நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 20 வது ஆண்டு,, நினைவு தினமான இன்று ராம்குமார், துஷ்யந்த் ராம்குமார், தர்ஷன் ராம்குமார் சென்னை அடையாரில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
பின்னர் ராம்குமார் கூறும் போது,’ நடிகர் திலகம் மக்களின் சொத்து. அவர் முதலில் இந்தியன் பிறகு தமிழன். அவரது சிலையை ஐயா கலைஞர் அமைத்தார், மணிமண்டபத்தை ஜெயலலிதா அம்மா அமைத்தார். அவர் எல்லா கட்சிக்கும் அப்பாற்பட்டவர் என்று அம்மாவே சொல்லி இருக்கிறார்.
இவ்வாறு ராம்குமார் கூறினார்.