ஐ.பி.எல். என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரவு தூக்கம் போச்சு என்றுதான் சொல்ல வேண்டும் அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை பற்றி சொல்லவே வேண்டாம் .. இதற்கு முக்கிய காரணம் தல தோனிதான்.
சி எஸ்.கேவின் கேப்டன் தோனி என்றால் சக வீரர்களுக்கு சிம்ம சொப்பனம் .
கடந்த ஆண்டே தோனி சி எஸ் கே கேப்டன் பதவியில் நீடிக்க மாட்டார் என்ற பேச்சு எழுந்த்து. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவரது தலைமையில் அணி கோப்பையை தட்டியது.
இநதஆண்டு அதாவது 2022 ஐ பி எல் ஏலத்தின்போது சி எஸ் கே அணி வீரர்கள் சிலர் மீண்டும் அணிக்கு விளையாட தேர்வு செய்யப்படவில்ல்லை. மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜா இடம் பிடித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தோனி கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவித்தது. அதே உற்சாகத்துடன் நாட்கள் தொடர்ந்த நிலையில் நாளை மறுதினம் ஐ.பி.எல். 2022 சீசன் தொடங்குகிறது.
போட்டியை எதிர்நோக்கி வீரர்களும் ரசிகர்களும் காத்திருந்த நிலையில் , இன்று டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது ரசிகர் களுக்கு அதிர்ச்சியை ஏழற்படுத்தி இருக்கிறது.
டோனிக்கு பதிலாக. ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என அறி விக்கப்பட்டிருக் கிறது.
கேப்டன் பதவியில் இருந்த விலகினாலும் சி எஸ் கே அணியில் தொடர்ந்து விளையாடுவார எனத் கூறப்பட்டுள்ளது..