Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பொன்னியின் செல்வன் -1 (பட விமர்சனம்)

படம்: பொன்னியின் செல்வன் -1

நடிப்பு: விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரகாஷ்ராஜ், இராதா கிருஷ்ணன் பார்த்திபன், ரகுமான், பிரபு, விக்ரம் பிரபு, நிழல்கள்ரவி, நாசர், ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஜெயசித்ரா, சோபியா துலிபாலா, ஐஸ்வர்யா, லட்சுமி மற்றும் பலர்

தயாரிப்பு: லைகா புரடக்ஷன் சுபாஸ்கரன், மெட்ராஸ் டாக்கிஸ் மணிரத்னம்

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு : ரவிவர்மா

திரைக்கதை: மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல்

வசனம்: ஜெயமோகன்

இயக்கம்: மணிரத்னம்

பி ஆர் ஒ: ஜான்சன்

எப்போது திரைப்படமாகும் என தமிழர்களின் நெடுநாள் கனவாக இருந்து வந்த அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை படமாக்கிய லைகா புரடக்‌ஷன் சுபாஸ்கரன், மெட்ராஸ் டாக்கிஸ் மணிரத்னம் இருவருக்கும் முதலில் நன்றியும் வாழ்த்தும் சொல்ல வேண்டும்.

கதை:
நந்தினியை (ஐஸ்வர்யாராய்) காதலிக்கும் ஆதித்த கரிகாலன் அவள் ஒரு ஆதரவற்றவள் என்பதால் சோழர்கள் எதிர்ப்ப துடன் விரட்டியடிக்கப்படுகிறாள். . அவள் சோழர் ராஜ்ஜிய நிதி அமைச்சர் பெரு பழுவேட்டை யாரை மணந்துக்கொள்கிறாள். அவளுக்குள் சோழ சாம்ராஜ்ஜியத் தை அழிக்க வேண்டும் என்ற தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த நிலையில் சோழ சக்ரவர்த்தியால் சிவனடியாராக அர்ப்பணிக்கப்பட்ட மதுராந்தகனை (ரகுமான்) மன்னராக்க எண்ணும் பெரு பழுவேட்டையார் (சரத்குமார்), சின்ன பழவேட்டையார் (பார்த்திபன்) அதற்கான சதிதிட்டம் தீட்டுகின்றனர். ஆனால் தனது இன்னொரு வாரிசான அருண் மொழியை (ஜெயம் ரவி) மன்னராக முடிசூட்ட எண்ணும் சோழ சக்ரவர்த்தி (பிரகாஷ்ராஜ்) இலங்கையிலிருக்கும் அருண் மொழியை அழைத்து வரச் சொல் கிறார். இதில் குறுக்கிடும் பழவேட் டையார் அருண்மொழி வர மறுத் தால் அவரை கைது செய்து அழைத்து வர சக்ரவர்த்தியை ஆணையிடச் செய்கிறார். சோழ சாம்ராஜ்ஜியத்தில் நடக்கும் சதியை அறிந்துவர வந்திய தேவனை (கார்த்தி) அனுப்பி வைக்கிறார் ஆதித்த. கரிகாலன்.  போரில் சோழ அரசனால் நாட்டை இழந்த பாண்டியர்கள் அருண் மொழியை கொல்ல முயல்கின் றனர். அவர்களிடமிருந்து அருண்மொழி தப்பினானா? நந்தினியின் சூழ்ச்சி, பெரு பழுவேட்டையாரின் சதி போன்றவை என்னவாகிறது என்பதற்கு படம் பதில் அளிக் கிறது.

குதிரையில் அமர்ந்து வாளுடன் ஆவேசம் பொங்க எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க புழுதிபறக்க விக்ரம் பாய்ந்து செல்ல ரசிகர் களின் விசில் சத்தத்துடன் படம் தொடங்குகிறது.

கத்தியுடன் விக்ரமும் அவருடன் இணைந்து போராடும்  வந்தியத்தேவன் கார்த்தியும் எதிரிகளை வீழ்த்தி முதல்காட்சியை துடிப்புடன் ஆரம்பித்து வைக்கின்றனர்.

விக்ரமின் ஆணைப்படி சோழ நாட்டில் நடக்கும் சதியை அறிந்துவர கார்த்தி புறப்பட்டு தஞ்சைக்கு வந்தபிறகு கார்த்தியின் அட்டகாசம் இடைவேளை வரை நீடிக்கிறது. காலாளிகளை ஏமாற்றிவிட்டு அரண்மனைக்குள் நுழைந்து பெருபழு வேட்டையார் சரத் குமாரை சந்திப்பது, பல்லக்கில் செல்லும் நந்தினி ஐஸ்வர்யா ராயை சந்திக்க காவலர்களை மீறிச் சென்று பல்லக்கு மீது குதிரையை மோதச் செய்வது, அருண்மொழி ஜெயம் ரவியை சந்திக்க அவருடனே கத்திச் சண்டையிட்டு அவர் மனதில் இடம் பிடிப்பது, குந்தவை திரிஷாவை சந்திக்க தந்திரமாக கம்சன் வேடமிட்டு நடனம் ஆடி அவரை கவர்வது என வந்தியத்தேவன் இப்படித்தான் துடிப்பும், சேட்டையும் நிறைந்தவனாக இருப்பானோ என்று மனதில் அசைக்க
முடியாத இடம் பிடித்துக் கொள்கிறார் கார்த்தி.

