படம்: கிடா
நடிப்பு: பூ ராம், காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா,.லட்சுமி, பாண்டி, ஜோதி, ராஜு, கருப்பு, ஆனந்த், ஜெய்,, தேவா, சங்கிலி
தயாரிப்பு: ஸ்ரவந்தி ரவி கிஷோர்
இசை: தீசன்
ஒளிப்பதிவு: எம்.. ஜெயப்பிரகாஷ்
இயக்கம்: ரா.வெங்கட்
பி ஆர்.ஒ: சதீஷ் (AIM), சிவா
குடிசை வீட்டில் வசிக்கும் பூ ராம் தன் பேரன் மீது பாசம்.காட்டுகிறார். தீபாவளிக்கு புது டிரஸ் வாங்கி தர பேரன் கேட்க. வாங்கி தருவதாக வாக்கு தருகிறார். அதற்காக தெரிந்தவர்களிடம் பணம் கேட்கிறார். யாரும் தர மறுக்கின்றனர். மனம் நொந்த பூ. ராம், சாமிக்கு நேர்ந்து விட்ட ஆட்டை விற்று புது துணி வாங்கி தர முடிவு செய்கிறார். ஆடு.மீது பாசமாக இருக்கும் பேரன் அதை விற்க வேண்டாம் எனக்கு புது துணியே வேண்டாம் என்கிறான். அதை கேட்காமல் அந்த ஆட்டை காளி வெங்கட் வைக்கும் கசாப்பு கடைக்கு வெட்டுவ தற்காக விற்கிறார். இந்தநிலையில்.ஆடு திருடு போகிறது.அதைத் தேடி பூ ராம், காளி வெங்கட் திருடர்களை துரத்துகின்றனர். ஆட்டை கடத்தி சென்ற திருடர் களின் வேன் கவிழ்கிறது. இதில் ஆடு காணாமல் செல்கிறது. அடுத்து நடப்பது என்ன என்பதற்கு ருசிகர பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.
சமீப காலத்தில் திரைக்கு வந்த சில சிறு பட்ஜெட் படங்கள் மக்களின் மனதை வென்றது அந்த பட்டியலில் கிடா படமும் இடம் பிடிக்கும்.
தீபாவளிக்கு புது துணி கேட்கும் பேரன் மாஸ்டர் தீபனுக்கு எப்படியாவது துணி வாங்கி தர வேண்டும் என்று நண்பர் களிடம் கடன் கேட்கும் பூ ராம்.பணம்.கிடைக்காததால் விரக்தி அடைந்து வீட்டுக்கே செல்லாமல் எங்கோ ஒரு மரத்தடியில் தங்கி நேரத்தை போக்கி விட்டு இருட்டிய பிறகு வீடு திரும்புவது அவர் மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிக்காட்டுகிறது.
ஆட்டை விற்று புது துணி வாங்கி தர பூ ராம் முடிவு செய்வதை கண்டு அழும் தீபன் “எனக்கு புது துணி வேண்டாம் ஆட்டை. விற்க வேண்டாம்” என்று கெஞ்சு வது மனதை கனமாக்கு கிறது. சாமிக்கு. நேர்ந்து விட்ட ஆட்டை.கசாப்பு கடைக்கு விற்க முயலும் காட்சியே உடலை சிலிர்க்க வைக்கிறது.
கிடாவை திருடிக்கொண்டு திருடர்கள்.குட்டி யானை வண்டியில் தப்பிச் செல்லும் காட்சி விறுவிறுப்பு மட்டுமல்ல கலகலப்புமாக அரங்கை பரபரப்பில் ஆழ்த்துகிறது. இந்த ஆடு கடத்தல் கதைக்கு நடுவில் சின்ன காதல் கதையும் இழை யோட விட்டிருப்பது சுவை.
ஆடுவெட்டும் கசாப்புகா ரராக வரும் காளி வெங்கட் வேடத்தை நிறைவு செய் துள்ளார். ஊரெல்லாம் கறி தருவதாக ஆர்டர் பிடிக்கும் காளி வெங்கட் ஆடு தப்பிச்சென்றதும் என்ன பாடுபடப்போகி றாரோ என்ற டென்ஷன் அதிகரிக்கிறது. ஆனால் எந்த டென்ஷனும் இல்லாமல் காளி வெங்கட்,” பரவாயில்ல விடு” என்று சாதாரணமாக சொல்வது என்ன மனுஷன்டா என்று கேட்க வைக்கிறார்.
ஸ்ரவந்தி ரவி கிஷோர் தயாரித்திருக்கிறார். தீசன் இசையும், எம்..ஜெய பிரகாஷ் ஒளிப்பதிவும் சின்ன பட்ஜெட் படத்துக்கு பெரிதாக கை கொடுத்தி ருக்கிறது
இயக்குனர் ரா.வெங்கட் சிறுசிறு சம்பவங்களை மாலையாக கோர்த்து அவார்டும், ரிவார்டும் வெல்லும் கதையாக .இயக்கி அளித்திருக் கிறார்.
கிடா – விட்டுக்கொடுக்கும் நல்லவர்களின் தரிசனம்.