Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இலங்கை பிரதமராக ரணில் விக்ரம்சிங்கே பதவி ஏற்றார்

சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இலங்கை பல. ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறது அதை திருப்பி செலுத்த முடியாதநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் பொருளாதா நெருக்கடி முற்றியது. விலைவாசிகள் விஷம்போல் உயர்ந்தது. இதையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய வலியுறுத்தி மக்கள், மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். நாளுக்கு நாள் போராட்டம் அதிகரித்தது. ஆனாலும் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய மறுத்துவந்தார்.

கடந்த சில நாட்களுக்குமுன் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதையடுத்து பிரடல்தமர்  பதவியை  ராஜினாமா செய்தார். ஆனாலும் அவரது ஆதரவாளர் கள் போரட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். போலீஸாரும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி போராட்டக் காரர்களை கலைத்தனர்.
இதையடுத்து போராட்டம் தீவிரமடைந்தது. ராஜபக்சே ஆதரவாளர் களை போரட்டக்கரர்கள் தேடித் தேடி தாக்கினர். இதற்கிடையில் மகிந்த ராஜ பக்சே வீட்டை போரட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.இதில் வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது.

இதற்கிடையே கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகொரலா போரட்டக்கரர்களை துப்பாக்கியால் சுட்டார். இதில் சிலர் பலத்த காயமடைந் தனர். மருத்துவனையில் சேர்க்கப்பட்ட இளைஞர் பலியானார். இதில் கோபமமடைந்த போராட்டக்கரர்கள் துப்பாக் யால் சுட்ட அமரகீர்த்தியை அடித்தே கொன்றனர அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.
தற்போது இலங்கை முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. ராணுவம் ஊரில் ரோந்து சுற்றி வருகிறது.  இந்நிலையில்  இலங்கையில் அடுத்து பிரதமர் பதவியை யார் ஏற்பது என்ற. கேள்வி எழுந்தது. . அதற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே இலங்கை பிரதமராக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண் டார். 6 வது முறையாக இவர் இலங்கை பிரதமராக பொறுப்பெற்றிருக்கிறார். ரணில் தலைமையிலான 15 பேர் கொண்ட அமைச்சர்கள் நாளை பதவி ஏற்க உள்ளனர்.

இதற்கிடையில் கோத்தபய ராஜபக்சே ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும் என்று போரராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். ஆனால் கோத்தபய ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைத்துக்கொள்ள தயார் என அறிவித்துள்ளார். இதற்கு மக்களின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை பொருத்திருந்துதான் பாரர்க்க வேண்டும் .

இந்நிலையில் பதவி விலகிய மகிந்தராஜ பக்சே இலங்கையின் திரிகோணமலை பகுதியில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது அவர் வெளிநாடு செல்ல அந்நாட்டு நீதிமன்றம்  தடை விதித்துள்ளது.

Related posts

ஜியோ ஹாட்ஸ்டார் தமிழ் முடக்கப்பட்டதா? ‘குற்றவாளி’ யார் தெரியுமா?

Jai Chandran

பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் கமலின் விக்ரம்

Jai Chandran

ட்ரெண்டிங் ஆகும் பகாசூரன் பட பாடல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend