Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தியேட்டர் திறப்பு : முதல்வருக்கு டி ராஜேந்தர் நன்றி

கொரோனா ஊரடங்கில் கடந்த 7 மாதமாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் வரும் 10ம் தேதி முதல் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கினார்.  அதற்கு நன்றி தெரிவித்திருக் கிறார். டி ராஜேந்தர்.

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி. ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை :

 

திரையுலகை திக்குமுக்காட வைத்தது பல வலி,
திரையரங்குகளை திறக்க வழி வகுத்தது தீபாவளி,
திரையுலகினரின் வாழ்வில் தெய்வ அருளால் வீசட்டும் தீப ஒளி.

திரையரங்குகளை நவம்பர் 10ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன இயங்க அனுமதி வழங்கி திரைத்துரையினரின் வாழ்வில் ஓளி வீச வழி வகுத்து தமிழக திரையுலகிற்கு நம்பிக்கை ஒளி ஏற்றிய ஒளிவிளக்கு புரட்சித்தலைவர் வழி வந்த புரட்சித்தலைவி அம்மா அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்களுக்கும், ஏனைய அனைத்து தமிழக அமைச்சர்களுக்கும் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு டி. ராஜேந்தர் கூறி உள்ளார்.

Related posts

Prabhas in the poster of Radhe Shyam’s new song ‘Raegaigal’!

Jai Chandran

கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியீடு

Jai Chandran

லோகேஷ் கனகராஜ், உறியடி விஜயகுமார் இணைந்த ஃபைட் கிளப்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend