படம்: ஊமைச் செந்நாய்
நடிப்பு: மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி, சாய் ராஜ்குமார், கஜராஜ், ஜெய்குமார், அருள் டி ஷங்கர்
தயாரிப்பு: ஆக்ஷன், ரியாக்ஷன் நிறுவனம், லைப் கோஸ் ஆன் பிக்சர்ஸ்
இசை:சிவா
ஒளிப்பதிவு: கல்யாண் வெங்கட் ராமன்
இயக்கம்: அர்ஜூனன் ஏகலைவன்
பி ஆர் ஓ : A.ஜான்
அமைச்சர் ஒருவரிடம் 15 வருடமாக பிஏ வாக இருந்தவர் திடீரென்று விடை பெற்றுச் செல்கிறார், தன்னைப்பற்றிய ரகசியத்தை அவர் எதிர் கட்சிக்காரர்களிடம் சொல்லிவிடுவார் என்ற எண்ணத்தில் தனியார் டிடெடக்டிவை வைத்து கண்காணிக்கிறார் அமைச்சர். இதில் பெரிய துப்பு எதுவும் கிடைக்காத நிலையில் மாஜி பி ஏவை கடத்தி வந்து எதிர்கட்சியிடம் சொன்ன ரகசியம் பற்றி கேட்கின்றனர். அவர் அதுபற்றி சொல்ல மறுத்தாலும் அமைச்சரின் ரகசிய வீடியோ ஒன்றை எதிர்கட்சியினரிடம் பல கோடிக்கு பேரம் பேசி விற்க இருக்கிறார் என்ற ரகசியம் தெரியவருகிறது. அந்த வீடியோவை கைப்பற்ற அமைச்சரின் ஏவலர்கள் நடத்தும் தாக்குதலில் மாஜி பி ஏ நிலை என்னவாகிறது? அவரது குடும்பத்தினர் கதி என்னவாகிறது? என்பதை பரபரப்பாக சொல்கிறது படம்.
பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் மைக்கேல் தங்கதுரை, அமுதாவாக சனம் ஷெட்டி, சேதுவாக சாய் ராஜ்குமார், ரத்னமாக அருள் டி ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர், படத்தின் தொடக்கம் முதலே அண்டர்கரண்ட்டில் ஒரு ஆக்ஷன் அம்சத்துடனே படம் வடிவமைக்கப்படுகிறது.
பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என்ற காரணம் காட்டி அதை கண்டறிய அவரை கண்காணிக்கும் பார்த்திபன் கதாபாத்திரத் தில் நடித்திருக்கும் ஹீரோ மைக் கேல் தங்கதுரை, சேதுவாக நடித்தி ருக்கும் சாய் ராஜ்குமார் உள்ளிட்ட அனைவருமே ரொம்பவே சீரியஸாக கதாபாத்திரங்களை கையாண்டு நடித்திருக்கின்றனர்.
படத்தில் வசனங்கள் ரொம்பவும் சுருக்கமாக நறுக்காக கையாளப்பட்டிருக்கிறது. மைக்கேல் தங்கதுரை டிடெக்டிவாக மட்டுமல்லாமல் தான் ஒரு டாக்டர் என்பதை காதலி சனம் ஷெட்டி யிடம் சொல்லும்போது, ”டாக்டரான இவர் ஏன் இப்படி 500க்கும் ஆயிரத்துக்கும் டிடெக்டிவாக சுற்றிக் கொண்டிருக்கிறார்” என்று முணுமுணுக்க வைக்கிறார். அவர் மீது பழி சுமத்தப்பட்டு டாக்டர் பட்டம் பறிக்கப்பட்ட விவரத்தை சொல்லும்போது கதாபாத்திரம் மீது பரிதாபம் படர்கிறது.
திடீரென்று காதலியை கொன்றவனை பழிவாங்கும் கதையாக படம் திசைமாறுகிறது. சனம் ஷெட்டியை கொலை செய்த சாய் ராஜ்குமாரை துரத்துகிறார் மைக்கேல். அவர்களை வேறு சிலர் துரத்துகின்றனர். மற்றொரு புறம் போலீஸ் அதிகாரி துரத்துவதுமாக கதையில் பூனை, எலி துரத்தல் ஆரம்பமாகிறது. அவர்களுக்குள் நடக்கும் அதிரடி மோதல்கள் காட்சிகளை வேகம் எடுக்கச் செய்கிறது.
கிளைமாக்ஸில் சோலக்காட்டின் உள்ளே எல்லா கதாபாத்திரங் களையும் இறக்கி விட்டு யார் யாரை சுடுகிறார்கள் என்பது புரியாமல், எந்த நேரத்தில் யார் தாக்குகிறார்கள் என்பதும் தெரியாமல் நகரும் ஆக்ஷன் காட்சிகளில் சஸ்பென்ஸ் இழையோடுகிறது. இன்னமும் கூட தெளிவாக இக்காட்சிகளை கையாண்டிருந்தால் பேசப்பட்டிருக்கும்.
படத்தை ஆக்ஷன் குறையாமல் கடைசி வரை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் அர்ஜூனன் ஏகலைவன்.
சிவா இசை, கல்யாண் வெங்கட் ராமன் ஒளிப்பதிவு கைகொடுத்திருக்கிறது.
ஊமை செந்நாய் – ஓட்டத்துடன் கூடிய ஆக்ஷன் த்ரில்லர்.