம் அதற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனால் படத்தை எல்லோரும் பார்த்துவிட்டு அதன் பிறகு இது பற்றி கருத்து கூறினால் நன்றாக இருக்கும். அட்டையை வைத்து புத்தகத்தின் மதிப்பை எடை போடக்கூடாது என்பார்கள் அது போல் தான் ட்ரெய்லரை வைத்து படத்தை முழுமையாக கணிக்கக் கூடாது படம் பார்த்துவிட்டு அதன் பிறகு உங்கள் கருத்தை கூறினால் நன்றாக இருக்கும்.
படத்தை வெளியிடுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தது அதன் பிறகு சிக்ஸர் என்டேர்டைன் மென்ட் தினேஷ் கண்ணன் வந்த பிறகு அதற்கும் வழி பிறந்தது.
திட்டம் இரண்டு பட தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் பேசியது:
திட்டம் இரண்டு படத்தை இயக்கி யவர் விக்னேஷ் கார்த்திக். உணர்வுபூர்வமான இயக்குனர் கதையையும் அப்படி கவனமாகவே இயக்குவார்.
ஹாட்ஸ்பாட் படத்தில் டிரைலரை பார்த்து விட்டு யாரும் முழு படத்தையும் எடை போட்டு விட வேண்டாம் முழுமையாக படத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு கருத்துக்களை பகிர்ந்தால் நன்றாக இருக்குlம். இந்தப் படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே துணிச்சலாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துடன் நான் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லோரும் சேர்ந்து ஒரு நல்ல கன்டென்ட் உள்ள படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் கோகுல் பினாய் பேசியது:
ஹாட்ஸ்பாட் படத்தில் எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இப்படம் வெளிவந்த பிறகு இது பற்றி நான் நிறைய பேசுகிறேன் படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்.
எடிட்டர் முத்தையன் பேசியதாவது:
ஹாட்ஸ்பாட் பட ட்ரைலர் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் உங்கள் மனதில் நிறைய கேள்விகள் வந்திருக்கும். அந்த கேள்விகளுக்கு படம் வெளியாகும் நாளான மார்ச் 29 ஆம் தேதி பதில் கிடைக்கும். படத்தில் நடித்திருப் பவர்கள் எல்லோரும் ரொம்பவும் போல்டாக நடித்திருக்கிறார்கள் படம் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்.
இசையமைப்பாளர்களில் ஒருவரான வான் பேசியதாவது:
படத்தை மிகவும் நன்றாக தேர்வு செய்து இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்குவார். அந்த வகையில் இந்த படமும் தேர்வு செய்து இயக்கப்பட்டு இருக்கிறது படம் நன்றாக வந்திருக்கிறது எல்லோரும் பாருங்கள். படத்திற்கு இசை நன்றாக வந்திருக்கிறது.
கோபிநாத் பேசியதாவது:
படத்தில் நடித்தவர்கள் எல்லோரும் போல்டாக நடித்திருக்கிறார்கள் வேறு என்ன பேசுவது தெரிய வில்லை படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.
நடிகை சோபியா பேசியதாவது:
பட இயக்குனர், தயாரிப்பாளருக்கு நன்றி. ஹாட். ஸ்பாட் படத்தை தியேட்டரில் சென்று பார்த்து ரசியுங்கள்
நடிகர் சுபாஷ் பேசியதாவது:
திட்டம் இரண்டு படத்திற்கு பிறகு ஹாட் ஸ்பாட் எனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கிறது.
படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர், தயாரிப்பாளருக்கு நன்றி. உடன் நடித்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும். படத்தின் டிரைலரை எல்லோரும் பார்த்திருப்பார்கள் அவர்களுக்குள் சில கேள்விகள் இருக்கும் எல்லாவற்றுக்கும் படம் வெளி யான பிறகு விடை கிடைக்கும்.
நடிகை அம்மு அபிராமி பேசியது:
ஹாட்ஸ்பாட் பட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குனருக்கு நன்றி.
ஹாட் ஸ்பாட் படத்தின் கதையை நான் இரண்டு முறை கேட்டேன். முதலில் கேட்டபோது அய்யய்யோ இதில்போய் மாட்டினால் என்னாவது என்று நினைத்தேன்
பிறகு இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கிய திட்டம் இரண்டு படத்தை பார்த்தேன் அதன் பிறகு தான் அவரது பாணி எனக்கு புரிந்தது. முடிவில் இந்த படம் ஒரு நல்ல கருத்தைத்தான் செல்கிறது. இருந்தாலும் எனக்கு இன்னொரு முறை கதையைச் சொல்லுங்கள் என்று இயக்கு னரிடம் கேட்டேன் அவர் அழகாக அதை மீண்டும் எனக்கு கூறினார். அப்போதுதான் படத்தில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கு புரிந்தது. இங்கு சொன்னது போல் புத்தகத்தை அதன் அட்டையை வைத்து முடிவு செய்யக் கூடாது முழுவதுமாக படித்துத்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த படத்தில் என்னுடைய போர்ஷன் எனக்கு நன்றாகவே பிடித்திருக்கிறது அதுவரை நான் பார்த்தேன் மற்றவர்கள் நடித்த காட்சிகளை நான் இன்னும் பார்க்கவில்லை. இயக்குனர் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. இது சமூக கருத்துள்ள ஒரு படமாக தான் இருக்கும். ட்ரைலரை பார்த்து யாரும் ஐயையோ என்று நினைத்துவிட வேண்டாம். பொறுப்புடன் தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். கண்டிப்பாக படத்தை பாருங்கள் ஆதரவு தாருங்கள்.

