Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தயாரிப்பாளர்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் வாழ்வாதாரம் இழந்து வாடும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பகுதி பகுதியாக நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார். இன்று பூச்சி எஸ். முருகன் முன்னிலையில் தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார். 100க்கு மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பெற்றுக் கொண்டனர். உடன் தயாரிப்பாளர் சாதிக், நடிகர் முத்து மற்றும் ஏ.ஆர்.ஓ.க்கள்.
மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளையொட்டி கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 100 தயாரிப்பாளர்களுக்கு நிதி உதவியை பூச்சி எஸ்.முருகன் முன்னிலையில் தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் வழங்கினார்.

Related posts

Vaibhav-Anagha starrer action thriller “Buffoon”‘

Jai Chandran

சில்லு வண்டுகள் பட ஆடியோ வெளியீட்டில் நடிகர், இயக்குனர் பரபரப்பு பேச்சு

Jai Chandran

எல் எஸ் எஸ் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend