மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான குமாரசாமி அவர்களை இன்று டெல்லியில் நேரில் சந்தித்து திரு.சரத்குமார் அவர்களும், திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களும் மகள் வரலஷ்மி சரத்குமார் அவர்களின் திருமண அழைப்பிதழை வழங்கினார்கள். மேலும், கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கு தங்கள் நல்வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 4 – வது முறையாக பதவியேற்கவுள்ளவருமான திரு.சந்திரபாபு நாயுடு அவர்களை இன்று டெல்லியில் திரு.சரத்குமார் அவர்களும், திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களும் நேரில் சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து, மகள் வரலஷ்மி சரத்குமார் அவர்களின் திருமண அழைப்பிதழை வழங்கி, திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர்.