படம்: 3:33
நடிப்பு: சாண்டி, கவுதம் வாசுதேவ் மேனன், புதுமுகம் ஸ்ருதி, ரமா, ரேஷ்மா, மைம் கோபி. சரவணன்
தயாரிப்பு: ஜீவிதா கிஷோர்
இசை: ஹர்ஷவர்தன்
ஒளிப்பதிவு: சதிஷ் மனோகரன்
இயக்கம்: நம்பிக்கை சந்துரு
பி ஆர் ஒ : சதிஷ் (AIM)
3 மணி 33 நிமிடத்துக்கு பிறக்கும் குழந்தை பின்னர் வளர்ந்து படும் திகில் அனுபவங்கள்தான் கதை. சாண்டி எந்த காரியத்தை செய்தாலும் அது தோல்வியில் முடிகிறது. வாழ்க்கையே சிரமத்துக்குள் ளாகிறது. வீட்டில் தனியாக படுத்திருக்கும் போது ஒரு பேய் அவரை வாட்டி வதைக் கிறது. இதனால் அவரது அம்மா, அக்கா, அக்காவின் குழந்தைகளும் அவஸ்த்தைக் குள்ளாகின்றனர். எல்லாவற்றுக்கும் பிறந்த் நேரம்தான் காரணம் என்று தெரிய்வருகிறது. ஒரு கட்டத்தில் சாண்டியை விட்டு விலகி சென்று விடுங்கள் என்று பாதிரியார் ஒருவர் தாய் மற்றும் அக்கவை எச்சரித்தும் அதை ஏற்காமல் உடனிருக்கின்றனர். இதனால் நேரும் விபரீதம் கிளைமாக்ஸில் திடுக்கிட வைக்கிறது.
நடன இயக்குனர் சாண்டி முதன்முறை யாக ஹீரோவாக நடித்திருக்கும் படம். சூப்பரான நடனம் ஆடியிருப்பார் என்று எண்ணிச் சென்றால சூப்பராக நடித்து கலக்கி இருக்கிறார். தனியாக படுத்துக் கொண்டிருக்கும் சாண்டி உடல் மீது பேய் உட்கார்ந்துக்கொண்டு அமுக்குவதும் இதனால் அவரால் கைகால் அசைக்க முடியாமலும், வாய் விட்டு அலறமுடி யாமலும் திணறும் காட்சி பலரது நிஜ வாழ்விலும் நடந்திருக்கும் உண்மை அனுபவம். அதை எதார்த்தமான நடிப்பின் மூலம் சாண்டி செய்திருப்பது அவரை நடிகராக ஜெயிக்க வைக்கிறது.
தாயும் அக்காவுமே பேயாக வருவதும் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாமல் திண்டாடுவதுமாக திகில் கிளப்பும் சாண்டி இவ்வளவையும் மீறி பேய்யுடன் சவாலுக்கு நிற்பதும் ஆனால் தாக்கு பிடிக்க முடியாமல் கதறவதுமாக பரபரக்க வைக்கிறார்.
சாண்டியின் காதலியாக வரும் ஸ்ருதி, மற்றும் ரமா, ரேஷ்மா ஆகியோரும் பேயாட்டம் போட்டிருக்கின்றனர்.
மைம்கோபி பேயோட்டும் பாதிரியராக வருகிறார். கெஸ்ட் ரோலில் சரவணன் நடித்திருக்கிறார்.
ஆவிகளுடன் பேசுபவராக மாறுபட்ட கதாபாத்திரத்தில் வரும் கவுதம் வாசுதேவ் மேனன் சில காட்சிகள் வந்தாலும் ஆவிகள் பற்றி தெளிவுபட பேசி கவனத்தை ஈர்க்கிறார்.
முதல் படமாக திகில் படத்தை இயக்கி இருக்கும் நம்பிக்கை சந்துரு ரசிகர்களிடம் ஒரு நம்பிக்கை பெற்றுவிடுகிறார்.
பேய் படம் என்பதை பிரதேயேகமாக காட்ட காட்சிகளை பல வித வண்ணங் களில் படமாக்கி திகிலை கண்களுக் குள்ளும் கொண்டு சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதிஷ் மனோகரன்.
இசை அமைப்பாளர் ஹர்ஷவர்தன் படம் முழுவதும் ”க்ரீச்” சவுண்ட் மூலம் பயத்தை படரவிட்டிருக்கிறார்.
3:33 – திகிலோ திகில்