நடிகர் ஆதித்யா பாஸ்கர் பேசியது:
ஒன்றரை வருடத்திற்கு முன்பு ஹாட் ஸ்பாட் படத்தின் ஸ்கிரிப்ட் என்னிடம் கொடுத்தார்கள் அதை படித்தவுடன் எனக்கு மிகவும் பிடித்தது எப்போது படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று காத்திருந்தேன். தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படம் முதலில் பத்திரிகையாளர்கள் பார்வைக்குத்தான் வரும். நீங்கள் திறந்த மனதுடன் பார்த்து அதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் அப்போதுதான் இந்த படம் வொர்க் அவுட் ஆகும். படத்தின் டிரைலர் ஒரு தீர்ப்புக்காக உருவாக்கப் படுவது கண்டிப்பாக படம் யாரும் முகம் சுழிக்கும் படி இருக்காது. எந்த இடத்திலும் இயக்குனர் கண்ணியத்தை விட்டுக் கொடுத்தது போல் எனக்கு தெரியவில்லை. படத்தில் நான்கு கதைகள் இருக்கிறது அதை இயக்குனர் பார்த்துத்தான் இயக்கியிருக்கிறார் அவரது பார்வையை நடிகர் நடிகையின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். அதே பார்வையுடன் நீங்களும் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். படத்தை ஒரு முறை பார்த்து விடுங்கள் அதன் பிறகு என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம்.
நடிகர் கலையரசன் பேசியது
ட்ரெய்லர் பார்த்த பிறகு அரங்கில் ஒரு மயான அமைதி இருக்கிறது எனக்கும் அந்த உணர்வு ஏற்பட்டது. நான் என்னுடைய போர்சன் கதையை மட்டும் தான் கேட்டேன் நடித்த மற்றபடி கதை எனக்கு தெரியாது. இப்பட ட்ரெய்லர் வெளியான பிறகு இன்டஸ்ட்ரியல் இருந்து நிறைய பேர் போன் செய்து என்ன நடிச்சிருக்க உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா என்று தான் கேட்டார்கள். ஆனால் ஒவ்வொரு இயக்கு னர்களுக்கும் கதை சொல்வதில் ஒவ்வொரு பாணி இருக்கிறது என்னுடைய போர்ஷன் கதையை சொல்லும்போது எனக்கு அது பர்சனலாக தொடர்பு ஏற்பட்டது அதனால்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். இயக்குனர் விக்னேஷ் ஏற்கனவே யுவர் ஷேம்ஃபுல்லி என்ற ஒரு ஷார்ட் பிலிம் இயக்கியிருநதார்.
ஹாட்ஸ்பாட் படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள் இதை ட்ரைலரை பார்த்து விட்டு தான் நான் சொல்கிறேன். படத்தை பார்த்த பிறகு ஏதாவது ஒரு விஷயத்தை நாம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு கருத்து இருக்கும் அதற்காக பெரிய மெசேஜ் சொல்லி இருக்கி றோம் என்ற அர்த்தம் இல்லை. என்னுடைய போர்ஷன் வரை ஏதாவது ஒரு கனெக்ட் எல்லோருக்குமே இருக்கும்.
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் பேசியது
ஹாட். ஸ்பாட் படம் ரொம்பவுமே நெருக்கமான படம் ஏனென்றால் என்னுடைய நண்பர்கள் சுரேஷ் மற்றும் பாலா இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். என் மீது இருக்கும் நம்பிக்கையில் இந்த படத்தை அவர்கள் தயாரித்திருக் கிறார்கள். படத்தில் நடித்திருக்கும் கலையரசன் உள்ளிட்ட அனைவருமே என்னையும் கதையுமே நம்பி நடித்துக் கொடுத்திருக்கிறார்கள் அவர்களுடன் என்னால் இணக்கமாக பணியாற்ற முடித்தது. அதுபோல் இசை அமைப்பாளர் ஒளிப்பதிவாளர், எடிட்டர் எல்லோருமே நன்றாக பணியாற்றி இருக்கிறார்கள்
ஹாட்ஸ்பாட் பட டிரைலர் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் ஏற்கனவே நான் இயக்கிய யுவர்ஸ் சேம்ஃபுல்லி குறும்படம் எந்த ஒரு பாதிப்பை ஏற்படுத்தியதோ அதே பாதிப்பை தான் இந்த ட்ரெய்லரும் ஏற்படுத்தி இருக்கும் என்று நான் நம்புகிறேன். மனசாட்சிக்கு விரோதமாக எப்போதுமே ஒரு கருத்தை சொல்லக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன் அதேபோல் தான் இந்த படத்தில் மிகவும் கவனமாக கதையையும் காட்சிகளையும் கையாண்டு இருக்கிறேன். ட்ரைலரை பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக கேள்விகள் இருக்கும் அதற்கு படம் பதில் சொல்லும். சமூக பொறுப்புணர்ந்துதான் இப்படத்தை உருவாக்கி இருக்கி றோம். உதவி இயக்குனர்கள் மற்றும் பிஆர்ஓ வேலு ஆகியோருக்கு நன்றி.
திட்டம் 2 பட தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் இந்த படத்தில் இணைந்து படம் வெளியிடுவதில் உதவி இருக்கிறார். அனைவரும் படத்தை பாருங்கள்.
