Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ரங்கா ( பட விமர்சனம்)

படம்: ரங்கா

நடிப்பு: சிபி சத்யராஜ், நிகிலா விமல், சதிஷ், ஷா ரா, மனோபாலா, சுவாமி நாதன், ரேணுகா, ஜீவா ரவி, தமிழ்செல்வி, மோனிஷ் ரெஹேஜா, இர்பான், ஆருஷ், செந்தில், ராஜலட்சுமி

தயாரிப்பு: விஜய் கே.செல்லையா

இசை: ராம் ஜீவன்

ஒளிப்பதிவு: அர்வி

இயக்கம்: வினோத் டி.எல்.

பி.ஆர்.ஒ: சுரேஷ் சந்திரா

சிபி, நிகிலா இருவரும் கண்டவுடன் காதல் கொள்கின்றனர். எந்த எதிர்ப்பும் இல்லாமல் திருமணம் நடக்கிறது. இருவரும் தேனிலவுக்கு காஷ்மீர் சென்று ஒரு சொகுசு ஓட்டலில் அறை எடுத்து தங்குகின்றனர். அந்த ஓட்டலில் ரகசிய கேமிரா வைத்து தேனிலவு ஜோடிகளின் அந்தரங்கங்களை ஒரு கூட்டம் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறது. இதை கண்டுபிடிக்கிறார் சிபி. இதுபற்றி ஓட்டல் மேனேஜரிடம் தட்டிக்கேட்கும்போது மேனேஜர் தனது ரவுடி கூட்டத்துக்கு தகவல் சொல்ல அந்த கூட்டம் சிபியையும், விமாலாவையும் கொல்ல துரத்துகிறது. உயிருக்கு பயந்து இருவரும் ஓட ஒரு இடத்தில் அவர்களை ரவுடி கூட்டம் சுற்றிவளைக்கிறது. சிபியை அடித்து தூக்கி வீசுகின்றனர். அந்த நேரம் சிபியிடம் இருக்கும் அபூர்வ சக்தியான அவரது வலது கை மட்டும் எதற்கும் அடிபணியாமல் தானாக இயங்கி ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறது. இறுதியில் ரவுடி கூட்டத்திடமிருந்து இருவரும் தப்பினார்களா? அந்தரங்க வீடியோக்கள் என்னவாகிறது? என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

கதை ஒன்றும் புதுமையானதில்லை என்றாலும் அது சொல்லப்பட்டிருக்கும் விதம், லொகேஷன், சிபி, விமலா நடிப்பு எல்லாம் சேர்ந்து காஷ்மீர் பனி மலையில் ஜில்லிடும் ஒரு புதிய அனுபவத்தை தருகிறது.

முதல் பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும் காட்சிகள் இரண்டாம் பாதியில்  அதிரடியாக பறக்கி றது.

சிபியை வில்லன் மோனிஷ் ரெஹேஜா காரில் துரத்தும் காட்சிகள் படுத்ரில். அதுவும் இரவில் சாலையின் இருபுறமும் பனி குவிந்துகிடக்க ஹெட்லைட் வெளிச்சத்தில் படமாக்கப்பட்டிருக்கும் கார் சேஸிங் காட்சி இமைகொட் டாமல் பார்வையை திரையில் நிலைகுத்த வைக்கிறது.

வில்லன் கூட்டத்தின் அடிதாங்க முடியாமல் சிபி சோர்ந்து விழ அவரையும் அறியாமல் அவரது வலது கை வேகமாக செயல்பட்டு ரவுடிகளை துவம்சம் செய்வது விறுவிறுப்பு.

அதேசமயம் ஆறடி நாயகன் சிபி இப்படியா அடிவாங்கி சின்னா பின்னமாவார் என்ற பரிதாபமும் ஏற்படுகிறது.

வில்லன் மோனிஷ் ரெஹஜா கதைக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

கதாநாயகி விமலா பனி குவியலில் ஓடி களைத்திருப்பது முகத்தில் தெரிகிறது.

படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் காஷ்மீரில் கடும் குளிரில் படமாக்கப்பட்டி ருப்பது கோடை கால வெயிலுக்கு எல்லோரையுமே காஷ்மீரில் கொண்டு சென்று நிறுத்திய ஜில் உணர்வை உடல் முழுவதும் பரவச் செய்கிறது.

படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத் திரங்கள் முதல்பாதியிலேயே மூட்டையை கட்டிக் கொண்டு சென்று விடுகின்றனர்.

விஜய் கே செல்லையாவின் பொருட் செலவுக்கு காட்சிகள் சாட்சி சொல் கின்றன.

வினோத் டி.எல் முதல் படத்திலேயே ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து இயக்கி உள்ளார்.

அர்வி கேமிராவை தூக்கிக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்து காட்சிகளை கோட்டை விடாமல் படமாக்கி இருக்கி றார்.

ராம் ஜீவன் இசையில் பாடல்கள் ஓ கே. பின்னணி இசையில் சிபியின் வலதுகை  தானாக இயங்கி சண்டை போடும் காட்சிகளில் வித்தியாசமான இசையை கையாண்டிருக்கலாம்.

ரங்கா- ஆக்‌ஷன் ஆக்‌ஷன்  படம் முழுவதும் ஆக்‌ஷனோ ஆக்‌ஷன்.

 

Related posts

வீராயி மக்கள் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

Jai Chandran

நடிகை ஜெயந்தி காலமானார்

Jai Chandran

Birla, Neelam announces New Movie Makkal Kavalan…

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend