படம்: நானும் சிங்கிள்தான்
நடிப்பு: தினேஷ், தீப்தி சதி, மொட்ட ராஜேந்திரன், ஆதித்யா, விகாஷ் சம்பத், செல்வேந்திரன், மனோபாலா, ரமா.
தயாரிப்பு: த்ரீ ஈஸ் ஏ கம்பெனி புரடக்ஷன் புன்னகை பூவே கீதா
இசை: ஹித்தேஷ் மஞ்சுநாத்
ஒளிப்பதிவு: கே.ஆனந்தராஜ்
இயக்கம்: ஆர்.கோபி
நைன்டீஸ் கிட்ஸுக்கான படம் என்ற அறிமுகத்துடன் உருவாகி இருக்கும் காதல் கதை. 30 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் நண்பர்கள் தினேஷ், ஆதித்யா கதிர், விகாஷ், செல்வேந்திரன் நான்குபேரும் காதலிக்க பெண் கிடைக்காமல் தவிக் கின்றனர். கேர்ள்ஃபிரண்டை ஃபேஸ்புக்கில் தேடுகிறார்கள். தினேஷ் தீப்தி மீது ஆசைப் பட்டு அவர் மீது காதல் கொள்கிறார். தீப்திக்கோ காதல், கல்யாணம் என்றாலே பிடிக்கவில்லை. தினேஷின் நல்ல குணத்தை கண்டு அவருடன் நட்பாக பழகுகி றார். தினேஷ் தனது காதலை சொல்லும்போது அதை தூக்கி எறிந்துவிட்டு லண்டன் செல்கி றாள். காதலியை தேடி தினேஷ் நண்பர்களுடன் லண்டன் செல்கிறார். அங்கு மொட்ட ராஜேந்திரனை சந்தித்து அவரது உதவியுடன் தீப்தியை கண்டுபிடிக்கி றார்கள். ஆனாலும் தீப்தி தினேஷ் காதலை ஏற்க மறுக்கி றார். தினேஷ் நட்பை முறிக்க தீப்தி ஒரு முக்கிய முடிவு செய்கிறார். அது என்ன? அதைக்கண்டு தினேஷ் எடுத்த முடிவு என்ன என்பதை கிளைமாக்ஸ் விளக்குகிறது.
90ஸ் கிட்ஸுக்கான ஸ்பெஷல் ட்ரீட்டுடன் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. தினேஷை திரையில் பார்த்து ரொம்ப நாளாகிறது. சக நண்பர்கள் டபுள் மீனிங் வசனம்பேசி லூட்டி அடித்தாலும் தினேஷ் அதிலி ருந்து விலகி கேரக்டரை மெயிண்டெயின் செய்கிறார். தீப்தி வீட்டுக்கு விருந்துக்கு சென்றவர் திடீரென்று அவருக்கு முத்தம் கொடுத்து வம்பை விலைக்கு வாங்குகிறார்.
திடீரென்று தீப்தியுடன் சென்றுவிட்டார் என்று தோழிகள் மூலமாக அறிந்ததும் ஷாக் ஆகும் தினேஷ் காதலியை தேடி லண்டன் செல்வதும் அங்கு அவரை தேடி அலைந்து கண்டுபிடித்தும் காதலை ஒப்புக்கொள்ள மறுப்பதும் டிவிஸ்ட். எப்படியாவது தீப்தியை மணக்க வேண்டும் என்று தினேஷ் தீர்மானமாக இருப்பதும் எந்த வகையிலும் தினேஷ் காதலை ஏற்பதில்லை என்ற தீப்தியின் உறுதியும் படத்தை கிளைமாக்ஸ் வரை நகர்த்திக்கொண்டு செல்கிறது.
தினேஷை விட்டு விலகுவதற் காக தீப்தி கன்னியாக இருக்கும்போதே செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்வது அதிர்ச்சி.
நடனம், நடிப்பில் தன்னை நிரூபித்திருக்கிறார் தீப்தி. ஆதித்யா கதிர், விகாஷ் சம்பத், செல்வேந்திரன் மூவரும் தினேஷ் நண்பர்களாக நடித்து காட்சிகளை கலகலப்பாக்கு கின்றனர். சில சமயம் அவர்கள் சொல்லும் டபுள் மீனிங் கமெண்ட் முகத்தை சுளிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் கே.ஆனந்தராஜ் எவ்வளவு முடியுமோ அவ்வளவு லண்டன் எழிலை சுற்றிக் காட்டுகிறார். ஹிதேஷ் மஞ்ச்நாத் இசையும் சோடை யில்லை.
இயக்குனர் ஆர்.கோபி காதலுடன் மேல்பூச்சாக இளவட்டங்களின் சிலுமிஷத்தை தடவி கொடுத்திருக்கிறார்.
நானும் சிங்கிள் தான் – ஒரு தலை காதல் ஜெயிக்கிறது.
previous post