படம்: கேர் ஆஃப் காதல்
நடிப்பு: வெற்றி,தீபன், மும்தாஜ் சொர்கர், அயிரா, கார்த்திக் ரத்னம், சுவேதா,
தயாரிப்பு: ஸ்ரீ சிருடி சாய் மூவிஸ் ஸ்ரீ மற்றும் காவ்யா
இசை: சுவேகர் அகஸ்தி
ஒளிப்பதிவு: குணசேகரன்
இயக்கம் ஹெமம்பர் ஜஸ்தி
ரிலீஸ்: சக்தி பிலிம் பேக்டரி
ஏதோ, இங்லிஷும் தமிழும் கலந்த டைட்டிலா இருக்கே எப்படி இருக்குமோ என்று அரங்கில் சென்று அமர்ந்தால் படம் தொடங்கிய சில நிமிடங்களில் எல்லோரையும் இருக்கையில் ஆணி அடித்தார் போல் அமரச் செய்துவிடு கிறார்கள்.
பள்ளிக்கூட காதல், சாராய கடை காதல், ரவுடி காதல், வயதான காதல் என 4 கிளை களாக கதை பிரிக்கப்பட்டா லும் எல்லாம் சேரும் இடம் ஒன்றுதான் என கிளைமாக் ஸில் இணைக்கும்போது ஆச்சரியம் பரவுகிறது.
பள்ளியில் பயிலும் அந்த மாணவன் சக மாணவி மீது அரும்பு காதல் கொண்டு அவளையே சுற்றி வர அதில் குறுக்கிடும் மாணவியின் தந்தை மகளை டெல்லியில் கொண்டு போய் அங்குள்ள பள்ளியில் சேர்த்துவிடுகிறார். சாரய கடை வாசலில் தினமும் வந்து நிற்கும் விபசார பெண்ணுக்கு குவார்ட்டரை கொடுத்து விட்டு அவளை காதலிப்பதும் அவளையே மணக்க முடிவு செய்வது மற்றொரு காதல், பிராமண வீட்டு பெண்ணை காதலிக்கும் ரவுடியின் காதல் ஒரு பக்கம், அரசு அலுவலகத்தில் வேலை
பார்க்கும் 49 வயதான ப்யூனுக்கும் அவரைவிட ஒன்றிரண்டு வயது குறைந்த கணவரை இழந்த 20 வயது மகளை கொண்ட தாய்க்கும் மலரும் காதல் என்று நான்கு வகை காதல் கடைசியில் என்னவாகிறது என்பதை எவ்வளவு எதார்த்தமாக சொல்ல முடியுமோ அவ்வளவு எதார்த்தமாக சொல்லி கிளைமாஸை முடிக்கும்போது அரங்கு முழுவதும் ஒரு சிரிப்பலை யை பவர விடுகிறார் இயக்குனர்.
பியூனாக தீபன்… ஞாபகமிருக் கிறதா..? முதல் மரியாதை படத்தில் அந்த நிலாவதான் கையில புடிச்சேன் பாடலுக்கு நடித்தாரே அந்த நடிகர்தான். 49 வயதான பியூனாக கல்யாணம் ஆகாத பிரமச்சாரியாக நடித்தி ருக்கிறார். சக மனிதர்களுடன் பழகும் எதார்த்தம், கிண்டல் செய்பவர்களை பற்றி கண்டு கொள்ளாமல் தன்வேலையை பார்க்கும் பாங்கு, அலுவலகத் தில் உயர் அதிகாரி அம்மை யாரிடம் மேடம் மேடம் என்ற அழைத்து பழகுவது என குறை காணமுடியாத முதிர்ச்சி யான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தீபனின் செயல்பாடுகளில் லயித்து கணவரை இழந்த அந்த பெண்மணி அவரை மணக்க முடிவு செய்வது இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போவது போன்ற காட்சிகளில் இயல்பான நகர்வுகள் என காட்சிகளை முத்துக்களாக கோர்த்திருக் கிறார் இயக்குனர்.
சாரய கடை காதல் ஒரு சரவெடி. தினமும் குவார்ட்டர் வாங்க வரும் பெண்ணை காதலிக்கும் தாடி வெற்றியின் இயல்பான வசனங்களில் உண்மை எதிரொலிக்கிறது. தான் காதலிப்பது ஒரு விபசாரி என்று தெரிந்தும் அவளையே மணக்க தயாராக இருக்கும் வெற்றி திருமணம் செய்யும் வரை அவரை தொழிலுக்கு சைக்கிளில் கொண்டு சென்று விடுவது புதுசு. விபசாரி வேடத்தில் நடித்திருக்கும் மும்தாஜ் சொர்க்கர் வேடத் துக்கு துணிந்ததுபோல் வசனத்துக்கும் துணிந்திருக் கிறார்.
ரவுடி காதலில் ஒரு ஆணவ கொலை விழுமோ என்ற சந்தேகம் எழுகிறது. அதையும் ஒருவழியாக தீர்த்து வைக்கும் இயக்குனர் பள்ளி பருவ காதலை கையாண்டி ருக்கும் விதம் கைதேர்ந்த இயக்கத் துக்கு சான்று. இயக்குனர் ஹெமம்பர் ஜஸ்தி சொல்லி யிருக்கும் இக்கதையில் ஏதோ ஒரு அனுபவத்தை எல்லோரும் பெற்றிருப்பார் கள் என்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்.
இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என எதையும் பிரித்துப்பார்க்க முடியவில்லை. எல்லாமே சம அளவில் இடத்தை தக்க வைக்கிறது.
கேர் ஆஃப் காதல் – எல்லோரையும் தொட்டுச் செல்லும்.