சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனாழுத்தம் வாரிசுகளின் புறக்கணிப்பால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் நேற்று சுஷாந்த் தந்தை தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் பாட்னா போலீசில் சுஷாந்த் தற்கொலைக்கு காதலி ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என திடீர் புகார் அளித்தார்.
சுஷாந்த்தும் ரியாவும் காதலித்திருக் கின்றனர். ரியா சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. ரியா சக்ரபோர்த்தி தெலுங்கில் துனீகா துனீகா, இந்தியில் மேரே டாட் கி மாருதி, சோனாலி கேபில் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
அதில் கூறியதாவது:
சுஷாந்த் மும்பையை விடுத்து கேரளாவில் கூர்க் சென்று வாழ முடிவு செய்தார். ரியாவை அழைத்த போது மும்பையை விட்டு வர மறுத்துள்ளார். சுஷாந்த் வெளியூர் போய்விடுவார் என்பதால் அவரது பணம், நகைகள், கிரெடிட் கார்டுகள், தஸ்தாவேஜ்கள் லேப்டாப், மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாவற்றையும், ரியா எடுத்து சென்றிருக்கிறார். தனது செல்போனிலிருந்து சுஷாந்த்தின் போன் நம்பரை டெலிட் செய்தார்.
மனநலம் பாதிக்கப்படிருப்பதால் தனது எல்லா தஸ்தாவேஜ்கள் ரியாவிடம் உள்ளது. இனிமேல் எனக்கு பட வாய்ப்பு வராது என் மீடியாக்களுக்கு பேட்டி அளிக்க சுஷாந்த்தை மிரட்டி உள்ளார், தனது சகோதரியிடம் சுஷாந்த் இதுபற்றி தெரிவித்திருக்கிறார்.
சுஷாந்த நன்றாகத்தான் இருந்தார். ரியாவை சந்தித்த பிறகுதான் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். சுஷாந்தை தனது வீட்டுக்கு அழைத்து ஓவர் டோஸ் மாத்தி ரைகள் கொடுத்திருக்கிறார். சுஷாந்த்தை புதிய படங்கள் ஒப்புக்கொள்ள முடியாத படி அவரை மிரட்டி உள்ளார். தன்னை ஹீரோயினாக நடிக்க வைத்தால்தான் படம் ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லா விட் டால் அந்த படத்தை ஏற்கக்கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். சுஷாந்த் கணக்கில் ரூ .17 கோடி இருந்தது ஆனால் சில மாதத்தில் ரூ 15 கோடி யாருக்கோ மாற்றபட்டிருக்கிறது. இது சுஷாந்துக்கு சம்பந்தப்படாத நபருக்கு சென்றிருக்கிறது. ரியா மற்றும் கூட்டாளி கள் இதில் சம்பந்தப்பட்டிருக் கின்றனர். இதுபற்றி விசாரணை நடத்தி தக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு சுஷாந்த் தந்தை தெரிவித்திருக் கிறார்.