Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனா பரிசோதனைக்கு போன நடிகருக்கு கேன்சர் பாதிப்பு தெரிந்தது..

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இவரது மனைவி, பிள்ளைகள் வெளிநாட்டிற்கு சென்று கொரோனா ஊரடங்கால் திரும்ப முடியாமல் அங்கேயே தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இரண்டு தினத்துக்கு முன் சஞ்சய் தத்துக்கு மூச்சுவிட முடியா மல் தவித்தார். மூச்சு திணறலுடன் வீட்டி லிருந்து அவர் மும்பை தனியார் மருத்துவ மனைக்கு சென்றார். அவ்ருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று இல்லை என்பது தெரிந்தௌ. இதில் நிம்மதி அடைந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது மூச்சு விடுவதில் இருந்த சிரமம் நீங்கியது. அவர் மகிழ்ச்சி அடைந்தார். சில மணி நேரத்தில் அவருக்கு மற்றொரு அதிர்ச்சி தகவலை டாக்டர்கள் தெரிவித்தனர்.
‘உங்களுக்கு நுரையீரலில் கேன்சர் பாதிப்பு 3வது கட்டத்தில் இருக்கிறது’ என்றனர். அதைக்கேடு அதிர்ச்சி அடைந் தார் சஞ்சய்.
கேன்சர் பாத்தித மறைந்த நடிகர் ரிஷிகபூர் மற்றும் நடிகை மனீஷா கொய்ராலா ஆகியோர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றனர். அதுபோல் தானும் அமெரிக்க சென்று சிகிச்சை பெற முடிவு செய்தார். இதையடுத்து மும்பை மருத்துவமனை யிலிருந்து வீடு திரும்பினார். அமெரிக்க சென்று சிகிச்சை பெற உள்ளதால் சஞ்சய் தத் நடிப்பிலிருந்து அடுத்த 6மாதத்துக்கு ஒய்வு கொடுத்திருக்கிறார்.
தனது உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க உள்ளேன். சிகிச்சை முடிந்து விரைவில் சந்திப்பேன் என சஞ்சய் தத் தெரிவித்திருக்கிறார்.

Related posts

சினிமாவில் 3 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்

Jai Chandran

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட 2ம் பாடல் அப்டேட்

Jai Chandran

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் உதயா வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend