தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
வரலாற்று சிறப்புமிக்க தமிழ் நாட்டின் முதல்வராக மகுடம் சூட்டப்பட்டதிலிருந்தும், உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி வாகை சூடியதிலிருந்தும் மக்களின் நம்பிக்கை நீங்கள் எனத் தெளியத் தெரிகிறது.
அந்நம்பிக்கையை பொய்யாக்கிவிடாமல் நல் அறிவிப்புகளோடு , சிறந்த செயல்பாடுகளின் மூலம் நாளும் மகிழ்வை மக்களுக்கு திரும்பத் தந்துகொண்டிருக்கிறீர்கள்.
எங்கள் திரைத்துறையையும் கனிவோடு கவனித்துக் கொள்கிறீர்கள். மகிழ்ச்சி!
அதேபோல தங்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். மக்கள் அபிமான முதல்வராக, தமிழகம் பார்த்த நல் முன்னோடி களின் பட்டியலில் தாங்களும் ஒருவராக காலத்தால் என்றும் நிலைத்திருக்க அந்த இறைவன் அருள் புரியட்டும். திராவிட வளர்ப்பு நீங்கள். கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையான்னு தெரியாது. ஆனால் அடுத்தவர்களின் மனதை மதிப்பவர் என்பதை திருமதி. துர்க்காவின் இறை நம்பிக்கைக்கு மதிப்பளித்திருப்பதின் மூலம் தெரிந்திருக்கி றேன்.
எனவே என் இறை வேண்டுதலையும் ஏற்பீர்கள் என நினைக்கிறேன்.
நலமுடன், நிறைந்த மக்கள் பலத்துடன் தமிழகத்தின் முதல் மகனாக என்றும் வீற்றிருக்க வாழ்த்துகிறோம்.
இப்பிறந்த நாளில் நீங்கள் ஆசிக்கும் எல்லா வரமும் வாய்க்கட்டும்.
என் சார்பாகவும், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.. நீடூழி வாழ்க.
இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தெரிவித்திருக்கிரார்.