ஆதித்த கரிகாலன் விக்ரமின் ஆக்ரோஷம் நந்தியின் பெயரை கேட்டதும் பொங்கி வருவதும், “நந்தியின் கழுத்தை வெட்டுவேன் இல்லாவிட்டால் அவள் கையால் நான் சாவேன்” என்று தன் காதலை பொசுக்கிய ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் மீது விக்ரம் காட்டும் பழி உணர்ச்சி திரையை தீப்பிடிக்க வைக்கிறது.

அருண்மொழி ஜெயம் ரவி இடைவேளைக்கு பிறகே என்ட்ரி கொடுத்தாலும் நடிப்பில் குறை வைக்கவில்லை. இளவரசருக்கே உரித்தான தோற்றம் இலங்கை யில் அரச பதவியே கிடைத்த போதும் அதற்கு ஆசைப்படாமல் அன்பாக மறுத்து விலகுவதுமாக வேடத்தின் தன்மையை உயர்த்தி காட்டுகிறார் ரவி.

கார்த்தியும் ரவியும் மோதும் சண்டைக் காட்சி இருவரையும் நண்பர்களாக்கும் என்றும் கணிக்க முடிகிறது.

பெருபழுவேட்டையராக கம்பீரமாக வரும் ஆர் .சரத்குமார். மதுராந்  தகன் ரகுமானை மன்னராக்க போடும் திட்டங்களும் அரசியல் சூழ்ச்சிகளும் வாழைப் பழத்தில் ஏற்றும் ஊசியாக அவர் வில்லன் வேலையை செய்கிறார் என்பது தெரியாமல் எதார்த்தமாக வெளிப் படுத்தி கதையின் நகர்வுகளுக்கு சக்கரம் கட்டிவிடுகிறார் சரத்.

சின்னபழுவேட்டையராக வரும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் கார்த்தியை பிடித்து விசாரிக்கும் போது காட்டும்முறைப்பு பயமுறுத்துகிறது. ஆழ்வார்க்கடியாராக வரும் ஜெயராம் கலகலக்க வைக்கிறார்.

pp

பேரழகி என புகழப்படும் நந்தினி  யாக நடிக்க ஐஸ்வர்யாராயை விட்டால் வேறுயாரையும் யோசிக்க முடியவில்லை போதைப் பார்வையில் சரத்குமாரின் கோபத்தை பஞ்சாய் பறக்க விடுவது, சக்ரவர்த்தியின் சிம்ம சானத்தை கண்டதும் கண் பார்வையால் அரசியாகிவிட்ட கற்பனையை வெளி யிடுவதெல் லாம் பாலிவுட் நடிகையாக இருந்த போதும் கதையையும், கதாபாத் திரதையும் எப்படி உள்வாங்கி யிருக்கிறார் என்பதை உணர்த்து கிறது. இவரது மற்றொரு கதாபாத்திரமான ஊமை ராணி தோற்றம் முதல் பாகத்தின் முடிவில் காட்டப்படுகிறது அதற்கு இரண்டாம் பாகத்தில் முக்கியத் துவம் பிரதானமாக இருக்கும் என எதிர்பார்க்க வைக்கிறது.

குந்தவையாக திரிஷா. அழகிலும் நடிப்பிலும் ஐஸ்வார்யாராயுடன் போட்டியிட்டிருக்கிறார்.

சோபியா துலிபாலா, ஐஸ்வர்யா பாத்திரங் களும் நினைவில் நிற்கிறது. நாசர் ஒரே காட்சியில் தலைகாட்டுகிறார்.

படத்தில் பிரமாண்ட அரங்குகள் இல்லையே என்ற குறை தெரியாமல் காட்சிகளை பிரமாண்ட இசை மூலம் ஆரவார மாக கொண்டு செல்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ரவிவர்மனின் கேமிரா சில காட்சிகளை காண கண்கள் இரண்டு போதாது என எண்ண வைக்கிறது.

சினிமாத்தனம் இல்லாமல் காட்சிகள் இருக்க வேண்டும் என இயக்குனர் மணிரத்னம் எண்ணியதன் விளைவு பிரமாண்ட அரண்மனை அரங்குகள், மாறுபாட்ட வாள், உடை, யானை, குதிரைப்படை என எல்லாவற்  றையும் கட்டுக்குள் கட்டிவைத்தி ருப்பது தெரிகிறது. ஆனால் திரைக் கதையின் தெளிவு கதையையும் கதாபாத்திரங்களை யும்யும் எளியவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப் பட்டிருப்பது பெரிய பிளஸ். இதில் மணிரத்னம் டச் என்று முத்திரை வைக்காமல் முழுக்க சோழர்களின் அரசியலை சிந்தாமல் சிதைக் காமல் கண்முன் படைத்து காட்டியிருக்கிறார்.

ஜெயமோகன் வசனம் இலக்கிய தமிழாக இல்லாமல் எதார்த்த தமிழாக பாமரனையும் அரவணைக்கிறது.

எடிட்டிங், வி எஃப் எக்ஸ், எல்லாமே வெற்றிக்கு துணை நின்றிருக் கிறது.

கிளைமாக்ஸ் பொன்னியின் செல்வனும், வந்தியதேவனும் கடலில் மூழ்குவதோடு நிறைவ தால் அவர்கள் கதி என்னவாகிறது என்பதை அறிய வரும் 2023ம் ஆண்டில் வெளியாகும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.

பொன்னியின் செல்வன் 1 -தமிழர்களின் பெருமை.

 

Related posts

விஜய் ஆண்டனியை பார்த்து வியந்தேன்: கவுதம் மேனன் பேச்சு

Jai Chandran

Kuzhali wins 3 awards at Mokkho Film Festival

Jai Chandran

Romeo Pictures acquires the release rights of “DEAR”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend