Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் கட்டுப்பாடுகளுடன் சுப்ரீம் கோர்ட் அனுமதி..

கொரோனா 2வது அலை இந்தியாவில் கோர தாண்ட வம் ஆடிவருகிறது. பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். லடசக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் மருத்துவ மனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் உடனடியாக ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் உள்ள ஸ்டெர் லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயரித்து இலவசமாக வழங்க தயார் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதுகுறித்து தமிழக அரசு விரைந்து முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதுகுறித்த பிரமாண பத்திரம் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தமிழக அரசுக்கு உத்தர விட்டது.


இதையடுத்து தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி அனைத்து கட்சி கூட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுத்தார்.
இந்த கூட்டம் இன்று காலை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை யில் நடந்தது. முதல்வர் எடப்படி பழனிசாமி தலைமை தங்கினார். துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், திமுக சார்பில் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜ க உள்ளிட்ட அங்கீகரிக்கப் பட்ட 8 கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அவரவர்கள் தங்கள் தரப்பில் கருத்துக்களை தெரிவித்தனர்.
இறுதியில் ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்க தற்காலிக அனுமதி அளிக்கலாம் என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தூத்துக் குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில்பிரமான பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இரண்டு கோரிக்கைகள் முக்கியமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் வேறு எந்த பணிகளும் நடக்க கூடாது, ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழகத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் முதலில் தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.


தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்ஸிஜனை தமிழக அரசிடம் வழங்க வேண்டும். ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பதை கண்காணிக்க மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழுவிலிடம் பெற வேண்டும் என்றனர்.
இதற்கு மத்திய அரசும் வேதாந்தா நிறுவனமும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே உள்ளூர் மக்களால் ஆலை மிகுந்த பாதிப்பபை சந்தித்துள்ளது, ஆக்ஸிஜனை முழுவதையும் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் மத்திய அரசு தேவையான மாநிலங்களுக்கு பிரித்து தரும் என்றனர்.

வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எல்.நாகேஸ் வரராவ், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு பின்னர் இறுதி உத்தரவு பிறப்பித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-
ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் திறப்பதற்கு அனுமதிக்கப்படு கிறது. ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும். இந்த குழுவை தேசிய சுற்றுச்சுழல் பொறியியல் ஆய்வு மையம் தேர்வு செய்யும். மேற்பார்வை குழுவில் உள்ளூர் மக்கள் 2 பேர் இடம் பெற செய்யலாம். இது தொடர்பாக தமிழக அரசுடன் ஆலோசித்து உள்ளூர் மக்களை குழுவில் இணைத்து கொள்ளலாம்.
உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய தொகுப்புக்கு வழங்க வேண்டும். தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க இயலாது. மாநிலங்களுக்கு தேவையான அளவை மத்திய அரசே முடிவு செய்யும். மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப மத்திய அரசே பிரித்து அளிக்கும்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கப்படு கிறது. இது ஆக்சிஜன் உற்பத் திக்காக மட்டும்தான். வேதாந்தா குழுமத்தின் வேறு எந்த ஆதாயத்துக்காகவும் அல்ல. ஆக்சிஜன் தயாரிப்புக்கு தேவையான மின்சாரத்தை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். ஆலைக்குள் செல்பவர்கள் விபரங்களை வேதாந்தா நிறுவனம் கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

விக்ரம் நடிக்கும் ‘ வீர தீர சூரன் 2 ‘ படத்தின் டீசர் வெளியீடு

Jai Chandran

Dhoni Met Actor Vijay

Jai Chandran

Suriya’s ‘Vishwanath & Sons’ Teaser Unveile..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend