படம்: மிஷன் சேப்டர்1
நடிப்பு: அருண் விஜய், எமி ஜாக்ஸன், நிமிஷம் சஜயன் பரத் போபன்னா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா
தயாரிப்பு: லைகா சுபாஸ்கரன், எம் ராஜசேகரன் எஸ்.சுவாதி
தயாரிப்பு மேலாண்மை: லைகா ஜி கே எம் தமிழக்குமரன்
இசை: ஜி வி பிரகாஷ்
ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்
இயக்கம்: விஜய்
பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா ரேகா, நாசர் (D One)
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக இருக்கும் அருண் விஜய் தன் மகளின் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார். அங்கு அறுவை சிகிச்சைக்கு பணம் கட்டுவதற்காக வந்த ஹவாலா பணத்தை வாங்குவதற்காக பேருந்தில் செல்கிறார். அப்போது ரவுடிகள் அவரிடம் ஹவாலா பணத்துக்கான ரகசிய நோட்டு இருப்பதை அறிந்து அதை அவரிடம் இருந்து பறிக்க முயல் கின்றனர். ஆனால் அருண் விஜய் சுதாரித்துக் கொண்டு ரவுடிகளை போட்டு நொறுக்கி ரோட்டில் ஓட விட்டு துரத்தி துரத்தி அடிக்கிறார். இந்நிலையில் லண்டன் போலீஸ் அங்கு வந்து அருண் விஜயை கைது செய்து லண்டன் சிறையில் அடைக்கிறது. அந்த சிறையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூன்று பேர் இருக்கின்றனர். அவர்களை விடுவிப்பதற்காக வெளியில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவன் திட்டமிட்டு லண்டன் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே கலவரத்தை மூட்டி அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீவிர வாதிகளை அங்கிருந்து தப்ப வைக்க முயல்கிறான். இதை ஜெயில் வார்டன் எமி ஜாக்சன் தடுக்க முயல்கிறார். அவரால் முடியவில்லை. அதை உணர்ந்து கொண்ட அருண் விஜய் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி லண்டன் சிறையில் இருந்து காம்பவுண்ட் சுவர் தாண்டி குதித்து தப்பிக்க முயலும் நூற்றுக்கணக் கான கைதிகளை ஒன் மேன் ஆர்மி யாக நின்று ஒன் மேன் ஆர்மியாக நின்று அவர்களை தடுத்து நிறுத்து கிறார் அவர் களிடம் கடும் மோதல் நடக்கிறது. இதை தெரிந்து கொண்ட வெளியில் இருக்கும் தீவிரவாதி அருண் விஜயை கொள் வதற்கு ஆட்களை ஏவி விடுகிறார். ஆனால் எல்லோரையும் ஒரு கை பார்க்கிறார் இதற்கிடையில் மருத்துவமனையில் இருக்கும் குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு அருண்விஜய்யை தீவிர வாதி மிரட்டுகிறார். அப்போது அருண் விஜய் எடுக்கும் முடிவு என்ன குழந்தையை காப்பாற்று வதற்காக தீவிரவாதிகளை வெளியில் விட அவர் சம்மதித் தாரா என்பதை எல்லாம் அதிரடி ஆக்சன் பரபரப்புடன் மிஷன் சாப்டர் ஒன் கிளைமாக்ஸ் விளக்கு கிறது.
அருண் விஜய் இதுவரை பல்வேறு ஆக்சன் படங்களில் நடித்திருக்கி றார். ஆனால் அவர் நடித்த படங்களிலேயே நம்பர் ஒன் ஆக்சன் படம் என்று மிஷன் சேப்டர் ஒன்றைத்தான் குறிப்பிட வேண்டும். அந்த அளவுக்கு அவர் ரத்தம் வியர்வை சிந்தி மட்டுமல்ல எலும்பையும் முறித்துக் கொண்டு ஆக்சன் காட்சிகளில் நடித்து ரசிகர் களை திணறடித்திருக்கிறார்
பஸ்ஸில் செல்லும் தன்னிடம் இருந்து ரகசிய நோட்டை ரௌடிகள் கைப்பற்ற முயலும். போது அவர்களை நுங்கெடுப்பது அருண்விஜயின் அதிரடி ஆக்ஷன் ஆரம்பமாக அமைகிறது. அதன் பிறகு அவர் லண்டன் சிறையில் நூற்றுக்கணக்கான கைதிகளுடன் கண்மூடித்தனமாக மோதும் காட்சிகள் மிரள வைக்கிறது தீவிரவாதிகள் சிறையிலிருந்து பூமிக்குள் சுரங்கம் அமைத்து தப்பிப்பதை கண்டறியும் அருண் விஜய் அவர்களை தப்ப விடாமல் இருப்பதற்காக எடுக்கும் பகீரத முயற்சிகள் நரம்பை புடைக்க செய்கின்றன.
சுவற்றில் பதிக்கப்பட்டு இருக்கும் பெரிய இரும்பு பைப்புகளை சங்கிலியால் பிணைத்து தோளில் கட்டி இழுத்து அதை அருண் விஜய் சரிக்கும்போது நரம்பு முறுக்கு ஏறுகிறது.
சிறைக்குள் இருக்கும் தான் அங்கிருந்து விடுபட்டு சென்று தன் குழந்தையை மருத்துவமனையில் பார்க்க முயலும் அருண் விஜய் அதற்காக சிறை வார்டன் எமி ஜாக்சனிடம் கெஞ்சுவதும் ஆனால் அவரை வெளியில அனுப்ப எமி ஜாக்சன் மறுப்பதும் சென்டி மெண்ட் டச்.
சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்க முயன்று மனித ஏணி அமைத்து காம்பவுண்ட் சுவர் மீது ஏறும்போது அதை கண்டு ஷாக் காகும் அருண் விஜய் ஓடிச் சென்று அவர்களின் மீது ஏறி உச்சியில் இருந்து அவர்களை இழுத்துக் கொண்டு தரையில் விழும்போது எலும்பு நொறுங்கும் உணர்வு ஏற்படுகிறது. இந்த காட்சியில் கண்டிப்பாக அருண் விஜய்க்கு எலும்பு நொறுங்கி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சீட்டுக்கட்டுபோல் சிறை கைதி களின் மனித ஏணியை சரிக்கும் காட்சியிலும் சாமர்த்தியமாக ஆக்ஷனை வெளிப்படுத்தி இருக்கிறார் அருண் விஜய்.
இப்படத்தில் வரும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மட்டுமல்ல ஒவ்வொரு சண்டைக் காட்சியும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிக்கு ஈடாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஸ்டன்ட் சில்வா அமைத்திருக்கும் அத்தனை கடினமான ஆக்சன் காட்சிகளையும் கொஞ்சமும் சிரமம் பாராமல் அருண் விஜய் செய்து முடித்திருப்பது அவரது மன துணிச்சலையும், உடல் வலிமை யையும் காட்டுகிறது. அதற்காக அருண் விஜய்க்கு ஒரு பெரிய சபாஷ் போடலாம்.
எமி ஜாக்சனை ஒரு கவர்ச்சி கதாநாயகியாக தான் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்படத்தில் அவர் லண்டன் சிறை வார்டனாக அதிரடி ஹாலிவுட் ஹீரோயினாக கண் முன் நிற்கி றார் அவரது பரபரப்பும் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் இதுவரை அவரிடம் கண்டிராத ஒரு புதிய மாற்றம் என்று தான் சொல்ல வேண்டும். இதே ரேஞ்சில் சென் றால் எமி ஜாக்சனை இன்னொரு விஜயசாந்தி ஆக்கி விடுவார்கள் என்பது நிச்சயம்.
நிமிஷா சஜயன் நர்சாக இயற்கை நடிப்பில்.கவர்கிறார்.
படத்தில் பாகிஸ்தான் தீவிரவா தியாக நடித்திருக்கும் பரத் கோபண்ணா தனது கதாபாத் திரத்தை நிறைவாக செய்திருக் கிறார்.
லைகா சுபாஷ்கரன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். லைகா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தமிழ்க்குமரன் இப்படத்தின் தயாரிப்பு நிர்வாகப் பணிகளையும் கட்சிதமாக செய்து முடித்திருக் கிறார்.
தெய்வமகள் போன்ற மென்மை யான கதைகளை இயக்கிக் கொண்டிருந்த விஜய் இப்படத்தில் தன்னை முற்றிலுமாகவே வேறு படுத்தி காட்டி இருக்கிறார் தன்னால் ஒரு ஆக்சன் படத்தை ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இயக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். அவரது கடின உழைப்பும் படத்திற்கு கை கொடுத்திருக்கிறது
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். பான் இந்தியா படங்களுக்கு அமைக்கும் இசை போல் அதிரடியாக அவர் அமைத்திருக்கும் இசை காட்சி களை தோள்மேல் தூக்கி நிறுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் சந்தீப் கே விஜய் கேமிரா ஆக்ஷன் காட்சிகளுக்கு சற்றும் சளைக்காமல் சுழன்றி ருக்கிறது.
மிஷன் சேப்டர் 1 – அருண் விஜயின் அதிரடி ஆக்ஷன் அமர்க்களம்.