திமுக எம்.பி. கனிமொழி சென்னை விமான நிலையம் வந்தார், அப்போது அங்கிருந்த பெண் பாதுகாவலர் ஒருவர் இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா? என கேட்டதாக தகவல் வெளியானது. இது கடும் சர்ச்சையை எழுப்பியது. இதுகுறித்து அனைத்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
’இந்தி தெரிந்த மத்திய ஊழியர்களை ஆங்கிலமும் தெரிந்து கொள்ள வலியுறுத்த வேண்டும்’ என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலையத் தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிற் பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்திருக் கிறது. பின்னர் கனிமொழி எம்பி யிடம் கேள்வி கேட்ட பெண் காவலரிடம் விசாரணை நடை பெற்றது.
இதுபற்றி திமுக நாடாளுமன்ற உறுப் பினர் கனிமொழி சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
இந்தியரா என்று என்னிடம் கேள்வி கேட்ட பெண் காவலர் மீது நடவடிக்கை எடுத்த சி.ஐ.எஸ்.எப். அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன், இந்தி தெரியாது. இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று சொல்வட்து அவமானம்
இவ்வாறு கனிமொழி கூறினார்.