அமேசான் ப்ரைம் வீடியோ மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 படத்தின் முதல் போஸ்டரை வெளியிடுவதுடன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியையும் அறிவித்திருக்கிறது
மோகன்லால் நாயகனாக நடிக்கும் மலையாள த்ரில்லர் திரைப்படமான த்ரிஷ்யம் 2 படத்தின் முதல் போஸ்டரை அமேசான் ப்ரைம் வீடியோ இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வரும் பிப்.8, 2021 அன்று வெளியாகிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் மலையாள த்ரில்லர் திரைப்படமான த்ரிஷ்யம் 2 படத்தை ஜீது ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். இதை ஆஷிர்வாத் சினிமாஸ் சார்பில் அந்தோணி பெரம்பவூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் மீனா, சித்திக், ஆஷா ஷரத், முரளி கோபி, அன்சிபா, எஸ்தர் மற்றும் சாய்குமார் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். போஸ்டரில் மோகன்லால் (எ) ஜார்ஜ்குட்டி ஒரு சஞ்சலமான மனநிலையில் பதற்றமாக இருக்கிறார். இது படத்தின் தொனியை மறைமுகமாக விவரிக்கிறது.