Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஜப்பான் (பட விமர்சனம்)

படம்: ஜப்பான்

நடிப்பு: கார்த்தி, அனு இம்மானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர்

தயாரிப்பு: எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு

இசை: ஜிவி.பிரகாஷ்

ஒளிப்பதிவு: எஸ்.ரவி வர்மன்

இயக்கம்: ராஜு முருகன்

பி ஆர் ஒ: ஜான்சன்

 

பெரிய நகைக்கடைகளில் சுவற்றில் ஓட்டை போட்டு கோடிக்கணக்கான நகை களை  கொள்ளையடிப் பதில் கில்லாடி ஜப்பான் (கார்த்தி). நகரில் பிரதான இடத்தில் இருக்கும் நகைக் கடையில் 200 கோடி மதிப்புள்ள நகை கொள்ளை போகிறது . ஜப்பானை போலீஸ் தீவிர மாக  தேடுகிறது.  ஆனால் அந்த கொள்ளையை நான் செய்யவில்லை என் பேரை பயன்படுத்தி வேறு யாரோ செய்திருக்கி றார்கள் என்று ஜப்பான் சொல்கிறான்   அதை போலீஸ் நம்ப மறுக் கிறது.  தானே அந்த கொள்ளையனை தேடும் வேலையில் ஜப்பான் இறங்குகிறான். இதற்கி டையில் போலீசார் அப்பாவி ஒருவனை பிடித்து அவன் மீது பழி போட்டு என் கவுன்ட்டர் செய்ய திட்டமிடுகிறது. இதையறிந்து ஜப்பான் அதிர்ச்சி  அடைகிறான். போலீசில் சரண் அடைந்து கொள்ளையடித்ததை ஒப்பக்கொள்வதுடன்  அப்பாவியை விடுவிக்கு மாறு சொல்கிறான். ஆனாலும் அவனை என்கவுன்ட்டர் செய்ய போலீஸ் அழைத்துச் செல்கிறது. இதன் முடிவு என்ன என்பது கிளை மாக்ஸ்.

ஹீரோவாகவே நடித்து நடித்து கார்த்திக்கு சலித்துவிட்டதோ என்னவோ  நெகடிவ் ஷேடுடன் கூடிய இப்படி யொரு பாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருக் கிறார். கேரக்டர்  ஷேடை மட்டுமல்ல குரலையும் வித்தியாசப்படுத்தி நடித்துள்ளார்.

அனாதை என்று சொல்லும் அளவுக்கு ஒத்தை ஆளான் கார்த்தி கோடி கோடியாய் நகை களை கொள்ளையடிப்பது ஏன் என்ற கேள்வி எழு கிறது. அதை கொண்டு போய் சுடுகாட்டில் புதைத்து வைக்கிறார்.  அம்மா பிணத்தை தோண்டி எடுத்து எலும்புக். கூடுக்கு நகைகளை கொட்டி அழகுபார்க் கிறார்.

சினிமா படம் எடுக்க கொள்ளையடித்த பணத்தை பயன்படுத்து கிறார் கார்த்தி. தன் படத்தில் நடித்த அனுவை காதலிக்கிறார். ஆனால் அனுவோ அவரை கழட்டி  விட்டுவிட்டு வேறு ஆட்களுடன் சுற்றுவதாக கார்த்திக்கு தகவல் வர அவரை உண்டில்லை என்று செய்ய அனு  நடித்துக் கொண்டிருக்கும் இடத்துக்கு சென்று அவரை கடத்திச் செல்கி றார்.

எதைப்பற்றியும் கவலைப் படாமல் நடிக்க வேண்டும் என்று இயக்குணர் சொல்லியிருப்பார் போலிக்கிறது லாஜிக் எதுவும் இல்லாமல் இஷ்டத்துக்கு நடித்து தள்ளி இருக்கிறார். கார்த்தி.

போதாக்குறைக்கு கார்த்திக்கு எய்ட்ஸ் இருப்பதாக ஒரு இடை செருகலை இயக்குனர் ராஜு முருகன் ஏன் செய்தார் என்று தெரிய வில்லை. முதல் பாதி முழுவதுமே ஏனோ தானோ என்று கதை செல்கிறது. பிற்பாதியில் கார்த்தி கொஞ்சம் உஷாராகிவிட்டதுபோல் தெரிகிறது.  தனக்கு பதிலாக அப்பாவி நபர் என்கவுன்ட்டர் செய்யப்படு வதை தடுக்க முயல்வது. மனதில் ஈரக் கசிவை உண்டாக்குகிறது.

கிளைமாக்ஸ்  கார்த்தி ரசிகர்களை கண்டிப்பாக திருத்திபடுத்ததாது.

அனு இமானுவேல் பார்பி பொம்மைபோல் அழுக்கு படாமல் நடித்திருக்கிறார். ஜித்தன் ரமேஷ் கார்த்தி யின் நண்பராக இருப்பது ஓ கே ஆனால் கார்த்தி போன்ற பெரிய ஹீரோக் களுக்கு ஜித்தன் ரமேஷ் வில்லன் என்பதெல்லாம் ஜீரணிக்க முடியாத விஷயம்.

கொஞ்சம் காமெடி,  கொஞ்சம் போலீஸ் என சுனில்  டபுள் விஷயங் களுக்கு பயன்பட்டிருக் கிறார்

பீஸ்ட் படம்  தொடங்கி சமீபகாலமாகவே சில இயக்குனர்கள்  வில்லன் தேர்வில்  இப்படி கோட்டை விடுவது ஏன் என்று புரிய வில்லை. இயக்குனர் ராஜூ முருகனின் எளிமை யான கதைக்கு கார்த்தி போன்ற பெரிய ஹீரோக்கள் செட்டாக வில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.

தான் சொல்ல வந்த சமுதாய கருத்துக்களை துணிச்சலாக  சொல்ல வேண்டும் என்று இயக் குனர் ராஜு முருகன் நினைத்தால் அவர் மீடியம் ஹீரோக்கள் அல்லது புதுமுக ஹீரோக்களை   கையாள்வதுதான் சரியாக இருக்கும் கார்த்தி போன்ற கமர்ஷியல் ஹீரோக்களை தன் இஷ்டத்துக்கு  அவரால் வளைக்க.முடியாது என்பது கதை போகிற போக்கில் தெரிகிறது.

ஜிவி பிரகாஷ் தன் பணியை சரியாக செய்திருக்கிறார். அதேபோல் ஒளிப்பதி வாளர் ரவிவர்மன்  கலர்ஃபுல்லாக காட்சி களை படமாக்கி இருக்கிறார்.

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம்  நல்ல ஸ்கிரிட்டை தேர்வு செய்து படமாக்கும் என்ற நம்பிக்கையை விதைத்தி ருக்கிறது. இந்த படத்தில் அது எப்படி மிஸ் ஆனது என்று தயாரிப்பாளர்கள்  எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபுவிடம் தான் கேட்க வேண்டும்.

ஜப்பான் – தீபாவளிக்கு டிசைன் டிசைனாக சட்டை வாங்க வேண்டுமென் றால் பார்க்கலாம்.

 

 

 

 

 

Related posts

Yuvan Shankar Raja hank everyone who responsible for the success of MAANAADU:

Jai Chandran

Shah Rukh Khan fans excitement for ‘Jawan’*

Jai Chandran

பயணிகள் கவனிக்கவும் (பட விமர்சனம் )

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend