Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

முருங்கைக்காய் சிப்ஸ் (பட விமர்சனம்)

படம் : முருங்கைக்காய் சிப்ஸ்

நடிப்பு: சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி, கே.பாக்யராஜ், ஊர்வசி, மதுமிதா, யோகிபாபு, , வி. சி, ரவீந்திரன், மனோபாலா, முனிஸ்காந்த், மயில்சாமி.

தயாரிப்பு: லிப்ரா புரடக்‌ஷன் வி.சிரவீந்திரன்

இசை: தரண்குமார்

ஒளிப்பதிவு: ரமேஷ் சக்ரவர்த்தி

இயக்கம்:ஸ்ரீஜர்

பி ஆர் ஒ : நிகில்

தலைமுறை தலைமுறையாக 300 கோடி மதிப்பிலான சொத்து வேறு எங்கும் கைமாறிவிடாமல் ஒரே குடும்பத்தின் சொத்தாக கட்டிக்காத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த குடும்பத்தின் பத்தாவது தலைமுறையான சாந்தனுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. திருமணத்தில் எந்த மோதலும் இல்லாமல் இருவீட்டு சம்மதத் துடன் நடக்கிறது. ஆனால் முதலிரவில் மட்டும் சாந்தனுவின் தாத்தா ஒரு கண்டிஷன் போடுகிறார். மனைவி மீது சுண்டுவிரல்கூட படாமல் இருந்தால்தான் 300 கோடி சொத்தும் உனக்கு வந்து சேரும் இல்லாவிட்டால் அனாதை ஆசிரமத்துக்கு சொத்தை எழுதி வைத்துவிடுவேன் என்று சொல்கிறார். இந்த கண்டிஷனை ஒட்டுக் கேட்கும் சிலர் 300 கோடியை ஆட்டையை போட எப்படியாவது சாந்தனுக்கு முதரலிரவு விஷேசம் நடந்துவிட வேண்டும் என்று பல விதங்களில் முயற்சி செய்கின்றனர். சாந்தனுவால் முதலிரவில் கண்டிஷனை கடைபிடிக்க முடிந்ததா? இல்லாவிட்டால் கண்டிஷனை மீறினாரா? என்பதை சுவரஸ்யமாக படம் சொல்கிறது.

கே பாக்யராஜ் பாணியில் சாந்தனு நடித்திருக்கும் படம் என்பதை முருங்கைக்காய் சிப்ஸ் என்ற தலைப்பி லேயே தெரிந்துவிடுகிறது.
முதலிரவு ஆசையுடன் திருமணம் செய்யும் சாந்தனுக்கு தாத்தா பாக்யராஜ் போடும் கண்டிஷன் இடியாக விழுகிறது. பட்டுசேலை சரசரக்க முதலிரவு அறைக்குள் அதுல்யாவை அவரது தோழிகள் உசுப்பேற்றி அனுப்புவதும் கட்டிலில் ஏதோ அதகளம் நடக்கப்போ கிறது என்று பார்த்தால் இருவருமே பேசிப் பேசியே பொழுதை போக்கு கின்றனர்.

எப்படியாவது சாந்தனுவை கட்டி லுக்கு இழுக்க வேண்டும் என்று அதுல்யா செய்யும் சிலுமிசங்கள் அரங்கில் அசட்டு சிரிப்பை படரவிடுகிறது. அதுல்யாவை கட்டிபிடித்து உருளும் போது மூடு வந்தாலும் தாத்தா போட்ட கண்டிஷனுக் காக அதுல்யாவைவிட்டு விலகி செல்லும் சாந்தனு சிரிப்பூட்டுகிறார். தனது தந்தை யின் ஸ்டைலை அப்பட்டமாக காப்பிய டித்திருந்தால் காட்சிகளில் முத்திரை பதித்திருக்கலாம். வாய்ப்பை நழுவவிட்ட சாந்தனுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் இந்த டெக்னிக்கை பயன்படுத்த தவறகூடாது.

சாந்தனுவை கிக் ஏற்றுகிறேன் பார் என்று தோழிகளிடம் சொல்லும் அதுல்யா, இப்படி அப்படி ஏதாவது கவர்ச்சி காட்டு வார் என்று பார்த்தால் இளசுகளை பரிதவிக்கவிட்டிருக்கிறார். பட்டும் படாமல் தொட்டும் தொட்டாமல் கவர்ச்சி காட்டியிருக்கும் அவர் அதுபோன்ற காட்சிகளில் நடிக்க இன்னமும் துணிச்சல் வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறார். குளியல் அறை காட்சி, கபடி காட்சியில் கொஞ்சம் ஆறுதல் கவர்ச்சி காட்டுகிறார்.
சாந்தனுவும் கட்டிப்பிடி வைத்தியத்துக்கு தயங்கியதாகவே தெரிகிறது.

படத்துக்கு ஏ சான்றிதழ் இருந்தாலும் ஒரு லிப் டு லிப் கிஸ்கூட தராதது இளசுகளுக்கு ஏமாற்ற மே..

மயில்சாமியின் சிஷ்யைகள் கேரள பாணியில் உடை அணிந்து கவர்ச்சி பொங்க நிற்பதும் அவர்களைப்பார்த்து மனோபாலா பரபரப்பதும் காமெடி தர்பார்.

சாந்தனுவின் முதலிரவு நடக்க மயில்சாமி செய்யும் கன்னிகள் பங்கேற்கும் யாகம், காமத்தை ஏற்றுவதற்கு குட்டிச் சாத்தானை ஏவிவிட்டாலும் அது திரும்பிவந்து கம்யூட்டருக்குள் மறைந்து போவதுமாக தொடர் காமெடிகள் செய்து அரங்கை கலகலப்பாக்கி விடுகிறார் மயில்சாமி.

யோகிபாபு, முனிஸ்காந்த் கோஷ்டி மற்றொருபக்கம் சிரிப்புமூட்டுகின்றனர். தயாரிப்பாளர் வி.சி.ரவீந்திரன் ஆஜான பாகு தோற்றத்தில் வந்து காமெடி நடிகர்கள் அளவுக்கு அவரும் காமெடியில் கலக்கி இருக்கிறார்.

ஒரு சில காட்சிகளில் தலைகாட்டி இருக்கிறார் ஊர்வசி. இப்படிப்பட்ட படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி இல்லாதது பெரிய இழப்புதான்..

லிப்ரா புரடக்‌ஷன் வி.சி.ரவீந்திரன் தயாரித்துள்ளார். அடல்ட் காமெடி படமாகயிருந்தாலும் ஆபாசத்தை திணிக்காமல் நாசுக்காக காட்சிகளை கையாண்டு பெண்களும் ரசிக்கும்படி படத்தை இயக்கி இருக்கிறார் ஸ்ரீஜர்.

ரமேஷ் சக்ரவர்த்தி பளிச்சென ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தரண்குமார் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது.

முருங்கைக்காய் சிப்ஸ் – சிரித்துவிட்டு வரலாம்.

 

Related posts

வில்லன் அவதாரம் எடுக்கிறாரா சத்யராஜ் ?

Jai Chandran

அருண் விஜய் AV 31 திரைப்பட டப்பிங் பணிகள் துவக்கம்

Jai Chandran

Banaras Motion Poster

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend