Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கண்ணகி (பட விமர்சனம் )

படம்: கண்ணகி

நடிப்பு: கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலிின் சோயா,  மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மோனிகா, யஷ்வந்த் கிஷோர்

தயாரிப்பு:எம்.கணேஷ், ஜெ தனுஷ்

இசை:ஷான் ரஹ்மான், அரவிந்த் சுந்தர்

ஒளிப்பதிவு: ராம்ஜி

இயக்கம்: யஷ்வந்த் கிஷோர்

பி ஆர் ஒ: ரியாஸ் கே அஹமத்

கிராமத்து பெண் அம்மு அபிராமிக்கு திருமணம் செய்து வைக்க எண்ணும்  தாய்.மோனிகா வாரம் ஒரு மாப்பிள்ளையை அழைத்து பெண் பார்க்கும் படலம் நடத்துகிறார். பிறகு அவரே மாப்பிள்ளை மீது.குறை சொல்லி.ஒதுக்குகிறார். இவரது திருமணம் என்னவாகிறது. ஐ.டி கம்பெனியில் பணிபுரியும்  ஷாலின் சோயா திருமணமே செய்யாமல் லிவிங் டுகெதர் பாணியில் ஆதேஷுடன் ஒரே வீட்டில் தங்குகிறார். ஒரு கட்டத்தில் ஷாலினை  மணக்க எண்ணுகிறார் ஆதேஷ் . இதில் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. இவர்கள் நிலை என்ன?  கர்ப்பிணியாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் கருக்கலைப்பு செய்ய காதலன் யஷ்வந்த கிஷோருடன் கேரளா வரை டாக்டரை தேடி செல்கிறார். அவர் நிலை என்ன.  குழந்தை இல்லை என்று காரணம் காட்டி வித்யா பிரதீப்பை அவரது கணவன் விவாகரத்து கேட்டு வழக்கு போட  விவாகரத்து தர மறுத்து கோர்ட்டுக்கு அலைகிறார். அவரது கதி என்னவாகிறது என்ற 4 பெண்களின் கதையை சொல்கிறது படம்.

ஆந்தாலஜி பாணியிலான இக்கதை கிளைமாக்சில் வரும் டுவிஸ்ட் எதிர்பாராத ஷாக்காக அமைகிறது. 4 ஹீரோயின் களுக்கு.இடையே நடிப்பு ரேஸ் வைத்திருக்கிறார் இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இதில் முந்திக் கொண்டு ஓடியிருக்கிறார் ஷாலின் சோயா.

தம்‌மடிப்பது, தண்ணியடிப்பது, படுக்கை பகிர்வது என்ன யார் என்ன சொன்னால் எனக்கென்ன எவனைப் பற்றியும் எனக்கு கவலை.இல்லை என்பதுபோல்  போல்டான பாத்திரத்தில் வெளுத்து கட்டுகிறார் ஷாலின். அவர் வரும்.காட்சிகளில் அரங்கு அதிரி புதிரியாகிறது.  அடுத்த மூன்று இடங்களை பிடிக்க கீர்த்தி, அம்மு, திவ்யா சடுகுடு ஆடுகிறார்கள்.

தன்னை எத்தனை மாப்பிள்ளை கள் பெண் பார்த்துச் சென்றார்கள் என்பதை உணர்த்த ஒவ்வொரு முறையும் ஒரு செடியை நட்டு வளர்ப்பதும். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் ஏற்பட்டாலும் அப்பா மயில்சாமியிடம் புலம்பிவிட்டு அடுத்த பெண்பார்க்கும் படத்துக்கு தயாராவது கே. பி சாரின் டச்சை நினைவுபடுத்துகிறது.

கீர்த்திக்குதான் நடிக்க சரியான வாய்ப்பு இல்லையோ என்ற. முணு முணுப்பை ஏற்படுத்துகிறது. கிலாக்சில் ஏதோ.ஒரு காம்பிரமை செய்கிறார்.

அம்முவின் தந்தையாக வந்து இயல்பான நடிப்பில்.மனதுக்குள் சத்தமில்லாமல் புகுந்து விடு கிறார் மயில்சாமி. ஆனால் அவரது டெத் சீன் ரொம்பவே பாதிப்பை ஏற்படுத்துகிறது. மின் மியானத்துக்குள் அவரது உடலை வைத்து எரிப்பது போன்ற காட்சியை முற்றிலும் தவிர்த்தி ருக்கலாம். அம்முவின் தாய்.மோனிகா பாலு சாரின் நடிகை என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிரூபிக்கிறார்.

வெற்றி, யஷ்வந்த் கிஷோர், ஆதேஷ் பெண்களுக்கு விட்டு கொடுத்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது.

எம்.கணேஷ், ஜெ தனுஷ் தயாரித்திருக்கிறார்கள்.

ஷான் ரஹ்மான், அரவிந்த் சுந்தர் இசை காட்சிகளோடு ஒன்றுகிறது. கார்த்திக் நீத்ராவின் பாடல் வரிகளில் ஜீவன் உலா வருகிறது. ஒளிப்பதிவாளர் ராம்ஜி சீன்களுக்கு மூட் செட் செய்தி ருக்கும் லைட்டிங் பலம்.

இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் உண்மைகளை உடைக்க முயன்றிருக்கிறார்.

கண்ணகி இது மன்னர் காலத்து கண்ணகி இல்லை கலை நேத்ரா நதி கீதா என்ற 4 பெயர்களின் முதல் எழுத்தை இணைத்து வெளிப்பட்டிருக்கும் இண்டர்நெட் காலத்து நவீன கண்ணகிகள் .

கண்ணகி – சிலம்பு ஏந்தா இண்டர்நெட் காலத்து  கண்ண கிகள்.

 

 

 

 

Related posts

‘கல்கி 2898 AD’ படத்தில் பிரபாஸின் சிறந்த நண்பன் யார்?

Jai Chandran

Mrunal as Sita

Jai Chandran

19th Chennai International Film Festival Awards

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend