படம் 777 சார்லி
நடிப்பு: ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா ஸ்ரீங்கேரி, பாபி சிம்ஹா, ராஜ் பி ஷெட்டி, தனிஷ் சைத் இவர்களுடன் சார்லி என்கிற நாய்
தயாரிப்பு: ரக்ஷித் ஷெட்டி, ஜி.எஸ்.குப்தா
இசை: நோபின் பால்
ஒளிப்பதிவு: அர்விந்த் காஷ்யாப்
இயக்கம்: கிரன்ராஜ். கே.
பி.ஆர்.ஓ: நிகில் முருகன்
தொழிற்சாலையில் வேலை செய்யும் தர்மன் (ரக்ஷித் ஷெட்டி) தனது குடும்பத் தினரை விபத்தில் பறிகொடுத்ததால் யார் மீதும் அன்பு காட்டாமல் தனி மரமாக வாழ்கிறான். அவனை கண்டால் எல்லோ ருமே பயந்து ஒதுங்கி செல்லும் நிலையில் நாய்க் குட்டி ஒன்று அவனை தொடர்ந்து வருகிறது. அதை அவன் விரட்டியடித்தாலும் விடாமல் பின் தொடர் கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் நாய் மீது தர்மன் பாசம் வைக்க தொடங்குகிறான். நாளாக நாளாக இருவருக்கும் இடையே அன்பு பெருகி ஒருவரையொருவர் விட்டு பிரியமுடியாதளவுக்கு அன்பு செலுத்து கின்றனர். இந்நிலையில் அந்த நாய் கேன்சர் நோயால் பாதிக்கப்பட அதற்கு சிகிச்சை அளிக்கிறான். நாயின் கடைசி ஆசையான பனிமலையில் விளையாடு வது என்பதை நிறைவேற்ற அந்த நாயை சிம்லா அழைத்துச் செல்கிறான். பின்னர் காஷ்மீர் சென்று பனிமலையில் விடுகி றான். ஏற்கனவே கேன்சர் பாதிப்புக்குள் ளான சார்லி உயிர் பிரிவதற்குள் தனது எஜமானருக்கு கண்ணீர் மல்கும் நினைவு பரிசு விட்டுச் செல்ல திட்டமிடுகிறது. இதன் முடிவு என்பதை சுவாரஸ்யமாக படம் விளக்குகிறது.
வாழ்வே வெறுத்துப்போய் தனி மனிதனாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கும், நாய்க்கும் இடையே எழும் அதீத அன்பை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இப்படத் தில் தர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்ஷித் ஷெட்டியும், அவர் மீது பாசம் காட்டும் சார்லி என்ற நாயும் மனங்களை கொள்ளையடிக்கின்றனர்.
யாரை கண்டாலும் கடுப்படிக்கும் ரக்ஷித் ஷெட்டி முரட்டு ஆசாமியாகவே மாறி விடுகிறார். தன்னை தேடி வரும் நாய்k குட்டியை கூட துரத்தியடிக்கும்போது ரசிகர்களின் கோபத்தை சம்பாதிக்கிறார்.
நாய்க்குட்டி அடிபட்டு ரோட்டில் கிடப்பதை கண்டு மனம் இலகி அதற்கு சிகிச்சை அளிப்பதும் மெல்ல மெல்ல அதன் மீது பாசம்காட்டத் தொடங்குவதும் பரஸ்பர அன்புபரிமாற்ற மாகிறது.
சார்லிக்கு கேன்சர் வந்திருப்பதாக டாக்டர் கூறியதும் அந்த நாயின் மீதான அன்பு பலமடங்கு ரக்ஷித்துக்கு ஏற்படுவதும் பின்னர் நாயின் ஆசையை நிறைவேற்ற பனி மலைக்கு புறப்பட்டுச் செல்வதும் என காட்சிகள் சென்ட்டி மென்ட் டச்சுடன் நகர்கிறது.
“சார்லி, உனக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்” என்று ரக்ஷித் கேட்க அதற்கு சார்லி நாய் பார்வையில் பாசத்தை தேக்கிக்கொண்டு ரக்ஷித்தை நோக்கி சென்று அவரை கட்டிதழுவிக் கொள்வது உருக்கம்.
இரண்டாம்பாதியில் பனிமலையில் சார்லியும், ரக்ஷித்தும் துள்ளி விளையாடுவது குழந்தைகளை குதுகலப் படுத்தும். கிளைமாக்ஸில் சார்லியின் இறுதி நிமிடங்கள் அரங்கை அமைதியில் கட்டிப்போடுகிறது.
நாய் வளர்ப்பை கண்காணிப்பவராக வரும் சங்கீதா அவ்வப்போது ரக்ஷித்துக்கு ஆறுதல் கூறி தேற்று கிறார். இரண்டு காட்சியில் மட்டுமே வந்தாலும் நினைவில் பதிகிறார் பாபி சிம்ஹா.
அனிமல் டாக்டராக வரும் ராஜ் பி ஷெட்டி கொஞ்சம் காமெடியும் செய்து சிரிப்பூட்டுகிறார்.
ரக்ஷித் ஷெட்டி தயாரித்திருக்கும் இப்படத்தை கிரண்ராஜ் கே சென்டி மென்ட் டச்சுடன் இயக்கி உள்ளார். டாக்ஷோவில் ரக்ஷித் பேச்சை கேட்காமல் அவரை கேலிக்குள்ளாக்கும் சார்லி அடுத்தடுத்த நெகிழ்வான சைகைகள் செய்து அசரவைப்பது கண்களை குளமாக்குகிறது.
படத்தின் நீளம் ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது. கொஞ்சம் கத்தரி போட்டால் வேகம் கூடும்
நோபின் பால் இசையும், அர்விந்த் காஷ்யாப் ஒளிப்ப திவும் கூடுதல் பலம்.
777 சார்லி ஆறு முதல் அறுபது வரையிலான மனங்களை வெல்லும்.