படம்: லாக்கர்
நடிப்பு: விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனி அசோகன், நிவாஸ் ஆதித்யன், சுப்ரமணியன் மாதவன்
தயாரிப்பு:நாராயணன் செல்வம் புரடக்ஷன்
இசை:வைகுநத் ஶ்ரீ நிவாசன்
இயக்கம்: ராஜசேகர் யுவராஜ் கண்ணன்
பி ஆர் ஒ: சக்தி சரவணன்
ஷேர் மார்க்கெட் முதலீடு என்று சொல்லி சிலரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார் விக்னேஷ். அது தெரிந்ததும் அவரை காதலிக்க மறுக்கிறார் நிரஞ்சனி . இதைய டுத்து மோசடி பணத்தை சம்மந்தப் பட்ட நபரிடம் விக்னேஷ் தந்து விடுகிறார். ஆனால் இது குறிப்பிட்ட அந்த நபரின் பணம் என்று என்னிடம் சொல்லியிருந் தால் அதை திருப்பி தரச் சொல்லி இருக்க மாட்டேன் என்று சொல்லும் நிரஞ்சனி காதலன் விக்னேஷிடம் தன் தந்தை மோசடியில் ஏமாந்த ஒரு கதையை சொல்லி கடத்தல் தொழில் செய்யும் நபரின் ரூ 60 கோடி தங்க பிஸ்கெட்டை கொள்ளையடிக்க விக்னேஷை தூண்டி விடுகிறார் நிரஞ்சனி. அதற்கு சம்மதிக்கும் விக்னேஷ் அந்த தங்க பிஸ்கெட்களை நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்கிறார். தங்க பிஸ்கெட்டை பறி கொடுத்த கூட்டம் விக்னேஷை சுற்றி வளைக்கிறது. அடுத்து நடப்பது என்ன என்பதை சஸ்பென்ஸ் கலந்து கிளைமாக்ஸ் சொல்கிறது.
படத்தில் நாயகனாக நடித்தி ருக்கும் விக்னேஷ் சண்முகம் ஏற்கெனவே சில பல படங்களில் தலைகாட்டி இருப்பதால் நடிப்பு பயம் எதுவும் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார்.
கொஞ்சம் மோசடி, கொஞ்சம் காதல் என்று ரவுசு செய்யும் விக்னேஷ் காதலிக்காக மோசடி செய்யும் தொழிலையே விட முடிவு செய்வதும் பின்னர் காதலி நிரஞ்சனி. சொல்லும் சோக கதையை கேட்டு பெரிதாக கொள்ளையடிக்க திட்டம்.போடு வதும் கதையில் புது டிவிஸ்ட்.
ரகசிய பங்களாவில் பதுக்கி வைத்திருக்கும் 60 கோடி மதிப்புள்ள தங்கத்தை எதிர் வீட்டில்.தங்கி இருந்து தரையில் சுரங்க பாதை அமைத்து கொள்ளையடிப்பது ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் வந்த அர்த்த பழைய ஐடியா. சுரங்கம் தோண்டுவது அவ்வளவு எளிதா பள்ளத்திலிருந்து எடுத்த மண் எப்படி வெளியே கொட்டப்படு கிறது என்ற செய்முறைக்கு விளக்கம் எதுவுமில்லாமல் கொள்ளை சம்பவத்தை ரொம்ப வே சாதாரணமாக படமாக்கி இருப்பது நம்ப முடியவில்லை.
ஹீரோ விக்னேஷ் சண்முகம் குரல் சதுரங்க வேட்டை பட ஹீரோ நட்டி குரல் போலவே உள்ளது. கண்ணை. மூடிக் கொண்டு விக்னேஷ் குரலை கேட்டால் நட்டிதான் பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றும்.
கதைக்கு ஏற்ற பொருட் செல்வு இல்லாததால் பிரமாண்டத்துக்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.
வைகுந்த் ஶ்ரீநிவாசன்.இசை நார்மல்
ராஜசேகர் யுவராஜ் கண்ணன் இயக்குனர்கள் முதல்.முயற்சி சோடையில்லை. இருப்பதை கொண்டு சிறப்பாக எடுத்திருக் கிறார்கள். கிளைமாக்ஸ் டுவிஸ்ட் கைகொடுக்கிறது .
லாக்கர் – காதலும் கொள்ளையும்.