Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அறிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி என்கிற முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான தொழிலாளர்கள் சம்பளம், பொது விதிகளுக்கான பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடைபெற்று வருகிறது. மேலும், வருகிற 3.3.2022 அன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதன்பின்னர் இரு சாராரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட உள்ளார்கள்.

மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலாக்கப்படும் வரை படப்பிடிப்பு மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள சம்பளத் தொகையினை மட்டுமே தயாரிப்பாளர்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறது.
மேலும், தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள சங்கத்தின் உறுப்பினர்கள் புதிய சம்பளத்தை தர வேண்டும் என்று தயாரிப்பாளர்களை வற்புத்த கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts

புதிதாக பதவி ஏற்ற எம் எல் ஏக்களுக்கு கமல் வாழ்த்து

Jai Chandran

“டங்கி” படத்தை வெளியிடுகிறது ஸ்ரீ கோகுலம் மூவிஸ்

Jai Chandran

கமலின் மக்கள் நீதி மய்யம் 8-ம் ஆண்டு தொடக்க விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend