Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விமல் நடிக்கும் படவா ஆடியோ வெளியிட்ட விஜய் ஆண்டனி

ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா’ திரைப் படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர்.

இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்’ புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

கே.வி. நந்தா இப்படத்தை இயக்கி யுள்ளார். கலை இயக்குந‌ராக சரவண அபிராமன், படத்தொகுப் பாளராக வினோத் கண்ணா பொறுப்பேற்றுள்ளனர்.

சண்டைக்காட்சிகளை சிறுத்தை கணேஷ், நடனத்தை தினேஷ், ஸ்ரீதர் மற்றும் தினா ஆகியோரும் வடிவமைத்துள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்து வருகிறார். பாடல்களை ஜான் பீட்டர், விவேகா, கபிலன் வைரமுத்து, இளைய கம்பன், ஸ்வர்ணலதா ஆகியோர் எழுதியுள்ளனர்.

‘படவா’ ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு.

இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஜான் பீட்டர் பேசியதாவது:இ

படவா படத்தில் விமல் போலவே  சூரியின்   பெரிய கேரக்டர் செய்துள்ளார். Ivv விழாவில் பங்கேற்று ஆடியோ வெளியிட்ட விஜய் ஆண்டனி மற்றும் வாழ்த்திய  அனைவருக்கும் நன்றி

கவிஞர் இளையகம்பன் பேசியதாவது.:

‘படவா’ திரைப்படத்தின் என் அருமை இசையமைப்பாளர் ஜான் பீட்டர் ஒரு அற்புதமான மனிதர். அவரது பெரிய முயற்சியில் உருவாகின்ற ‘படவா’ திரைப்படம் ஒரு அற்புதமான திரை சூழலை உருவாக்கி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. இந்த திரைப்படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. எல்லாமே சிறப்பாக வந்துள்ளது. இந்த திரைப்படத்தின் முகப்புப் பாடலை நான் எழுதியிருக்கின்றேன்.  அனைவருக்கும் வாழ்த்துகள்.

கலை இயக்குநர் சரவண அபிராமன் பேசியதாவது:

டவா திரைப்படத்தில் நவரசங்களும் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன‌. இந்த படத்திற்கு இசையமைப்பாளரும் தயாரிப்பா ளரும் ஜான் பீட்டர் தான். விமல் மிகப்பெரிய நடிகர், இந்த திரைப் படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும், சூரி அவர்களுக்கும் இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.

ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் பேசியதாவது:

இந்த படம் மிகவும் நன்றாக உருவாகி உள்ளது. இதில் பணியாற்றியது மகிழ்ச்சி.

இயக்குந‌ர் சரவணன் சக்தி பேசியதாவது:

இது மிகப்பெரிய சமூக பொறுப்புள்ள படம். விவசாயம் பற்றி இது பேசுகிறது. இந்த திரைப்படத்தை பொறுத்தவரை அனைவரும் சிறப்பான பங்களித் துள்ளனர். நானும் இந்த படத்தில் ஒரு ரோல் செய்துள்ளேன். படம் மிகப்பெரிய வெற்றிபெற எல்லாம் வ‌ல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

நடிகர் சவுந்திரராஜா பேசியதாவது:

இப்படத்தில் நான் நான் நடிக்காவிட்டாலும் விமலுக்காக வந்திருக்கிறேன். விவசாயம் குறித்த‌ கருத்து இதில் இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக நன்றாக ஓட வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

பாடகர் வேல்முருகன் பேசியதாவது:

படவா திரைப்படத்தில் டைட்டில் பாடலை நான் பாடியிருக்கிறேன். ‘படவா’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும், மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. அனைவருடனும் சினிமாவில் பயணிப்ப‌து மிகவும் மகிழ்ச்சி.

இயக்குந‌ர் பேரரசு பேசியதாவது:

ஜான் பீட்டர் இப்படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி இசையமைப்பாளரும் தான். பாடல்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. நடிகர் விமல் வெற்றி அடைந்துக்கொண்டே இருக்க வேண்டும். ‘படவா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் விவசாயத்தை பற்றியது. ‘கடைசி விவசாயி’ தேசிய விருது பெற்றது, டிரைலரை பார்க்கும் போது அது போன்ற திரைப்படமாக தான் ‘படவா’ இருக்கும் என்று தோன்றுகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க‌ செயலாளர் கதிரேசன் பேசியதாவது :

‘படவா’ திரைப்படம் தயாரிப்பாளர் ஜான் பீட்டருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும், விமலுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். படத்தில் பணியாற்றிய‌ தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

திருமதி ரதீ சங்கர் பேசியதாவது :

இந்த ப்ராஜெக்ட் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும். அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் வானம் கொட்டட்டும் என்ற பாடலை நான் பாடியுள்ளேன்.

கதாநாயகி ஸ்ரீதா பேசியதாவது:

இயக்குந‌ர் நந்தா அவர்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எனக்கு சுத்தமாக‌ தமிழ் தெரியாது. அவரால் தான் நான் தமிழ் வசனம் பேசி கஷ்டப்பட்டு நடித்திருக்கி றேன்..

கதாநாயகன் விமல் பேசிய தாவது:

இந்த திரைப்படத்தின் இயக்குந‌ர் நந்தா  நன்றி. அன்பு நண்பன் சூரி, விழாவுக்கு வந்து பாடல் வெளியிட்ட விஜய் ஆண்டனி, மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அநைவருக்கும் நன்றி.

விஜய் ஆண்டனி பேசியதாவது.:

ஜான் பீட்டர் மற்றும் கதாநாயகன் விமல் இருவரும்  கண்டிப்பாக நீங்கள் பெரிய உயரத்தை தொடுவீர்கள். கதாநாயகன் விமல் நடிகர் சூரி சார் காம்போ நன்றாக இருக்கும். இது நல்ல திரைப்பட மாக கட்டாயம் அமையும். அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள்.

 

Related posts

STR BIRTHDAY CELEBRATION COUNT DOWN STARTS

Jai Chandran

Actor Mohan-starrer ‘Haraa’ Teaser Launch

Jai Chandran

ஸ்டாலின் முதல்வராக நாக்கை அறுத்துக்கொண்ட பெண்: திமுக தலைவர் கண்ணீர் அறிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend