Trending Cinemas Now
விமர்சனம்

குட்டி ஸ்டோரி (பட விமர்சனம்)

படம்: குட்டி ஸ்டோரி
நடிப்பு: கவுதம் வாசுதேவ் மேனன், அமலாபால், ரோபோ சங்கர், வினோத், மேகா ஆகாஷ், அமிர்டாஷ், வருண், சங்கீதா, விஜய் சேதுபதி, அதிதி பாலன்
தயாரிப்பு:வேல்ஸ் இண்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கணேஷ்
இசை அமைப்பாள்ர்கள்: கார்த்தி, மது, பிரேம்ஜி அமரன், ஹெட்வின் லூஸ் விஸ்வாத்
ஒளிப்பதிவாளர்கள்: மனோஜ் பர மகம்சா, அரவிந்த் கிருஷ்ணன், சக்தி சரவணன், என்.சண்முகசுந்தரம்
இயக்குனர்கள்: கவுதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி
குட்டி ஸ்டோரி ஒரு ஆந்தாலஜி படம். ஒரே படத்தில் 4 பிரபல இயக்கு னர்கள் இயக்கிய 4 குட்டி கதைகள்.
எதிர்பாராத முத்தம்:
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படம் எதிர்பாராத முத்தம். கவுதம் வாசுதேவ் மேனன், அமலாபால், ரோபோ சங்கர், வினோத் நடித்திருக் கின்றனர். சிறுவயதில் அமலாபாலுடன் நட்பாக பழகும் கவுதம் மேனன் கல்லூரியிலிருந்து பிரிவதற்கு முன் அமலாபாலுக்கு ஒரு முத்தம் தருகிறார். ஷாக் ஆன அமலாபால் அவரை விட்டு விலகுகிறார். சில வருடங் களுக்கு பிறகு கவுதம் மேனனை சந்திக்க வருகிறார் அமலாபால். அப்போது அவர்களுக்குள் நிலவும் உணர்வை குறும்படம் சொல்கிறது.
அவனும் நானும்:
ஏ.எல்.விஜய் இயக்கிய குறும் படம் அவனும் நானும். மேகா ஆகாஷ், அமிர்டாஷ் பிரதான், ஆர்யா, புஜ்ஜிபாபு நடித்திருக் கின்றனர். நண்பனு டன் டூவிலரில் செல்கிறார் மேகா. மழைக்காக ஒரு ஒட்டலில் ஒதுங்குகிறார்கள். அறைக்குள் சென்றதும் கதவை தாழிடு கிறான் பாய்ஃபிரண்ட். ஆனால் தப்பாக எதுவும் நடத்தும்திட்டமில்லை பிறந்த நாள் சர்ப்ரைஸ் தருகிறார் பாய்ஃபிரண்ட். ஆச்சர்யம் அடைந்த மேகா தன்னையை அவனுக்கு தருகிறாள். கர்ப்பமாகிறாள். பாய்ஃபிரண்டிடம் தகவல் சொல்ல தொடர்பு கொண் டால் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த நடப்பது என்ன என்பது கிளைமாக்ஸ்.
லோகம்:
வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் லோகம். வருண், சங்கீதா, சாக்‌ஷி, அகர்லால், லுத்புதீன் நடித்திருக்கின்றனர். வீடீயோ கேம் பிரியர் வருண் கடினமான சவால்களை வென்று பிரபலமாக இருக்கி றார். லோகம் என்ற வீடியோ கேம் ஆடும்போது உடன் ஆடும் ஒரு பெண்ணுடன் காதல் மலர்கிறது. கேமில் தோல்வி அடையும் பெண் அத்துடன் விளையாட்டிலி ருந்து விலகுகிறார். அவருடன் சேர்ந்து கேம் ஆடிய வருண் அந்த பெண்ணை காதலிக்கி றார். அவர் கேமிலிருந்து விலகியதும் அவள் நினைவாகவே இருக்கிறார். இவர்கள் காதல் கைகூடுகிறதா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
ஆடல் பாடல்:
நலன் குமாராசாமி இயக்கி யுள்ள கதை ஆடல் பாடல். விஜய்சேதுபதி, அதிதி பாலன், ஆன்ரியா நடித்துள்ளனர். விஜய்சேதுபதி, அதிதி பாலன் கணவன் மனைவி. விஜய்சேது பதிக்கு ஒரு போன் வர அது அவரது சின்னவீட்டின் போன் என்பதால் மாடிக்கு சென்று காதல் மோகம் கலந்து பேசுகி றார். பேசி முடித்தபிறகு தான் தெரிகிறது போனில் பேசியது தனது மனைவியுடன் என்பது. விஜய்சேதுபதி அதிர்ச்சி அடைந்து மனைவியிடம் மன்னிப்பு கேட்கிறார். மறு நாள் விஜய்சேதுபதியிடம் திருமணத்துக்கு முன்பே நான் ஒருமுறை தப்பு செய்து விட்டேன் என்று சொல்லி விஜய்சேதுபதிக்கு அதிர்ச்சி தருகிறார் மனைவி. மனைவி யின் பாய்ஃபிரண்டை தேடுகி றார் விஜய் சேதுபதி. அடுத்து நடப்பது என்ன என்பது கிளைமாக்ஸ்
நான்கு குட்டி கதைகளை 4 இயக்குனர்கள் தங்கள் ஸ்டைலில் இயக்கி உள்ளனர். நான்கு கதைகளுமே ஏதோ ஒரு வகையில் காதலை பேசுகி றது. நடிகர், நடிகைகளுக்கு நடிப்பதற்கு அதிக இடமில் லை. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக் கின்றனர்.
மெனக்கெடல் இன்னமும் இருந்திருந்தால் வித்தியாச மான கோண்ங்களில் கதைகளை அணுகி இருக்க லாம் என்றே தோன்றுகிறது. நலன் குமாரசாமி அணுகுமுறையில் கொஞ்சம் ஷாக் கிடைக்கிறது. மற்ற கதைகளை யூகிக்க முடிகிறது.
குட்டி ஸ்டோரி- லவ் ஆந்தாலஜி.

Related posts

ஆதித்ய வர்மா விமர்சனம்

CCCinema

ஜிப்ஸி(பட விமர்சனம்)

CCCinema

என் பெயர் ஆனந்தன் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend