Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இந்தியன்2 படத்தில் 11 நிமிட காட்சிகள் குறைத்து விறுவிறுப்பு அதிகரிப்பு

கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கும் படம் இந்தியன் 2. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் இப்படத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். தமிழ் குமரன் படத்தின் தயாரிப்பு மேலாண்மையை  மேற்கொண்டார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே சமீபத்தில் திரைக்கு வந்தது. 1996 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தியன் 1 படத்தின் தொடர்ச்சியாக இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருந்தது. இந்தியன்1  படத்தில் கிளைமாக்ஸ் இந்தியன் தாத்தா கமல்ஹாசன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வது போல் முடிக்கப்பட்டு இருந்தது. அது தொடர்ச்சியாக தற்போது இந்தியன் 2 படத்தில் அவர் வெளிநாட்டில் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்து ஊழல் பேர்வழிகளை வர்ம கலை மூலம் தீர்த்துக்கட்டும் காட்சிகள் உடன் படமாகி இருக்கிறது.

இந்தியாவில் எல்லா இடங்களிலும் ஊழல் பெருக்கெடுத்து விட்ட நிலையில் மீண்டும் இந்தியன் தாத்தா திரும்பி வந்தால் தன் ஊழலை ஒழிக்க முடியும் என்று சித்தார்த் மற்றும் நண்பர்கள் முடிவு செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டு கம்ப பேக் இந்தியன் என்று ஹாஸ் டேக் ஏற்படுத்தி மீண்டும் இந்தியன் தாத்தாவை இந்தியாவுக்கு வரவழைத்து நடத்தும் அமர்க்களமான காட்சிகளுடன் இந்தியன் 2 உருவாகி இருக்கிறது.

இந்த வைதலும் கமல்ஹாசன் செய்திருக்கும் அசத்தலான சண்டைக் காட்சிகள், ஊழலுக்கு எதிராக இளைஞர்களை திரட்டும் அவரது புத்திசாலிரியம் என காட்சிகள் விரிந்து செல்கின்றன. இது பொதுமக்கள் இடையே மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. ஆனாலும் விமர்சன ரீதியாக 20 கருத்துக்கள் வெளியாகி இருந்தன. அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு ரசிகர்களும் மக்களும் இப்படத்தை கொண்டாடி வெற்றி படமாக்கிக் கொண்டிருக்கி றார்கள்.

படத்தில் சில காட்சிகள் லேக் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் 11 நிமிடம் 51 வினாடிகள் காட்சிகள் குறைக்கப்பட்டு புதிய பதிப்புடன் இந்தியன் 2 தற்போது திரையிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் படத்தின் காட்சிகளில் விறுவிறுப்பு கூடி இருக்கிறது.

Related posts

The man behind the Chart Buster, trending song ‘SRIVALLI’

Jai Chandran

அமெரிக்காவில் கேம் சேஞ்சர் விழாவில் பிரபல இயக்குனருடன் ராம்சரண்

Jai Chandran

வேட்டையன் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend